. வின்னையும் தான்டும் ஆத்மஞானத்தின் மகிமை
ஆத்ம ஞானத்தின் பெருமையும், மகிமையும், நன்மையும் எண்ணில் அடங்காதவை !!!
சில சூழ்நிலைகளில் மனிதனுக்கு எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு, அவனுக்கு "எதிர்பார்க்க முடியாத *உச்சகட்ட துன்பமும்* அனுபவிக்க நேரிடுகிறது !!!
போர்க்களத்தில் செய்வதறியாது தவிக்கும் நிலை, அர்ஜுனனுக்கு ஏற்பட்டது போல, *நாமும் சொல்லெனாத் துயரை அனுபவித்த* பின்னரே ஆத்ம ஞானத்தை பெறுகின்ற *தகுதியை* அடைவோம் !!!
எனவே, *இறைவன் தரும் பெருந்துன்பங்களை விருப்பமுடனும் பொறுமையுடனும் ஏற்க கற்றுக் கொள்ள வேண்டும்" !!!
ஆத்மஞானமே மனித லட்சியம் :
------------------------------------
*ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும், கௌரவமான உத்தியோகம் கிடைத்திருந்தாலும், நல்ல மனைவி பிள்ளைகள் கிடைத்து இருந்தாலும்*, அவ்வளவு ஏன்? ... *வேறென்ன வெல்லாமோ கிடைத்து இருந்தாலும்*, இன்னும் சொல்லப்போனால், உலகளவில் முதல்நிலை பணக்காரனாக இருந்திருந்தாலும் கூட , அவன் ஆத்ம ஞானத்தை பெற வில்லை என்றால், அவன் வாழ்வின் இறுதிவரை கவலைகளோடு தான் வாழ வேண்டும் !!! அவன் மீண்டும் பிறவா வரம் பெற முடியாது !!! பிறவிப் பயனையும் அடைய முடியாது !!!
*அதுமட்டுமல்ல !!! கோடி கோடி மாந்தர்கள் ஆத்ம ஞானத்தை அடையாமலே மரணிக்கிறார்களே அவர்களும், மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!! மனிதப் பிறவியில் ஒரு முறை மரணிப்பதற்கே இவ்வளவு பயப்படுகின்றோமே !!! ஆனால், 21 லட்சம் வகையான விலங்கு பிறவிகளிலேயும் 21 லட்சம் தடவை, பிறந்த பிறந்து மீண்டும் மீண்டும் இறந்து இறந்து மரணிக்க வேண்டி வருமே, அந்த சரீர கஷ்டத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா? பிறவா வரம் பெறுவதற்கு மட்டுமே மனித பிறவி எடுத்து வந்துள்ளோம் என்று நாம் உணர வேண்டும் !!!
*ஒருவன் நற்குணங்களோடும் உண்மையான பக்தியோடும் சிறந்த ஆன்மிகத்தோடும் இறைவனை தினமும் வழிபடுபவனாக இருந்தாலும் கூட , மொத்தத்தில், அவன் மிக மிக நல்லவனாக வாழ்ந்திருந்தாலும் கூட அவன் சேர்த்து வைத்த புண்ணியங் களை தீர்ப்பதற்காகவாவது அவன் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!!*
*ஆத்ம ஞானத்தை அடையாத காரணத்தால், அந்த நல்லவனும் கூட , இவ்வுலகத்தாரை போல, இறக்கும் வரை கவலையோடு தான் வாழ வேண்டும். உடலை விட்ட பின்பும் மறுபிறவி எடுக்க செல்ல வேண்டும். மொத்தத்தில், அவன் மனிதனாகப் பிறந்தே பயனில்லை !!!
ஆத்மஞானம் யாருக்கு கிட்டும் ?
-----------------------------------
மது, மாது, சுவையான-உணவு, எப்போதும்-உறக்கம், போதை, மயக்கம் என புலனின்பங்களில் மூழ்கி இருப்போருக்கு எந்த ஞானமும் நிச்சயம் தித்திக்காது !!!
அதே சமயம், *ஆத்ம ஞானத்தை அறிய வேண்டும் என்கிற ஆவலும் விருப்பமும் கூட அவ்வளவு சுலபமாக ஒருவனுக்கு வந்து விடுவதில்லை !!!*
Basically, *நற்குணங்களோடு நல்லவர்களாக வாழ்பவர்களில் சிலருக்கே ஆத்மஞானம் அடைய வேண்டும் என்கிற விருப்பம் வரும் !!!*
*அந்த சில நல்லவர்களில், ... எந்த ஒரு சிலர், இவ்வுலகத்தின் மீதும் இவ்வுலகத்தார்கள் மீதும், 'எந்த வெறுப்பும்' இல்லாமல் இருக்கின்றாரோ அவரே, ஆத்ம ஞானம் பெறத் தகுதியுள்ளவன்*
ஆத்மஞானம் ஏன் மனிதனுக்கு தேவை?
--------------------------------------
*ஆத்ம ஞானத்தை பெற வேண்டும் என்கிற காரணத்திற்காகவே நாம் மனிதனாக பிறந்து இந்த பூமிக்கு வந்திருக்கிறோம் !!!*
*ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
விளக்கம் : தம்முள்ளே உட்கலந்த உயிரான, இறைவனை, அறிவதன் மூலம், மீண்டும் பிறவா நிலை பெறுவதை விட்டுவிட்டு, மனிதர்கள், அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.
கோடிக்கணக்கான மக்கள் ஆத்ம ஞானத்தை அடையாமல் நம் கண் முன்னே இறந்து கொண்டே இருக்கின்றார்கள் !!! அவர்கள் யாவரும் மனித பிறவியை வீணாக்கியவர்கள் !!!
*உண்டு-உறங்கி, உடல் வளர்த்து, விலங்கு போல மடியும் எண்ணற்ற மானிடர்களைப் போல, நீயும் உனது மேன்மையான மனிதப் பிறவியை வீணாக்க கூடாதல்லவா*?
ஆத்ம ஞானத்தைப் பெற தகுதி :
----------------------------------
பகவத் கீதை பற்றிய கருத்துக்களை கொண்ட எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்தமானதாய் இருப்பதன் மூலம், நீங்கள் ஆத்ம ஞானத்தை பெற தகுதி உள்ளவர்கள் என உணர வேண்டும் !!!
*கவலையற்று வாழ வேண்டுமா? நிரந்தர சந்தோஷத்தோடு வாழ வேண்டுமா?, பிறவிப் பயனைப் பெற வேண்டுமா*? ஆத்ம ஞானத்தை அடைவதே மனித இலக்கு என உணர்ந்து அதை அடைய முற்படுவோம் !!!*
ஆத்மஞாணி பெறும் நன்மைகள் :
------------------------------------
*உயிர் எனப்படும் ஆன்மாவின் மேன்மையான ஞானங்களே அதைப் பெற்றிருக்கும் ஞாணியின் நன்மைகள்*
*நிலநீர் தீக்காற்றாகாயம் என ஐம்பூதங்களாலும் ஆத்ம ஞானியை வீழ்த்த முடியாது !!! ஏனெனில்
ஆத்மாவை யாராலும் எதனாலும்
அழிக்க முடியாது" !!!
*வீழ்த்த முடியாத ஆத்மஞாணிக்கு எதிரிகளே இருக்க முடியாது* !!!
*எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு பயமில்லை*!!!
*எதற்கும் பயப்படாத ஆத்மஞாணிக்கு எந்த கவலையும் இல்லை* !!!
*கவலையற்ற ஆத்மஞாணி நிரந்தர சந்தோஷத்தில் இருப்பான்*.
*நிரந்தரமாக என்றும் இருக்கின்ற ஆத்மஞாணிக்கு மரணமே இல்லை* !!!
*மரணமில்லாத ஆத்மஞாணிக்கு மரணபயம் எவ்வாறு இருக்க முடியும்* ?
*ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாத" ... *எதிரிகளே இருக்க முடியாத* ... *பயமில்லாத*... *கவலையற்ற* ... "மரணமற்ற* ... *மனிதனாக உன்னை நீ உணர வேண்டுமா*?
*அதற்கு நீ செய்ய வேண்டிய தெல்லாம் ஆத்மாவின் ஞானங்களை அறிய வேண்டும். அத்தனை ஞானங்களையும் தன் ஞானங்களாக உணர வேண்டும் !!! உணர்ந்த ஞானங்கள் மனதில் நிலைக்க வேண்டும் !!! நிலைத்தபின், நீயே ஆத்மஞாணி* !!!
*ஆத்ம ஞானத்தின் மகிமை* !!!
-------------------------------
மனிதன் எந்த ஞானத்தை பெற்றாலும் அதைவிட சிறப்பான ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது !!!
மனிதன் எவ்வளவு எண்ணிக்கையில் ஞானத்தைப் பெற்றாலும், மேலும் அடைவதற்கு ஞானங்கள் இருக்கத்தான் செய்கிறது !!! *கற்றது கைமண்ணளவு அல்லவா*?
*ஞானங்களில் சிறந்தது ஆத்மஞானம் :
*மனிதனுக்கு கிடைப்பதற்கரிய ஞானங்கள் *அத்தனையிலும், பிரதானமானது ஆத்ம ஞானமே !!!*
*எந்த ஒரு ஞானத்தை நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை என்கிற மனநிறைவை உனக்கு தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும்" !!!
எந்த ஒரு ஞானத்தை நீ பெற்றால், *உன்னை ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாதோ* ...
*எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்
உனக்கு எதிரிகளே இல்லையோ* ...
"எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்
உனக்கு பயமே இல்லையோ* ...
"எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்
உனக்கு கவலையே இல்லையோ* ...
"எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்
உனக்கு மரணமே இல்லையோ* ...
"எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்
உனக்கு மரணக் கவலையே/ மரணபயமே இல்லையோ* ... "அதுவே ஆத்மஞானத்தின் பலனாகும்" !!!
எதுதான் அந்த ஆத்மஞானம்?
-------------------------------
அதெல்லாம் இருக்கட்டும் !!! ஆத்மாவைப் பற்றிய அந்த ஞானம்தான் எது ? இதுதானே உங்கள் கேள்வி ?
எனக்கு எப்போதும் கவலையற்ற நிலையை தருகின்ற அந்த ஆத்ம ஞானம் தான் எது?
மீண்டும் பிறவா வரத்தை தருகின்ற அந்த ஞானம் தான் எது?
மனிதனாகப் பிறந்து இருக்கின்ற இந்த மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கு உதவுகின்ற ஞானம் எது?
இதுதானே உங்கள் கேள்வி?
பசித்தபின் உண்ணும் உணவில் தான் சுவை இருக்கும் !!!
*ஆத்ம ஞானத்தைக் பெற்றே ஆக வேண்டும் என்கிற தாகத்தை உங்களுக்குத் தந்து, தங்கள் அறிவுப் பசியை இப்போது தூண்டி இருக்கின்றேன் !!!*
No comments:
Post a Comment