Friday, February 24, 2023

Who is God Tamil

 "இறை ஆற்றல் எல்லாமாக இருக்கிறது. எனவே எனக்கும் இறையாற்றளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. அதே மகாசக்தியாகிய இறையாற்றல் சங்கிலிப்பிணைப்பாக நானுமாகவும் இருக்கிறது.  அந்த சங்கிலிப்பிணைப்பாகிய அதன் ஒரு முனை தான் 'நான்'. இன்னொரு முனை தான் அந்த தெய்வீகப் பேராற்றல் என்று எண்ணும் போது அந்தச் சங்கிலியைப் போட்டு விட்டு அவரை எங்கே போய்த் தேடினால் கிடைப்பார்?


"கடவுள் + (ஆணவம், கன்மம், மாயை ) = "மனிதன்".

"மனிதன் - (ஆணவம், கன்மம், மாயை ) = "கடவுள்".

God + Impurities = Man;

Man - Impurities = God".


இதுவரையில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன் தனது மூலம் என்ன என்று தன்னையே திரும்பிப் பார்க்கிற நிலையே அறிவின் உயர்ந்த நிலை. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்ந்த நிலை "ஆறாவது அறிவு".


பார்ப்பவன் யார் எனப் பார்ப்பவன் தான் பார்ப்பனன் - யோகி.

அதற்கும் மேலாக பிரம்மத்தை அறியும் போது பிராமணன் எனப்படுகிறான்.


எல்லாம் இறைநிலைதான். நானும் இறைநிலைதான்... என்று சொல்லிக் கொண்டு அதை வாழ்க்கையில் பயன் படுத்தாவிட்டால் அதை வறட்டு வேதாந்தம் என்று கூறுவார்கள்.


எல்லாப் பொருட்களிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் இறை நிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலே உயர்வு பெற வேண்டும்.


அன்பு வேறு இறைநிலை வேறு அல்ல. "உண்மையிலேயே மெய்ப்பொருளை உணரும் போதுதான் கருணை பிறக்கும்".

Monday, February 13, 2023

Atma zhanam

 .      வின்னையும் தான்டும் ஆத்மஞானத்தின் மகிமை 

      ஆத்ம ஞானத்தின் பெருமையும், மகிமையும், நன்மையும் எண்ணில் அடங்காதவை !!!

       சில சூழ்நிலைகளில் மனிதனுக்கு எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு, அவனுக்கு "எதிர்பார்க்க முடியாத *உச்சகட்ட துன்பமும்* அனுபவிக்க நேரிடுகிறது !!!

     போர்க்களத்தில் செய்வதறியாது தவிக்கும் நிலை, அர்ஜுனனுக்கு  ஏற்பட்டது போல, *நாமும் சொல்லெனாத் துயரை அனுபவித்த* பின்னரே  ஆத்ம ஞானத்தை பெறுகின்ற *தகுதியை* அடைவோம் !!!

     எனவே, *இறைவன் தரும் பெருந்துன்பங்களை விருப்பமுடனும் பொறுமையுடனும் ஏற்க கற்றுக் கொள்ள வேண்டும்" !!!

ஆத்மஞானமே மனித லட்சியம் :

------------------------------------

       *ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும், கௌரவமான உத்தியோகம் கிடைத்திருந்தாலும், நல்ல மனைவி பிள்ளைகள்  கிடைத்து இருந்தாலும்*, அவ்வளவு ஏன்? ... *வேறென்ன வெல்லாமோ கிடைத்து இருந்தாலும்*, இன்னும் சொல்லப்போனால், உலகளவில் முதல்நிலை பணக்காரனாக இருந்திருந்தாலும் கூட , அவன் ஆத்ம ஞானத்தை பெற வில்லை என்றால், அவன் வாழ்வின் இறுதிவரை கவலைகளோடு தான் வாழ வேண்டும் !!! அவன் மீண்டும் பிறவா வரம் பெற முடியாது !!! பிறவிப் பயனையும் அடைய முடியாது !!! 

       *அதுமட்டுமல்ல !!! கோடி கோடி மாந்தர்கள் ஆத்ம ஞானத்தை அடையாமலே மரணிக்கிறார்களே அவர்களும், மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!! மனிதப் பிறவியில் ஒரு முறை மரணிப்பதற்கே இவ்வளவு பயப்படுகின்றோமே !!! ஆனால், 21 லட்சம் வகையான விலங்கு பிறவிகளிலேயும் 21 லட்சம் தடவை, பிறந்த பிறந்து மீண்டும் மீண்டும் இறந்து இறந்து மரணிக்க வேண்டி வருமே, அந்த சரீர கஷ்டத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா? பிறவா வரம் பெறுவதற்கு மட்டுமே மனித பிறவி எடுத்து வந்துள்ளோம் என்று நாம் உணர வேண்டும் !!!

       *ஒருவன் நற்குணங்களோடும் உண்மையான பக்தியோடும் சிறந்த ஆன்மிகத்தோடும் இறைவனை தினமும் வழிபடுபவனாக இருந்தாலும் கூட , மொத்தத்தில், அவன் மிக மிக நல்லவனாக வாழ்ந்திருந்தாலும் கூட அவன் சேர்த்து வைத்த புண்ணியங் களை தீர்ப்பதற்காகவாவது அவன் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!!*

       *ஆத்ம ஞானத்தை அடையாத காரணத்தால், அந்த நல்லவனும் கூட , இவ்வுலகத்தாரை போல, இறக்கும் வரை கவலையோடு தான் வாழ வேண்டும். உடலை விட்ட பின்பும் மறுபிறவி எடுக்க செல்ல வேண்டும். மொத்தத்தில், அவன் மனிதனாகப் பிறந்தே பயனில்லை !!!

ஆத்மஞானம் யாருக்கு கிட்டும் ?

-----------------------------------

      மது, மாது, சுவையான-உணவு, எப்போதும்-உறக்கம், போதை, மயக்கம் என புலனின்பங்களில் மூழ்கி இருப்போருக்கு  எந்த ஞானமும் நிச்சயம் தித்திக்காது !!!

       அதே சமயம், *ஆத்ம ஞானத்தை அறிய வேண்டும் என்கிற ஆவலும் விருப்பமும் கூட  அவ்வளவு சுலபமாக ஒருவனுக்கு வந்து விடுவதில்லை !!!*

       Basically, *நற்குணங்களோடு நல்லவர்களாக வாழ்பவர்களில் சிலருக்கே ஆத்மஞானம் அடைய வேண்டும் என்கிற விருப்பம் வரும் !!!*

       *அந்த சில நல்லவர்களில், ... எந்த ஒரு சிலர், இவ்வுலகத்தின் மீதும் இவ்வுலகத்தார்கள் மீதும், 'எந்த வெறுப்பும்' இல்லாமல் இருக்கின்றாரோ அவரே, ஆத்ம ஞானம் பெறத் தகுதியுள்ளவன்*

ஆத்மஞானம் ஏன் மனிதனுக்கு தேவை?

--------------------------------------

       *ஆத்ம ஞானத்தை பெற வேண்டும் என்கிற காரணத்திற்காகவே நாம் மனிதனாக பிறந்து இந்த பூமிக்கு வந்திருக்கிறோம் !!!*

       *ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

      விளக்கம் : தம்முள்ளே உட்கலந்த உயிரான, இறைவனை, அறிவதன் மூலம், மீண்டும் பிறவா நிலை பெறுவதை விட்டுவிட்டு, மனிதர்கள், அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

      கோடிக்கணக்கான மக்கள் ஆத்ம ஞானத்தை அடையாமல் நம் கண் முன்னே இறந்து கொண்டே இருக்கின்றார்கள் !!! அவர்கள் யாவரும் மனித பிறவியை வீணாக்கியவர்கள் !!!

       *உண்டு-உறங்கி, உடல் வளர்த்து,  விலங்கு போல மடியும்  எண்ணற்ற மானிடர்களைப் போல, நீயும் உனது மேன்மையான மனிதப் பிறவியை  வீணாக்க கூடாதல்லவா*?

ஆத்ம ஞானத்தைப் பெற தகுதி :

----------------------------------      

      பகவத் கீதை பற்றிய கருத்துக்களை கொண்ட எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்தமானதாய் இருப்பதன் மூலம், நீங்கள் ஆத்ம ஞானத்தை பெற தகுதி உள்ளவர்கள் என உணர வேண்டும் !!!

       *கவலையற்று வாழ வேண்டுமா? நிரந்தர சந்தோஷத்தோடு வாழ வேண்டுமா?, பிறவிப் பயனைப் பெற வேண்டுமா*?  ஆத்ம ஞானத்தை அடைவதே மனித இலக்கு என உணர்ந்து அதை அடைய முற்படுவோம் !!!*


ஆத்மஞாணி பெறும் நன்மைகள் :

------------------------------------

      *உயிர் எனப்படும் ஆன்மாவின் மேன்மையான ஞானங்களே அதைப் பெற்றிருக்கும் ஞாணியின் நன்மைகள்*

      *நிலநீர் தீக்காற்றாகாயம் என ஐம்பூதங்களாலும் ஆத்ம ஞானியை வீழ்த்த முடியாது !!! ஏனெனில்

 ஆத்மாவை யாராலும் எதனாலும் 

 அழிக்க முடியாது" !!! 

      *வீழ்த்த முடியாத ஆத்மஞாணிக்கு எதிரிகளே இருக்க முடியாது* !!! 

      *எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு  பயமில்லை*!!!

      *எதற்கும்  பயப்படாத ஆத்மஞாணிக்கு எந்த கவலையும் இல்லை* !!!

      *கவலையற்ற ஆத்மஞாணி நிரந்தர சந்தோஷத்தில் இருப்பான்*.

      *நிரந்தரமாக என்றும் இருக்கின்ற ஆத்மஞாணிக்கு மரணமே இல்லை* !!!

      *மரணமில்லாத ஆத்மஞாணிக்கு மரணபயம் எவ்வாறு இருக்க முடியும்* ?

      *ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாத" ... *எதிரிகளே இருக்க முடியாத* ... *பயமில்லாத*... *கவலையற்ற* ... "மரணமற்ற* ... *மனிதனாக உன்னை நீ உணர வேண்டுமா*?

      *அதற்கு நீ செய்ய வேண்டிய தெல்லாம் ஆத்மாவின் ஞானங்களை அறிய வேண்டும். அத்தனை ஞானங்களையும் தன் ஞானங்களாக உணர வேண்டும் !!! உணர்ந்த ஞானங்கள் மனதில் நிலைக்க வேண்டும் !!! நிலைத்தபின், நீயே ஆத்மஞாணி* !!! 

*ஆத்ம ஞானத்தின் மகிமை* !!!

-------------------------------

      மனிதன் எந்த ஞானத்தை பெற்றாலும் அதைவிட சிறப்பான ஒரு ஞானம்  இருக்கத்தான் செய்கிறது !!!

      மனிதன் எவ்வளவு எண்ணிக்கையில் ஞானத்தைப் பெற்றாலும்,  மேலும் அடைவதற்கு  ஞானங்கள் இருக்கத்தான் செய்கிறது !!!  *கற்றது கைமண்ணளவு அல்லவா*?

*ஞானங்களில் சிறந்தது ஆத்மஞானம் : 

      *மனிதனுக்கு கிடைப்பதற்கரிய ஞானங்கள் *அத்தனையிலும், பிரதானமானது ஆத்ம ஞானமே !!!*

      *எந்த ஒரு ஞானத்தை  நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை  என்கிற மனநிறைவை உனக்கு  தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும்" !!!

      எந்த ஒரு ஞானத்தை  நீ பெற்றால், *உன்னை ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாதோ* ... 

      *எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு எதிரிகளே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு பயமே இல்லையோ* ...

       "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு கவலையே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு மரணமே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு மரணக் கவலையே/ மரணபயமே  இல்லையோ* ...  "அதுவே ஆத்மஞானத்தின் பலனாகும்" !!!

எதுதான் அந்த ஆத்மஞானம்?

-------------------------------

      அதெல்லாம் இருக்கட்டும் !!! ஆத்மாவைப் பற்றிய அந்த ஞானம்தான் எது ? இதுதானே உங்கள் கேள்வி ?

      எனக்கு எப்போதும் கவலையற்ற நிலையை தருகின்ற அந்த ஆத்ம ஞானம் தான் எது?

     மீண்டும் பிறவா வரத்தை தருகின்ற அந்த ஞானம் தான் எது?

     மனிதனாகப் பிறந்து இருக்கின்ற இந்த மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கு உதவுகின்ற ஞானம் எது?

      இதுதானே உங்கள் கேள்வி?

      பசித்தபின் உண்ணும் உணவில் தான் சுவை இருக்கும் !!!

      *ஆத்ம ஞானத்தைக் பெற்றே ஆக வேண்டும் என்கிற தாகத்தை உங்களுக்குத் தந்து, தங்கள் அறிவுப் பசியை இப்போது தூண்டி இருக்கின்றேன் !!!*

      

Thursday, February 9, 2023

Sithargal secrets About human body

 சித்தர்களின் பாடல்களில் அவர்கள் ரசனையைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை. எளிய சொற்களுக்குள் உலகத் தத்துவங்களையே மறைபொருளாக வைத்து அவர்கள் பாடுகிற பாங்கு அற்புதத்திலும் அற்புதம்....


இந்த உடலைக் குறித்து சொல்லும் போது,
         பராபரத்தில் பரம் தோன்றி,
         பரத்தில் சிவம் தோன்றி,
         சிவத்தில் சக்தி தோன்றி,
         சக்தியில் நாதம் தோன்றி,
         நாதத்தில் விந்து தோன்றி,
         விந்துவில் சதாசிவம் தோன்றி,
         சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி,
         மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி,
         ருத்திரனில் விஷ்ணு தோன்றி,
         விஷ்ணுவில் பிரம்மா தோன்றி,
         பிரம்மாவில் ஆகாயம் தோன்றி,
         ஆகாயத்தில் வாயு தோன்றி,
         வாயுவில் அக்னி தோன்றி,
         அக்னியில் அப்பு தோன்றி,
         அப்புவில் பிருதிவி தோன்றி,
         பிருதிவியில் அன்னம் தோன்றி,
         அன்னத்தில் ரஸம் தோன்றி,
         ரஸத்தில் உதிரம் தோன்றி,
         உதிரத்தில் மாமிசம் தோன்றி,
         மாமிசத்தில் மேதை தோன்றி,
         மேதையில் அஸ்தி தோன்றி,
         அஸ்தியில் மச்சை தோன்றி,
         மச்சையில் சுக்கிலம் தோன்றி,
         சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது....

சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து
ஜலமயமாகிப் பின்
(1) ஏழாம் தினத்தில் குமிழியாகி,
(2) முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி,
(3) அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு அச்சு (சிரசு)உண்டாகி,
(4) தொண்ணூறாம் நாள் மாமிசம் திரண்டு மூட்டு (கை, கால்கள்) உண்டாகி,
(5) நூற்று இருபதாம் நாள் தண்டமாய்
நரம்பு, நாடி(கை, கால்களில் விரல்கள்) உண்டாகி,
(6) நூற்றி ஐம்பதாம் நாள் நவத்துவாரங்களும் உண்டாகி,
(7) இரு நூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கர்பத்தை சூழ்ந்து புரளும்.
(8) இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி நீட்டி, முடக்கி, தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு, பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
(9) இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி, அறிவுக் கண் திறந்து,
(10) முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல், நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே
பூமியில் ஜெனிக்கும் குழந்தை, நாடி, நரம்பிகளும், ஆறாதாரமும்,? ஐந்தெழுத்தும்,
ஐம்பத்தோரு அட்சரமும், பஞ்சபூத
தேவதைகளும் தூலச் சூக்குமத்துள்ளே
கொழுந்துவிடப் பேதையாம்......

கருவானது தன் செவ்விய இளங்காலை
முடக்கித் தலையுடன் சேர்த்து, ஓம் வடிவமாக
அமைந்திருக்கும் கருப்பைக்குள் சுமையாக
நின்று, வெளியேறத் திருவுள்ளங் கொண்டு,
முந்தித் தவம் கிடந்து, அன்னையின் வயிற்றில் நீங்கும் சுமையாகக் காத்திருக்குமாம்.....

இதையே திருமூலர்,
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
                 - பாடல் எண் 452.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில், எட்டாம்
தந்திரத்தில் இடம் பெற்றுள்ள "காயப்பை'
என்னும் பாடலில் பல நுட்பங்கள்
அடங்கியுள்ளன.

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.
               - பாடல் எண்2122

நம் உடம்பில் பல்வேறு "பை'கள் உள்ளன.
அவற்றுள் முதல் பை காயப்பை. அதாவது, புற
உடம்பாகிய தூல உடம்பைக் காயப்பை என்பர்.

அவற்றுள் இரண்டாவது பை மாயப்பை. மாயம்
என்பதற்கு மறைந்து எனப் பொருள் கொண்டு
மறைந்திருக்கும் சூக்கும உடம்பு என்பர்.
மூன்றாவது ஆனந்த மயகோசம் என்கின்ற
மற்றுமோர் பையாகும்.

இந்தப் பாடலில் வந்துள்ள சரக்குப்பலவுள
என்பதன் விளக்கத்தைத் திருமூலர் "இரதமும்'
எனத் தொடங்கும் பாடலில் (2125)
குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரதமும்,
உதிரமும், இறைச்சியும், தோலும், மேதையும்,
அத்தியும், வழும்பும், மச்சையும்,
சுக்கிலமும் ஆகிய ஒன்பதும் காயப்பையில்
உள்ள ஒன்பது சரக்குகளாம்.

(1) இரதம் - உண்ட உணவின் சாரம்
(2) உதிரம் - இரத்தம்
(3) இறைச்சி - உதிரம் பரவுவதற்கு இடமான
தசையும் நாரும்
(4) தோல் - ஊனை உள்வைத்துப் பாதுகாப்பாய்
மூடியிருப்பது
(5) மேதை - அறிவு விளக்கத்திற்குப்
பயன்படும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள
வெள்நிணம். இது நீர்மையானது. (சிலர்
கொழுப்பு என்பர்)
(6) அத்தி - எலும்பு
(7) வழும்பு - நிணத்திலிருந்து ஊறும்
வெண்மையான நீர்
(8) மச்சை - எலும்புக்குள்ளே ஓடும்
வழுவழுப்பான திரவம்
(9) சுக்கிலம் - வெண்ணீர் (பெண்களுக்குள்ள
சுரோணிதம்)

காயப்பை என்னும் தூல உடம்பில் உள்ள
ஒன்பதும் சரக்கும் சேர்ந்து உடல் எனக்
கொள்ளப்படுகிறது

ஏழு தாதுக்கள் என்பது  எதனால்?
உணவிலிருந்து,
ரத்தத்திலிருந்து மாம்ஸம்,
மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,
நரம்பிலிருந்து எலும்புகள்,
எலும்பிலிருந்து ஊன்,
ஊனிலிருந்து சுக்ரம்,
            இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம், சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.பிஅதை இயக்குமிடம்
இதயம். இதயத்தினுள் ஒரு அக்னி
உள்ளது. அதில் பித்தமும், பித்தத்திலிருந்து
வாயுவஜம் தோன்றுகிறது. அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது. இது இறைவனின் நீதி.

யஜுர்வேதம்
…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால்
ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.
ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.
இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.
மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.
ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.
ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு கண்கள், காதுகள்  உண்டாகின்றன.
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.
      தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும், தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும், இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும்
ஆகிறது. மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

யஜுர்வேதம்….. கர்ப்போபநிஷத் 3கர்பத்தில்
இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது
மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன. அப்போது
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும், பாபச்செயல்களையும்
உணர்கிறது. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும், பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்பட்டும், பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.
         திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.

நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன். யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான். பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.

அறு கோண நட்சத்திர சிவ தத்துவம் (contemporary shape of shivalinga) இதை உருவாக்கியவர் முருகன், இதைத்தான் சிவனுக்கு உபதேசித்ததாக கூறுவர். இதனால் தான் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார், விந்துவை யோக சக்தி (metaphysics) யால் உணர்ந்து அதன் வடிவத்தில் தான் வேல் உருவாக்கினார். அதனால் தான் வேல்தன்.. வேந்தன் என்றழைக்கப்பட்டார்... காமம் இல்லாமல் முனிவர்களின் பிறப்பேது?, எல்லாமே இறை என்றபின் முகம் சுழிக்க வேண்டிய எண்ணம் எப்படி ..




Ladies finger Benefits

 

*வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!* 

💫💫💫💫✨💫💫💫💫


"வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப் பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம். வெண்டைக்காயில் வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்ற சத்துக்கள் இருக்கின்றன. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது. 


‘கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

‘வாயோ வெண்டைக்காய், கையோ கருணைக்கிழங்கு...’ என்று ஒரு பழமொழி உண்டு. வெண்டைக்காயைப்போல வளவளவென்று பேசி கருணைக்கிழங்கைப் போல எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறது இந்தப் பழமொழி. வெண்டைக்காய் வளவளப்பானது மட்டுமல்ல, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அற்புத மருத்துவத்தன்மை நிறைந்தது. 


வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். 


 *வெண்டைக்காய் தண்ணீர் செய்முறை:* 


இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருக வேண்டும். வெண்டைக்காய் நீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.


 *எலும்புகள் வலிமை பெற:* 


நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத் திரவத்தை அருந்தினால் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும். இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) பாதிப்பைக் குறைக்கிறது. எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.


 *இரத்தசோகை குணமாக:*  

 

வெண்டைக்காயில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இது இரத்தசோகையை குணப்படுத்துகிறது. இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் இரத்த செல்கள் உற்பத்தி ஆகின்றன. அதுபோல இரத்தசோகை வராமல் தடுக்கிறது.


 *வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய:* 

 

இந்த வெண்டைக்காய் நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை (Toxins) நீக்கி உணவு செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் செய்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. 


மேலும் இந்த நீர் பசி உணர்வை தூண்டுகிறது. பசி எடுக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த நீரை குடித்து வந்தால் நல்ல பலனளிக்கும்.


 *தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றது:* 


தொடர் இருமல் வரட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.


 *நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைய:* 


வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, வெண்டைக்காய் நீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.


 *சுவாசக் கோளாறுகள் நீங்க:* 


வெண்டைக்காய் ஊறவைத்த நீர் சுவாச பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவதால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகிறது. 

வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். 


 *இதய நோய்களை தடுக்க:* 


வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். 


 *பெருங்குடலை சுத்தம் செய்ய:* 

 

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும். பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலைப் போக்கி, குடலைப் பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.  


 *கண்பார்வை மேம்பட* :


வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வைக் குறைபாடு நீங்கும். வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது.


மேலும் வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும்.


 *குறிப்பு* :


“வெண்டைக்காயில் ஆக்சலேட்  அதிகமுள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். கல் பிரச்னையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். லேசாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்” என்கிறார் இயற்கை மருத்துவர் ஜீவா சேகர்.


.


“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” 


என்று கூறுகிறது திருக்குறள். எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

Wednesday, February 8, 2023

Human cells secrets

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 


"#செல்லுக்குள்_செல்வோமா "

( உடல் செல்களின் உள்ளே ஒரு பயணம்)


ஆச்சர்யத்தை அள்ளி தரும் உலகின் பல விஷயங்களில் இந்த உடலும் ஒன்று. உற்று பார்த்தால் உடலில் இருக்கும் பல கட்டமைப்புகள் பிரமிப்பை உண்டு பண்ணும்.

உதாரணமாக ஒரு மனிதனின் உடலில் உள்ள மொத்த DNA வை எடுத்து அந்த நூலை நேராக நீட்டி வரிசையாக வைத்தால் அது பூமியில் இருந்து சூரியன்  சென்று மீண்டும் பூமி வந்தால் எவ்வளவு தூரம் இருக்குமோ..அந்..த ... தூரம்... (இருங்க அவசர படாதீங்க.. )அந்த தூரம்.. அதை விட கிட்ட தட்ட ஒரு 300 மடங்கு அதிகம் தூரம் இருக்குமாம்...( அல்லது கிட்ட தட்ட மொத்த சூரிய குடும்ப தொலைவை போல இரு மடங்கு என்று சொல்லலாம்..'எம்மாடி..' )

DNA வில் நாம் மெமரியை பதிய முடியும் எனில் ஒரே ஒரு கிராம் DNA வில் நாம் உலகின் மொத்த டேட்டா வை சேகரித்து வைக்க முடியும். இப்படி நிறைய ஆச்சர்யங்களை சொல்லி கொண்டே போகலாம்.


"செல் " படம் வரைந்து பாகம் குறித்த பள்ளி நினைவு நம் அனைவருக்கும் இருக்கும். இன்று மீண்டும் ஒரு முறை செல் என்பதை பற்றி அதில் உள்ள உறுப்புகள் பற்றி...அது செயல் படும் விதம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம் வாருங்கள்..


🎯   🎯  🎯 


முதலில் செல் என்பது என்ன ? ஒரு கட்டிடம் செங்களால் ஆனது என்பதை போல ஒரு உயிருள்ள உடல் எனும் கட்டுமானம் செல் எனும் செங்கல் அடுக்குகளால் ஆனது. 

உலகத்தில் உள்ள தாவரம் விலங்கு மனிதன் பூச்சி எல்லாமே இப்படி தான். ஆனால் எல்லா செல்களும் ஒன்றை போலவே இருக்குமா என்றால் இல்லை. தாவர செல்கள் கொஞ்சம் மாறு பட்டவை. உதாரணமாக தாவர செல்களில் cell wall  என்று ஒரு மேலடுக்கு பாதுகாப்பு இருக்கும். (தாவர உடல் கடினமாக இருக்க காரணம் இது தான் ) அது எந்த விலங்கு  செல்களிலும்  இல்லை.  சூரிய ஆற்றலை நேராக இழுத்து சக்தியாக மாற்றும் சிறப்பு அமைப்பு தாவர செல்லில் உண்டு அதுவும் விலங்கு செல்லில் இல்லை.


 இப்படி வேற்றுமை இருக்கும் அதே நேரத்தில் உலகில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொருந்தும் படி சில ஒற்றுமைகள் இருக்கின்றன.  உதாரணமாக அனைத்து செல்லிலும் cell membrane இருக்கும் (செல்களை தன்னை சுற்றி உள்ள சுற்றுசூழலில் இருந்து பிரித்து வைக்கும் கவசம் ) அடுத்ததாக cytoplasm என்ற ஒரு ஜெல் அமைப்பு இருக்கும் (செல் பூரா நிரம்பி இருப்பது இது தான். செல்களின் பாகங்கள் இதில் தான் மிதந்து கொண்டு இருக்கும் )

அப்புறம் ஜெனடிக் மெடிரியல் இருக்கும் (உதாரணம் DNA இவைகள் தான் அந்த சம்பந்த பட்ட உயிரியின்  மரபு பற்றிய தகவல்களை தாங்கி இருக்கும் ) 


சரி இப்போதைக்கு விலங்கு செல்கள் பற்றி மட்டும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.


      🧬 🧬   விலங்கு செல்லில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று சிக்கலான அமைப்பு நிறைந்த மேம்பட்ட செல்கள். அதாவது நாய் பூனை எலி பூச்சி யானை மனிதன் என்று அனைத்திலும் இருக்கும் செல்கள். (தாவர செல்கள் கூட இந்த வகையில் தான் சேரும் ) இவற்றிற்கு பெயர்" Eukaryotic cell "  .

இந்த வகை செல்கள் பல  உள் உறுப்புகளை... செல் உறுப்புகளை கொண்டு இருக்கும் இந்த உறுப்புகளை  "organells " என்று அழைக்கிறோம்.மனித உடலில் எப்படி organs இருக்கிறதோ அப்படி செல்லின் உடல் பாகங்கள் தான் ' organells '. இதை தவிர இந்த வகை செல்கள் ஒரு உட்கருவை கொண்டு இருக்கும் (nucleus ).  மற்றும் மேலும் சில சிறப்பு பாகங்களை கொண்டு இருக்கும்.


இராண்டாவது வகை செல்கள் prokaryotic cells என்று அழைக்க படுகின்றன. (இரண்டு வகை செல்களில் மூத்தது இது தான்.. இதில் இருந்து தான் யூகிரியாடிக் செல்கள் பிற்காலத்தில் பரிணாமம் அடைந்தது.. )

இவைகள் முந்திய வகை அளவு சிக்கல் இல்லாதவை. நியூக்ளியஸ் எனும் உட்கருவோ அல்லது membran போர்வையால் போர்த்த பட்ட உள்ளுறுப்புகளோ இல்லாதவை . (ஆனால் இவற்றிலும் கூட மரபணு சங்கதிகள் மட்டும் இருக்கும் ) இவைகள் எப்போதும் ஒரு செல் உயிரியாக இருக்கும் (உதாரணம் வைரஸ் )  இவைகள் unicellular organisms என்று அழைக்க படுகின்றன.


சரி நாம் இப்போது Eukaryotic cell கள் பற்றி பார்க்கலாம்..

(இந்த யூகேரியொட்டிக் செல்கள் 4 வகையாக பிரிக்கிறார்கள்.. Animalia, plantae, fungi, protista பெயர்களை வைத்தே அவைகள் பிரிக்கப்பட்ட காரணம் புரிந்திருக்கும் ) 


இதில் இப்போது நாம் பொதுவாக விலங்கு செல்களில்  உள்ள பாகங்கள் (organells ) மற்றும் அவைகள் செயல்படும் விதம் பற்றி மட்டும் பார்க்க போகிறோம்.


உடம்பில் உள்ள பல கோடி கோடி செல்களில் ஒவ்வொரு 'செல்'லும் ஒரு தனி தொழிற்சாலை எனலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு செல்லிலும் விஷயங்கள் நடக்கின்றன. 

🎈ஒரு பெரிய நிறுவனத்தில்  இருப்பது போல ஒரு செல்லிலும் கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கிறது. 

🎈ஒரு தொழிற்சாலையில் இருப்பதுபோல 'செல்'லிலும் ஒரு ஆற்றல் மூலம் (power sorce ) இருக்கிறது. 

🎈ஒரு அரசு நிர்வாகதில் இருப்பது போல ஓவ்வொரு செல்லிலும் குப்பை அகற்றும் கேந்திரம் இருக்கிறது.

🎈ஒரு தர கட்டுப்பாடு ....வேண்டியதை மட்டும் உள்ளே விடும் ஒரு டோல் கேட் அமைப்பு  எல்லாம் ஒரு செல்லில் இருக்கிறது.


அந்தந்த தனித்தனி வேலையை செய்வதற்கு செல்லில் தனித் தனி சிறப்பு உறுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான உறுப்புகளை பற்றி அவைகள் என்ன செய்கின்றன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். (இதற்கு மேல் நீங்கள் 'செல்'லின் படத்தை பார்த்து கொண்டு மேற்கொண்டு படிப்பது உதவியாக இருக்கும்.)


பொதுவாக கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய செல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யலாம் :

அதாவது ஒரு செல்லை எடுத்துக்கொண்டு அதை ஒரு அறை அளவிற்கு பெரிதாக்கினால் பார்க்க எப்படி இருக்கும் ?


ஒரு அறை அளவிற்கு பெரிதாக மிதக்கும் ஒரு ஜெல் பந்து ஒன்றை கற்பனை செய்யுங்கள். அந்த பந்தை முழுமையாக ஒரு மெல்லிய ஊடுருவும் தன்மை கொண்ட போர்வை  போத்தி இருப்பது போல கற்பனை செய்யுங்கள் அந்தப் போர்வை தான் ''செல் மெம்பரைன்". அல்லது "பிளாஸ்மா மெம்பரைன் " செல் முழுக்க பரவி இருக்கும் ஜெல் நீர் அதுதான் "சைட்டோ பிலாசம். "

அந்த ஜெல் போன்ற பந்திற்குள் உற்று பார்க்கிறீர்கள் அங்கே ஒரு கால் பந்து அளவு ஒரு அடர்த்தியான பந்து கண்ணுக்கு தெரிகிறது. அது தான் உட்கரு..நியூக்ளியஸ்.. அந்த கால் பந்துக்குள்.. x வடிவத்தில் சில பொருட்கள் மிதக்கின்றன அவைகள் தான் குரோமோசோம் பொட்டலங்கள்.( அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் உள்ளே டி.என்.ஏ இருக்கும் , அப்புறம் அந்த DNA குள் உற்று பார்த்தால் அங்கே ஜீன்கள் இருக்கும்.)


இது தவிர அந்த கால் பந்திற்குள் இன்னும் ஒரு கிரிக்கெட் பந்து அளவு சிறிய அடர்த்தியான பந்து ஒன்று தெரிகிறது.. அதுக்கு பெயர் நியூக்ளியோலஸ். (இங்கே தான் ரிபோசோம் உற்பத்தி நடக்கிறது. அந்த ரிபோசோமின் வேலை புரோட்டீன் உண்டு பண்ணுவது.. ஒவ்வொரு செல்லுக்கும் அந்தப் புரோட்டின் இன்றியமையாதது.)


இதை தவிர அந்த ஜெல் பந்து முழுக்க பல வகை பொருட்கள் மிதக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா... கோல்ஜி பாடி.. லைசோசம்.. சைட்டோஸ்க்கெலட்டன்.. rough endoplasmic reticulum ,(சுருக்கமாக R.E.R என்பார்கள் ) smooth endoplasmic reticulum (S.E.R),vacuole , cytosol ,centriole. .. etc.. etc. அந்த  ஒவொண்ணும் ஒவொரு வேலை...


செல்கள் பல வேலைகளை செய்கின்றன. அவற்றை சுருக்கி பார்த்தால் முக்கியமாக 3 வேலைகளை அவைகள் செய்வது தெரிய வரும். அது...

1. உணவு எடுத்து கொள்ளுதல்

2. கழிவு வெளியேற்றுதல் .

3. மறு சுழற்சி.


அப்படியே இந்த 3 செயலுக்கு உதவும் முக்கிய 3 பாகங்கள் என்ன என்று பார்த்தோமே என்றால்...


1. Plasma membrane (செல் உடலை மூடி இருக்கும் போர்வை..)

2.  Nucleus (உட்கரு )

3.cytoplasm (செல் பூரா நிரம்பி உள்ள ஜெல் போன்ற திரவம் )


சரி இவற்றையும் மற்ற பாகங்களையும் ஒவொன்றாக பார்க்கலாம்...முதலில் செல் எங்கும் பரவி இருக்கும் அந்த திரவதையே எடுத்து கொள்வோம்.


☢️ #Cytoplasm☢️  : 


இது செல் எங்கும் நிரம்பி இருக்கும் திரவம்.

சைட்டோபிளாசதின் வேலை செல் முழுக்க பொருட்களை இட பெயர்ச்சி செய்தல். அப்புறம் கார்போஹைட்ரேட் புரோட்டீன் மாதிரி பொருட்களை கரைத்து வைத்து இருத்தல்..

இது மட்டும் இல்லாமல் செல்லிற்கு உடல் வடிவத்தை இவைகள் தான் கொடுக்கின்றன. சைட்டோ பிலாசம் இல்லை எனில் செல் காற்று இறங்கிய பலூன் போல ஆகி விடும்.


☢️ #Plasma_membrane ☢️ : 


பிளாஸ்மா மெம்பரைன் அல்லது செல் மேம்பரைன் இது முன்பே சொன்னது போல செல்லை போர்த்தி உள்ள ஒரு போர்வை ஆகும். இது எதனால் செய்ய பட்டது என்று உற்று கவனித்தீர்களேயானால்.. lipids மற்றும் proteins களால் ஆன இரட்டை அடுக்கு போர்வை இவைகள் என்பது தெரியும்.


இவைகள் எப்படி இருக்கும் என்றால்... வரிசையாக இரட்டை அடுக்கு செங்கல் அடுக்கி வைத்து ஒரு சின்ன சுவர் செய்ததை போல கற்பனை பண்ணுங்கள் அந்த இரட்டை அடுக்கு செங்கல் lipds எனும் பொருளால் ஆனது. இப்போ அந்த சின்ன சுவரில் ஒரு இடத்தில் ஒரு குட்டி கேட் ஐ கற்பனை பண்ணுங்கள் இந்த கேட் புரோட்டினால் ஆனது. கிட்டத்தட்ட இப்படி ஒரு அமைப்பினால் செய்யப்பட்ட போர்வை தான் 'செல்'லை மூடி உள்ளது. இதில் ஆக்சிஜன் மற்றும் நீர் போன்ற சிறிய மாலிகியூல்ஸ் அந்த லிபிட்ஸ் படலத்தை ஊடுருவி செல்லுக்குள் நுழைகின்றன. அதே சமயம் குளுக்கோஸ் மாதிரி பெரிய மூலக்கூறுகள் அந்த புரோட்டீன் கேட் ஐ உபயோகித்து உள்ளே நுழைகின்றன.


பிளாஸ்மா மெம்பரைன் தன்னிடம் வரும் எல்லாம் பொருட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை இந்த படலம் ஒரு semi - permable படலம் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள், மூலக்கூறுகள் , அயணிகள் தான் செல்லுக்குள் செல்ல  அனுமதிக்க படுகின்றன.


அடுத்ததாக முக்கியமான ஒரு பாகத்தை பற்றி பார்க்கலாம்..


☢️ #உட்கரு (nucleus ) : ☢️


செல்லுக்குள் அடர்த்தியாக ஒரு உட்கரு காண படும் இவைகள் தான் ஒரு செல்லின் கட்டுப்பாட்டு மையம். (இவைகள் சரியாக செல்லின் மையத்தில் இருக்கும் என்று பலர் நினைப்பது உண்மை இல்லை இவைகள் செல்லில் ஓரம் சாரம் எங்கே வேணா மிதந்து கொண்டு இருக்கும் )  இந்த கட்டுப்பாட்டு மையத்தில் தான் செல்லின் மரபணு பொருட்களான DNA இருக்கும்.  (ஒரு செல் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாம் தீர்மானிப்பது இந்த டி.என்.ஏ கள்தான் )


☢️ #Nucleolus ☢️ :  


உட்கருவிற்குள் இருக்கும் இன்னோரு பொருள்  இந்த நியூகளியோலஸ். (அந்த கிரிக்கெட் பந்து..) இங்கே தான் ribosomes கள் உண்டாக்க படுகின்றன. இந்த ரிபோசோம் களின் வேலை முன்பே சொன்னது போல புரதத்தை அதாவது புரோட்டினை உண்டு பண்ணுவது. (இந்த புரோட்டினை உண்டு பண்ணுவதற்கான தகவலும் முன்பு பார்த்த DNA கிட்ட தான் இருக்கு...)


☢️ #Endoplasmic_Reticulum (ER) ☢️


ஒரு பந்தை.. நிறைய சுருக்கங்கள் நிறைந்த ஒரு துணி பையால் சுற்றியது போல.. நியூக்ளியசை சுற்றி ஒரு மடிப்பு வாய்ந்த பெட்சீட் போர்த்தியது போன்று இருக்கும் ஒரு அமைப்பு தான் எண்டோபிளாஸ்மிக் ரெடிகுலம்.. (E .R )  இந்த சுருக்கங்கள் உண்மையில் ஒரு மடிப்பு நிறைந்த பொருட்களை கடத்தும் குகை வழி. ER இன் வேலை புரோட்டினை உண்டு பண்ணும் ரைபோசோமை  செல்லில் இட பெயர்ச்சி பண்ண வைப்பது. இதை rough ER என்று அழைக்கிறார்கள். காரணம் செல்லில் இன்னோரு இடத்தில் இன்னோரு ER உள்ளது அது Smooth ER இவைகள் ரிபோசோம்களை கொண்டிருப்பது இல்லை. இவைகளின் வேலை fat .. கொழுப்பை உண்டு பண்ணுவது. மற்றும் விஷ முறிவு..


☢️ #Ribosomes ☢️


மேலே சொன்ன ரைபோசம்கள் எப்படி புரதத்தை உண்டுபண்ணுகிறது என்று உற்றுப் பார்த்தால்... 

அவைகள் அமினோ அமிலங்களை இணைத்து ஒரு சங்கிலித் தொடரை உருவாக்குகின்றன. இந்த அமினோ அமிலங்களின் சங்கிலித்தொடரை தான் நாம் ப்ரோடீன் அல்லது புரதம் என்கிறோம்.

(இந்த செயல்முறையை ட்ரான்ஸ்லேஷன் என்கிறார்கள். )


☢️ #Golgi_body ☢️


கோலஜி பாடியை. கோலஜி காம்ப்ளெக்ஸ் அல்லது கோலஜி அப்ரெட்ஸ் என்று வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். ஆனால் அதை கண்டுபிடித்தவரின் பெயரான கோல்ஜி மட்டும் மாற வில்லை. இது செல்லில் இருக்கும் இன்னோரு சுருட்டி வைக்க பட்ட பெட்சீட் அமைப்பு.. 


இவற்றின் வேலை என்ன தெரியுமா.. ரைபோசோம்கள் உண்டு பண்ணும் புரதம் இருக்கிறதே அது கச்சா எண்ணெய் மாதிரி பயன் படுத்த கடினமான அமைப்பில் இருக்கும் அந்த புரதத்தை வெட்டி ஒட்டி சீர் செய்து அடுக்கி வைத்து சரியாக மூட்டை கட்டி பயன் படுத்தும் வகையில் தயார் செய்து வைப்பது தான் கோல்ஜி பாடியின் வேலை. புரதத்தை சரியாக அடுக்கி வைப்பது மட்டும் இன்றி அவற்றுடன் லிபிட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டை இணைத்து வைக்கிறது.

புரதம் கோலஜி பாடிக்கு Vesicle எனும் பார்சல் வடிவில் தான் வந்து சேர்கிறது.. அதை பயன்படுத்த கூடிய சீராக மாற்ற பட்ட புரதமாக மாற்றிய பின்  அதே vesicle பார்சலில் வைத்து தான் கோலஜி அனுப்பி வைக்கிறது. அந்த vesicle அப்படியே மிதந்து போய் செல் மெம்பரைன் உடன் இணைந்து கரைந்து புரோட்டினை வெளியிடுகிறது. இதன் மூலம் எங்கே தேவையோ அந்த தேவை இருக்கும் இடத்திற்கு புரதம் கொண்டு செல்ல படுகிறது.


இப்போ அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது செல்லில் ஒரு மிக முக்கியமான பாகத்தை 


☢️ #Mitochondria ☢️


ஒரு செல்லின் பவர் ஹவுஸ் என்று அழைக்க படுவது..இந்த மைட்டோகாண்ட்ரியா தான்.. இங்கு தான் செல்லுக்கு தேவையான ஆற்றல் உற்பத்தி நடக்கிறது.  cellular respiration தான் இதன் முக்கிய வேலை. அதாவது உணவில் இருந்து பிரித்து ஆற்றலை வழங்குவது.

மைட்டோகாண்ட்ரியாவின் வேலை ATP யை உற்பத்தி செய்வது.(.. Adenosine triphosphate ) இந்த ATP என்பது  செல்களுக்கு ஆற்றலை தரும் ஒரு ராசாயணம் . இது தவிர இதன் வேலை என்று பார்த்தால் செல் பிரிதல் மற்றும் செல் இறப்பில் கூட பங்கேற்கின்றன .


இவைகள் நாம் உண்ணும் உணவில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிஜன் உதவியுடன் செல் பயன்படுத்த கூடிய ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த நிகழ்விற்கு பெயர் oxidative phosphorylation.

ATP என்பது ஆற்றல் வைத்து இருக்கும் பொட்டலம் எனலாம் அவைகள் தேவை படும் போது ஆற்றலை வெளியிட்டு உதவும்.


ஒரு செல் அழிவு மற்றும் புது செல் உற்பத்தி  என்பது செல் சுழற்சியில் மிக முக்கியமான ஒரு தொடர்ந்து நடக்கும் செயல் .இந்த செல் அழிவிற்கு பெயர் apoptosis . ( வெவ்வேறு செல்களில் வெவ்வேறு வாழ்நாளை கொண்டிருக்கின்றன ) அதில் எந்த செல் அழிய வேண்டும் என்று தீர்மானிப்பதும் மைட்டோகாண்ட்ரியா கள் தான். மேலும் செல் அழிவில் சில என்சைம்களை கொடுத்து அழிக்க  உதவுவதும் இவைகள் தான்.


ஓவல் வடிவில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறேன் அது ஒரு தியரி அதன் பெயர் " endosymbiyosis theory " 


இதன் படி மைட்டோகாண்ட்ரியா என்பது நமது உடலுக்கு சொந்தமானதே இல்லை.. அது நமது உடலில் தங்க வந்த ஒரு பண்டைய பாக்டிரியா... கால போக்கில் அது நமது உடலின் செல்லின் ஓரு அங்கமாக மாறி விட்டது என்கிறார்கள்.

இந்த தியரிக்கு வலு சேர்க்கும் வகையில் மைட்டோகாண்ட்ரியாவின் உடலமைப்பு அமைந்து உள்ளது. 


மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி ரிபோசோம் கொண்டுள்ளது அதை வைத்து தனியாக புரதம் தயாரிக்கிறது. இவைகள் outer membrane ..மற்றும் innner membrane தனியாக இரண்டு அடுக்கு மெம்பரைன் கொண்டுள்ளன.  அதை விட ஆச்சர்யம் மைட்டோகாண்ட்ரியா தனக்கென தனி DNA களை வைத்துள்ளது.. 

மேலும் மறுசுழற்சி.. மற்றும் பிரதி எடுத்தல் வேலைகளை செய்கிறது . மற்ற பாகங்கள் தன்னை பிரதி எடுக்க DNA வின் உத்தரவை கேட்க வேண்டி உள்ளது. ஆனால் மைட்டோகாண்ட்ரியா தனது சொந்த DNA தகவல் உதவி உடன் பிரதி எடுத்து கொள்கிறது. இது நியூக்ளியஸ்  எனும் கட்டுப்பாடு மையத்தை  நம்பி இருப்பது இல்லை. (இதனால் இதற்கு செல்ப் ரெப்ரிகேட்டிங் ஆர்கணரி என்று பெயர் ) அதாவது செல்லுக்குள் வாழும் ஒரு குட்டி செல் போல இது செயல்படுகிறது.


மைட்டோகாண்ட்ரியா இரண்டு அடுக்கு மெம்பரைன் களை கொண்டு உள்ளது அந்த இரண்டு அடுக்குகளுக்கும் நடுவே கொஞ்சம் இடைவெளி உள்ளது அந்த இடத்திற்கு பெயர் Intermembrane space

இதில் உள் மெம்பரைன் மடிப்புகள் நிறைந்ததாக உள்ளது இதை cristae என்று அழைக்கிறார்கள். அந்த உள் மடிப்பை தாண்டி நடுவில் இருக்கும் இடைவெளியில் இருப்பதை matrix என்கிறார்கள். இங்கே தான் மைட்டோகாண்ட்ரியாவின் தனி பட்ட DNA உள்ளது .மேலும் பல வகை என்சைம்கள் நிறைந்த இடம் இது. அவைகள் ATP உருவாக்கத்திற்கு முக்கிய தேவைனாவை.


மைட்டோகாண்ட்ரியா உடலில் உள்ள அனைத்து செல்களிலும் ஒரே அளவு இருக்காது.. தேவைக்கு ஏற்றார் போல இருக்கும். உதாரணமாக ஈரல் செல்கள் கொஞ்சம் அதிகம் ஆற்றல் தேவையை கொண்டு இருப்பதால் அவற்றில் மைட்டோகாண்ட்ரியாகள் 2000 திற்கும் அதிக அளவில் இருக்கும்.(. ரத்த செல்களில் இவைகள் சுத்தமாக இல்லை ) அதுவே இதய செல்களில் உள்ள சைடோபிலாசத்தில் பார்த்தால் 40 சதம் நிரம்பி இருப்பது இவைகள் தான். (அங்கு தேவை அதிகம் ) விந்தணுவில் வால் இயக்கத்திற்கு ஆற்றலை அளிக்க அங்கேயும் இவைகள் அமைந்து இருக்கின்றன.


மைட்டோகாண்ட்ரியாகள் கால்சியத்தை உறிஞ்சி வைத்து கொண்டு தேவை படும் போது பயன்படுத்துகின்றன. 

மேலும் மைட்டோகாண்ட்ரியாகள் செல்லுக்கு வெப்பத்தை கூட உண்டு பண்ணி தருகின்றன.


சரி அடுத்த பாகத்திற்கு போகலாம்..


☢️ #Lysosome ☢️  


நம்ம வயிற்றில் எப்படி இரைப்பை என்ற ஜீரண உறுப்பு உள்ளதோ அப்படி செல்லுக்குள் இருக்கும் ஒரு இரைப்பை என்று இதை சொல்லலாம். தனக்குள் வரும் எதையும் உடைத்து அரைத்து துண்டாக்கி விடும். உள்ளே ஒரு ஆள் அறவை இயந்திரத்துடம் காத்திருக்கும் ஒரு இடமாக லைசோசோமை கற்பனை பண்ணலாம்.


உள்ளே ஜீரணத்திற்கான சில சிறப்பு என்சைம் களை இவைகள் கொண்டு இருக்கின்றன. உனவை ஜீரணம் செய்வது ஆனாலும் சரி அல்லது இறந்த செல்களை  அரைத்து துண்டாகுவதானாலும் சரி இங்கு தான் நடக்கிறது. அவ்வளவு ஏன் பாக்டிரியா மாதிரி எதிரி யாராவது ஊடுருவி விட்டால் அதையும் துண்டாகி செயல் இழக்க செய்கிறது லைசோசம்கள்.


இந்த என்சைம்களும் ரிபோசோம் இல் உண்டானவை தான். அவைகள் முன்பு பார்த்தது போல vesicle பார்சலில் கோலஜி பாடி க்கு சென்று அங்கு இறுதி வேலைகள் செய்ய பட்டு லைசோசம்களாக மாறி சைட்டோ பிலாசத்தில் மிதக்கின்றன. தேவை படும் போது செயலாற்றுகின்றன.

இவைகள் single-membrane organelles கள் ஆகும்.


எதையும் கரைக்கும் அந்த என்சைம்கள் ஏன்.. எப்படி இதன் ஒற்றை அடுக்கு மெம்பரனை கரைத்து இந்த உறுப்பையே காரைத்து ஜீரணிக்காமல் இருக்கின்றன. எப்படி இவைகள் பிழைகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியமான ஒரு விஷயம். (நம்ம வயிற்றில் சுரக்கும் ஆசிட் வயிற்றை கரைப்பது இல்லை அல்லவா அப்படி தான்.. ) 


☢️ #DNA ☢️


உலகில் உள்ள அனைத்து வகையான மூலக்கூறுகளில் மிகவும் புகழ் வாழ்ந்த ஒரு மூலகூறு என்றால் அது  deoxyribonucleic acid என்று சொல்ல கூடிய  DNA தான்.

இந்த குரோமோசோம்.. என்றால் என்ன DNA என்றால் என்ன அப்புறம் ஜீன்கள் என்று எதை சொல்கிறோம் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும்.. இவைகள் என்ன என்பதை பார்க்கலாம்.


செல் நியூக்ளியஸில் DNA கள் இருக்கின்றன என்று பார்த்தோம். செல்லில் உட்காருவில் உற்று பார்த்தால் அங்கே  x வடிவ பொட்டலங்கள் பொட்டலம் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம். இந்த x வடிவ பொட்டலங்களின் பெயர் தான் குரோமோசோம். மனித உடலில் 23 ஜோடியாக மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. சரி அந்தப் பொட்டலதில் என்ன இருக்கிறது என்று அதைப் பிரித்துப் பார்த்தால். உள்ளே அவைகள் குறோமேட்டின் என்கிற வலை பின்னலை வைத்து எதையோ பின்னி வைத்து இருப்பதை பார்க்கலாம். அந்த வலை பின்னலை பிரித்து உள்ளே பார்த்தால் உள்ளே அவைகள் histones என்கிற புரோட்டினால் ஆன நூலை வைத்து எதையோ சுற்றி இருப்பதை பார்க்கலாம். அந்த நூலை உரித்து எடுத்தால் உள்ளே ...அதோ சுருள் ஏணி வடிவில் பத்திரமாக இருக்கும் அந்த பொருள் தான் "DNA " . ஒவொரு குரோமோசோம்களும் தலா ஒரு DNA வை கொண்டு இருக்கும்.

ஏன் இதற்கு இத்தனை பார்சல் பாதுகாப்பு ?


உங்கள் வீட்டில் உள்ளங்கை அளவு ஒரு நூல் கண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நூலை முழுசாக பிரித்துப் போட்டுக் கொண்டே வந்தால் அந்த வீடு முழுவதும் நூல் நிரம்பிவிடும் அல்லவா. அதுவே சரியாக சுருட்டி வைக்கப்பட்டால் வீட்டில் உள்ளங்கை அளவு இடத்தை மட்டும் அது பிடித்துக்கொள்கிறது அல்லவா ? அப்படி ஒரே ஒரு செல்லில் இருக்கும் ஒரே ஒரு DNA வின் நீளம் மட்டும் கிட்ட தட்ட 3 அடி இருக்கும். மனித உடலில் மொத்தம் பல பில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றையும் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து நீட்டி விட்டால் முன்பு சொன்னது போல சூரியனின் தொலைவு போல 300 மடங்கு நீளும். இதை சிறப்பாக சுருட்டி வைக்க தான் அந்த super coil அமைப்பு.


இதில் ஜீன்கள் என்பது என்ன ? அந்த DNA குள் அடங்கி இருக்கும் சில சிறப்பு தகவல் அமைப்பு தான் ஜீன்கள்.

DNA தகவல்கள் அபாரமானவை படித்து பார்த்தால்..அவற்றில் புரதம் உண்டாகுவதற்கான சமையல் குறிப்பும் உண்டு. அதே சமயம்..ஒரு மனிதனின் மொத்த தகவல் அவன் கண் என்ன நிறம் தோல் என்ன நிறம் அவன் என்ன உயரம் என்பது தொடங்கி அவனது மொத்த  ஜாதகமும் அதில் உள்ளது.( அவன் ஜாதகம் மட்டுமல்ல அவன் கடந்து வந்த மொத்த பரம்பரையின் ஜாதகமும் கூட அதில் அடங்கி உள்ளது)  

ஒரு குழந்தைக்கு இந்த டிஎன்ஏ தகவல் பாதி அம்மாவிடமிருந்து பாதி அப்பாவிடம் இருந்தும் கிடைக்கிறது. 


DNA வில் முறுக்கிய  இரண்டு இழைகளை காணலாம். அப்புறம் அவற்றிற்கு இடையில் சிறு கோடுகள் தொடர்பு கொண்டு இருப்பதை காணலாம்.

அந்த இழைகள்.. nucleotides களால் ஆனவை. அதாவது....


ஒரு phosphate மூல கூறு மற்றும்


ஒரு சர்க்கரை மூலக்கூறு. (இதன் பெயர் deoxyribose இவைகள் 5 carbons கள் அடங்கிய அமைப்பு. )


இதை தவிர ஒரு nitrogen-containing region உள்ளது அது தான் அந்த ஏணிக்கு நடுவில் உள்ள கோடுகள். 

இந்த nitrogen contenting region 4 வகைகள் கொண்டது.. அந்த 4 வகை தான் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வரும்... அவைகள்..

adenine (A)

cytosine (C)

guanine (G) மற்றும்

thymine (T) 

 இந்த நான்கு எழுத்தை கொண்டு மாற்றி மாற்றி எழுத பட்ட தகவல் தான் நமது genetic code,  மொத்த ஜாதகம் .

அந்த இரட்டை சூழல் ஏணி அமைப்பில் இடையில் ஒன்றோடு ஒன்று இந்த நான்கும் தொடர்பில் இருக்கின்றன. அவற்றை உற்று பார்த்தால்... A எப்போதும் T உடன் இணைவதை பார்க்கலாம்.G எப்போதும் C உடன் இணைவதை பார்க்கலாம். (அந்த நீளமான ஏணி  sugar மற்றும் phosphate groups.களால் செய்ய பட்டது.)


46 குரோமோசோம் சொன்னோமே.. அது 46 கு பதில் 48 இருந்தால் என்ன ஆகும் ? அப்படி என்றால் நாம் மனிதனல்ல மங்கி. குரங்குகள் 48 க்ரோமோசோம் களை கொண்டிருக்கின்றன. 

நமது குரோமோசோமில் நீண்டது முதல் குரோமோசோம் ஆகும். இதில் 8000 ஜீன்கள் உள்ளன. இருப்பதில் சிறியது 21 ஆவது குரோமோசோம் ஆகும் இதில் 3000 ஜீன்கள் உள்ளன.  எப்படியும் மொத்த 46 குரோமோசோம்களில் மனிதன் மொத்தம் 20000 இல் இருந்து 30000 வரை ஜீன்களை கொண்டு இருக்கிறான். 


இந்த ஜீன்களில் தான் அந்த மனிதன் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் ஒளிந்திருக்கிறது. உதாரணமாக அவன் உடலில் சர்க்கரையை கட்டு படுத்தும் இன்சுலின் எனும் பொருள் சுரக்க வேண்டுமா அந்த தகவலுக்கு என்று குறிப்பிட்ட ஜீன் டேட்டா இருக்கும்.  இப்படி நாம் கண்டு பிடித்த தகவல் DNA வில் வெறும் 3 சதம் தான் என்கிறார்கள். மீதமுள்ள 97 சததில் ஒளிந்து இருப்பது என்னவென்று இன்னமும் நமக்கு தெரியாது


இதில் RNA என்று ஒன்றை கேள்வி பட்டு இருப்போம் அது என்ன..? இது DNA வின் காபி தான். என்ன வித்தியாசம் என்றால். இதில் இரட்டை இழைக்கு பதில் ஒற்றை இழை தான் இருக்கும். மேலும் இதில் thymine இருக்காது அதற்கு பதில் uracile என்ற ஒன்று இருக்கும். இவைகள் messenger RNA (m RNA ) ஆகும். இவைகள் 

 translated RNA (t RNA ) மூலம் அமினோ அமிலங்களாக டிரான்ஸ்லெட்  பண்ண படுகிறது. RNA வில் இன்னோரு வகை r RNA ஆகும்.அதாவது  Ribosomal RNA: 

  mRNA கள் three-letter sections களால் படிக்க படுகிறது அதன் பெயர் codons. ஒவொரு  codon code களும்..குறிப்பிட்ட அமினோ அமிலங்களுக்கானது. (மொத்தம் கிட்ட தட்ட 20 வகை அமினோ அமிலங்கள் உள்ளன ) 


   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️


சரி மேலே நாம் பார்த்தது மட்டும்தான் செல்லின் பாகங்களா என்றால் இல்லை. இன்னும் Centrosome.. Peroxisome..

Villi..என்று நுணுக்கமான பல பாகங்களை செல்கள் கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான சிலதை மட்டும் தான் நாம் மேலே பார்த்தது. 

மனித உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒரே மாதிரி இருக்காது அவைகள் தேவைக்கு தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றங்களுடன் காணப்படும். உதாரணமாக விந்து அணுவில் அவைகள் நீந்தி செல்ல வால் அமைப்பு இருக்கும். இந்த வாலுக்கு பெயர் "flagella ". ( இது சில பாக்டீரியாக்களிலும் இருக்கிறது.. அவைகள் நீந்தி நகர உதவுகிறது.) 


இதே போல சுவாச மண்டலத்தில் எடுத்துக்கொண்டால் சுவாச பாதையில் முடி போன்று இருக்கும் அலை போல ஆடி கொண்டு இருக்கும்  ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் cillia . நாம் தூசுகளை சுவாசிக்க நேர்ந்தால். அவற்றை பிடித்து கொண்டு இரும்பும் போது தும்பும் போது வெளியேற்ற இவை உதவுகின்றன. 


இப்படி உடலில் பல உறுப்புகள் பல வகைகளில் செல்களை கொண்டு இருக்கின்றன. ரத்தத்தின் செல்களும் தசையின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தசைகளின் செல்களும் தோலின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தோலின் செல்களும் நரம்புகளின் செல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மொத்தம் 200 வகை இப்படி மாறுபட்ட செல்கள் மனித உடலில் இருக்கின்றன. இவைகள் அளவுகளில் கூட மாறுபட்டு இருக்கின்றன. உதாரணமாக உடலில் உள்ள மிக பெரிய செல் பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டையின் செல் ஆகும். என்ன ஆச்சர்யம் என்றால் இருப்பதிலேயே சிறிய செல் ஆணின் விந்து அனு செல்கள் ஆகும்.. (ஆக செல் உலக இயற்கை படி.. இருப்பதிலேயே சிறிய ஆள் ஒருவன் இருப்பதிலேயே பெரிய இடத்து  ஆளை காதலித்து கரம் பிடிக்கும் செயலுக்கு பெயர் தான் குழந்தை உருவாக்கம். ) 


கடைசியாக  சில சுவாரஸ்யமான செல்  தகவல்களை சொல்லி முடிக்கிறேன்.


🥗 மனித உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து அழிந்து கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன. ஒரு வளர்ந்த மனிதன் உடலில் ஒரே ஒரு நிமிடத்தில் கிட்ட தட்ட 9.6 கோடி செல்கள் இறந்து கொண்டு இருக்கின்றன. அதே ஒரு நிமிட நேரத்தில் 9.6 கோடி செல்கள் இரண்டாக பிரிந்து புதிய செல்கள் உண்டாகி கொண்டு இருகின்றன.


🥗 வெவ்வேறு செல்கள் வெவ்வேறு ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ரத்த வெள்ளை அணுக்கள் செல்கள் 13 நாள் உயிர் வாழ்கின்றன. நமது மேல் தோலில் உள்ள செல்கள் குறைந்தது ஒரு மாதம் உயிர் வாழ்கிறது. ரத்த செல்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் உயிர்வாழ்கின்றன. லிவரில் உள்ள செல்கள் 18 மாதங்கள் வாழ்கின்றன.


🥗 மனித உடலில் எத்தனை மனித செல்கள் உள்ளதோ அதை விடவும் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியா மாதிரியான மனித செல்களில் அல்லாத வேறு செல்களை மனித உடல் கொண்டிருக்கிறது. 

அப்படி இருந்தும் மொத்த எடையில் வெறும் 3 சதம் தான் பாக்டிரியா மாஸ் . இது எப்படி ?? இதற்கு காரணம்..பாக்டிரியா செல்கள்  (prokaryotic cell ) மனித செல்களை ஒப்பிடும் போது மிக சிறியவை. 


🥗 மனிதன் பல கோடி செல்களை கொண்டு இருந்தாலும் அவனும் உருவாகும் தருணத்தில் ஒற்றை அணுவாக இருந்து தான் உண்டாகி... பல்கி பெருகி கருவாகி பல கோடி செல்கள் கொண்ட குழந்தை ஆகிறான்.


🥗  உடலில் உள்ள மிக பெரிய செல் பென்னின் கருமுட்டை என்று பார்த்தோம். வெறும் கண்ணால் பார்க்க முடிய கூடிய ஒரே செல்லும் அது தான். (ஒரு தலை முடியின் நுனி யை பார்ப்பது போல இருக்கும் ).


    ♠️   ♠️    ♠️   ♠️   ♠️   ♠️  ♠️   ♠️   ♠️


கட்டுரையில் நாம் பார்த்தது விலங்கு செல்களை பற்றி மட்டும் தான்.  இதே போல தாவர செல்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளது வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்டுரையில் அதை பற்றி பார்க்கலாம். 


இயற்கையின் படைப்பில் பல ஆச்சரியங்களில் ஒன்று இந்த செல்கள். 

செல்களைப் பற்றி நாம் அறிந்தது குறைவுதான் இன்னும் மறைந்திருக்கும் உண்மைகள் எவ்வளவோ....



Saturday, February 4, 2023

112 chakras secrets of 7 chakras

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 

In the diagram, the energy centers (or chakras) are shown as circles in different colors, aligned with the spinal chord.
.
According to Sat-Chakra-Nirupana, the ancient document of Tantra, there are seven major Chakras, namely,

1. Mooladhara chakra (Root chakra)
2. Swadisthan chakra
3. Nabhi chakra
4. Anahat chakra (Heart chakra)
5. Vishuddhi chakra
6. Agnya chakra
7. Sahasrara chakra (Crown chakra)
.
Amazingly, every problem that we have, whether it is physical, mental, emotional or spiritual, can be related to disturbances, also known as “catches”, on these energy centers. In the picture you can see that the colors shown on the hand correspond to the colors shown on the chakras. For example, the thumb is in yellow and this corresponds to the color of the second energy center at the base of the green circle in the subtle system chart.

Further, if we are able to cleanse these energy centers, also called “clearing”, we can actually cure these energy centers.  There are 114 junctions or confluences of nadis. The nadis are the channels of prana in the energy body. Out of these 114 chakras, two are outside the physical body. Of the remaining 112, only 108 can actually be worked upon, the remaining four just flower as a consequence. The human brain is highly evolved in the world.

Dasa kariya vasiyogam uniqness

 ஒன்றும் செய்யாமல் "சும்மாயிரு" என்று சில ஞானிகள்  சொல்கிறார்கள்.


சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை  விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள்    அவற்றை செய்யச் சொல்கிறார்கள்.


நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம்.


சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும்.


ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம்,  பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும். 


இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள்  ஜீவன் முக்தியை அடைய  பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவர்கள் எதுவும் செய்யக்கூடாது. சும்மா இருக்க வேண்டும். சாப்பாட்டுக்கு கூட பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். காசை கையால் தொடக்கூடாது. உணவை மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும். வேறு ஒன்றையும் யோசிக்கக்கூடாது இதுதான் ஆன்ம ஞானியின் லட்சணம்.


இவ்வாறு வாழ்ந்த பல்வேறு ஞானிகளை நமக்கு தெரியும். சாக்கடை சித்தர், அழுக்கு மூட்டை சித்தர், மூக்குப்பொடி சித்தர்,  புத்தர், வர்த்தமான மகாவீரர், சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, பகவான் யோகி ராம்சுரத்குமார் போன்ற அனைத்து ஞானிகளும் ஆன்ம ஞானிகளே. அதாவது ஜீவன் முக்தர்கள். இவர்களிடம் மேற்குறிப்பிடப்பட்ட ஜீவன் முக்த லட்சணம் பரிபூரணமாக விளங்கியதை நாம் காணலாம்.


இவர்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ள பஞ்சகோசங்களில்  அதாவது அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற ஐந்து உடல்களில் விஞ்ஞானமய கோசம் மற்றும் மனோமய கோசத்தை  மட்டுமே கையாண்டார்கள்.


மீதமுள்ள அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம் இதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. அவர்களுடைய ஸ்தூல உடலாகிய அன்னமய கோசத்தில் கேன்சர் வந்தாலும் எது வந்தாலும் அதைப்பற்றி அவர்கள் சட்டை செய்வதில்லை. இதுவே "சும்மாயிரு" என்பதின் அர்த்தம்.


ஆனால் மெய்ஞானம் அல்லது  சைவ சன்மார்க்கம்  என்று வரும் பொழுது இந்த உடலை அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி சுத்தமாக பராமரித்து, பற்பம், செந்தூரம் உட்கொண்டு இந்த சும்மா போன்  ஆகிய உடலை ஸ்மார்ட் போனாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.


வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், பதினெண் சித்தர் பெருமக்கள், சப்தரிஷிகள் மற்றுமுள்ள அனேக தசகாரிய வாசி யோகிகள் போன்ற மெய்ஞானிகள் அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற அனைத்து உடல்களையும் வலுப்படுத்த பயிற்சி செய்கிறார்கள்.


இவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே ஒழுக்கம் தவறாமல் அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி, ஆலய வழிபாட்டை செய்து, மனைவி மக்கள் குழந்தை  சுற்றங்களையும் பாதுகாத்துக் கொண்டு, தான் சார்ந்த சமூகத்தையும், நாட்டையும் பாதுகாத்து கொண்டு உயர்ந்த உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். எனவேதான் அவர்களுக்கு யாரும் பெறாத நிலையாகிய நூற்றுக்கு நூறு மார்க் என்ற மரணமில்லாப் பெருவாழ்வை இறைவன் அளித்தார்.


அதாவது வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், அகத்தியர் போன்ற சித்தர் பெருமக்களை யாரும் விஷ ஊசி போட்டு சாகடிக்க முடியாது அல்லது தண்டனை  கொடுத்து சித்திரவதை செய்ய இயலாது.


ஆனால் பகவான் ஓஷோ, இயேசு நாகர் போன்ற மேலும் பல ஆன்ம ஞானிகளை சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் விஷ ஊசி போட்டு  கொன்றதும், சிலுவையில் அறைந்து கொன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.


இவ்வாறு ஆன்ம ஞானிகளுக்கும்  மெய்ஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆன்மீக ஆர்வம் உள்ள பொதுமக்களுக்கு புரியாததால் தான் இன்று ஆன்மீகத்தில் பல்வேறு குழப்பவாதிகள் மற்றும் போலி குருமார்கள் நான் முற்றும் துறந்த முனிவன் என்றெல்லாம் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.


எனவே  வீட்டைவிட்டு ஓடிப்போய் துறவியாகி சும்மா இருக்கிறேன் பேர்வழி என்று குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துன்பப்பட்டு, துக்கப்பட்டு கஷ்டப்பட்டு நோய் வந்து அல்லது சிலுவையில் அறையப்பட்டு பிச்சைக்காரனாக சாவதைவிட, வீட்டில் இருந்துகொண்டே ஒழுக்க விதிகளை பின்பற்றி யாரும் பெறாத நிலையாகிய மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வழிகாட்டும் சைவ சன்மார்க்க சாதனங்களே உயர்ந்த நிலை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


ஆன்மீகத்தில் போலிகள் ஒழிந்து சைவமும், சன்மார்க்கமும் வளர வேண்டுமானால் ஆன்ம ஞானிகளுக்கும் வள்ளலார் போன்ற மெய்ஞானிகளுக்கும் உள்ள இந்த  வித்தியாசத்தை பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 


தன் உடலை பராமரிக்க தெரியாத, ஒரு குடும்பத்தை நடத்தத் தெரியாத, மனைவியை சந்தோஷப்படுத்த தெரியாத ஆண்மையற்ற முட்டாள்கள் ஆன்மீகம் என்ற பெயரில் நடிப்பதை தடுக்க வேண்டுமானால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டுமானால் இந்த புரிதல் பொதுமக்களுக்கு அவசியம் ஏற்பட வேண்டும்.


எனவே உண்மை ஆன்மீகம் என்பது சைவ சன்மார்க்கம் காட்டும் தசகாரிய வாசி யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்து, சாகா கல்வி கற்று எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வீட்டில் இருந்துகொண்டே பற்றறுத்து வாழ்ந்து பரமுத்தி என்னும் நம் உடலாகிய கருவியை நீங்களே அசெம்பிள் செய்யவும் தேவையற்ற போது பஞ்சபூதங்களில் பிரித்து போடவும் செய்யக்கூடிய தன்மையை அடைவதே ஆகும். எனவே நீங்கள் அனைவரும் சைவ சன்மார்க்க பாதையில் தசகாரிய வாசி யோக பயிற்சிகளை மேற்கொண்டு மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயல வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


"கொடுவா பிடி பிடித்தால் தான் அருவா பிடியாவது தேறும்" என்ற தமிழ் பழமொழிக்கு  ஏற்ப நாம் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்ற முறையான ஒழுக்கங்களை கைக்கொள்ளும் போது மட்டுமே ஜீவன்முக்தி என்ற நிலையாவது நமக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 


செத்துப் போனவர்களையே வணங்கிக் கொண்டிருக்கும் தமிழா!!!

இனியாவது சாகாதவர்களை வணங்க கற்றுக்கொள்!!!


தமிழனின் கலை சாகாக் கலையே!!!


சைவ சன்மார்க்க நெறி நின்றார் நீடுவாழ்வார், மற்றையார் வெந்து சாவார்!!!


மேன்மைகொள் சைவ சன்மார்க நெறி விளங்குக உலகமெல்லாம்!


கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!. 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! .

ஓம் நமசிவாய !!! திருச்சிற்றம்பலம்!!!



Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...