Saturday, July 8, 2023

Vedic secrets

 பரிபாஷை



நமது முன்னோர்கள் பெரும் யோக ரகசியங்களை வெளிப்படையாக சொல்லி விட்டு தான் சென்றுள்ளார்கள்.


ஆனாலும் அந்நியர் படையெடுப்பு மற்றும் அவர்கள் நமது சாஸ்திரங்களை களவாடிக்கொண்டு போய்விட்டனர் என்பதும் மறுக்க முடியாது.


இங்கே இப்படத்தில் காண்பிக்கப்பட்டது எது பற்றிய ரகசியம்?


இப்படத்தில் பெரும் ரகசியம் வெளிப்படையாக உள்ளது. வாசியின் எண் ரகசியம் அறிந்தார் வெளிப்படையாக சொல்லலாம்.


ஆனாலும் இங்கே பலர் பணத்திற்கு விற்க முற்பட்டு விட்டனர். அந்நியர்களோ அதற்கும் முன்னரே திருடிச்சென்று விட்டனர்.


புஜண்ட மாமுனிவர் தனது பாடலில் 4ம் 8ம் சேர கபடமற்ற தேகமாமே என்று உரைத்து உள்ளார்.

அகத்தியர் பெருமான் இரு நான்கும், நான்கும், 16ம் சேர பூரணம் என்றுரைத்து சென்றுள்ளார்.

இப்படத்தில் 4 -- என்பது "பார்வையை" குறிக்கிறது.

8  -- என்பது "மன எண்ணம்"  என்பதை குறிக்கிறது.

16  --- என்பது "கேட்டல்" என்பதை குறிக்கிறது.

மேலும் 32, 64 முறையே சுவை மற்றும் உணர்வு இவற்றை குறிக்கிறது.

பலர் இந்த 16, 32, 64 இவை பிராணாயாம நேர கணக்கீடு என்றே புரிந்துள்ளனர். உண்மையில் அவ்வாறு அதிக நேரம் மூச்சை நிறுத்தினால் நோய் தான் வரும்.


அவற்றின் உண்மை வெளிநாட்டில் சிக்கி உள்ளது.

இது என்ன வெனில் "manifestation technique", அதாவது எண்ணங்களை, இப்புற உலகில் பொருளாக பரிணமிக்கசெய்வது பற்றிய ரகசியம்.

இவற்றை நம் யோகிகள் அறிந்து மறைபொருளாக வைத்துள்ளனர்.


அதாவது ஒரு மனிதனின் எண்ணமும், கேட்கும் பொருள் பற்றிய தெளிவும், அதன் மேல் சரியான தனது கண்ணோட்டமும் (8,16,4) ஒரே நேர்கோட்டில் குவியும் போது கேட்டது கிடைக்கும் என்பதே.


ஆனால் இப்படி சரியாக குவிக்க மனம் நந்நிலையில் இருந்தால் சாத்தியம். முயற்சி செய்து பார்க்க தான் தெரியும். நானும் இங்கே தேடலில் இருப்பவன் தான்.


16,32,64 வினாடி மூச்சை நிறுத்தி பயிற்சி செய்ய விழைவோர் கொஞ்சம் இதை கவனிக்க.

Parvathamalai Adivaaram Farm land Dr.V.Suresh

Parvathamalai Adivaram is a famous mountain foothill located near Kadaladi and Thenmadhimangalam villages in Kalasappakkam taluk of Tiruvann...