Thursday, February 9, 2023

Sithargal secrets About human body

 சித்தர்களின் பாடல்களில் அவர்கள் ரசனையைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை. எளிய சொற்களுக்குள் உலகத் தத்துவங்களையே மறைபொருளாக வைத்து அவர்கள் பாடுகிற பாங்கு அற்புதத்திலும் அற்புதம்....


இந்த உடலைக் குறித்து சொல்லும் போது,
         பராபரத்தில் பரம் தோன்றி,
         பரத்தில் சிவம் தோன்றி,
         சிவத்தில் சக்தி தோன்றி,
         சக்தியில் நாதம் தோன்றி,
         நாதத்தில் விந்து தோன்றி,
         விந்துவில் சதாசிவம் தோன்றி,
         சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி,
         மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி,
         ருத்திரனில் விஷ்ணு தோன்றி,
         விஷ்ணுவில் பிரம்மா தோன்றி,
         பிரம்மாவில் ஆகாயம் தோன்றி,
         ஆகாயத்தில் வாயு தோன்றி,
         வாயுவில் அக்னி தோன்றி,
         அக்னியில் அப்பு தோன்றி,
         அப்புவில் பிருதிவி தோன்றி,
         பிருதிவியில் அன்னம் தோன்றி,
         அன்னத்தில் ரஸம் தோன்றி,
         ரஸத்தில் உதிரம் தோன்றி,
         உதிரத்தில் மாமிசம் தோன்றி,
         மாமிசத்தில் மேதை தோன்றி,
         மேதையில் அஸ்தி தோன்றி,
         அஸ்தியில் மச்சை தோன்றி,
         மச்சையில் சுக்கிலம் தோன்றி,
         சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது....

சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து
ஜலமயமாகிப் பின்
(1) ஏழாம் தினத்தில் குமிழியாகி,
(2) முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி,
(3) அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு அச்சு (சிரசு)உண்டாகி,
(4) தொண்ணூறாம் நாள் மாமிசம் திரண்டு மூட்டு (கை, கால்கள்) உண்டாகி,
(5) நூற்று இருபதாம் நாள் தண்டமாய்
நரம்பு, நாடி(கை, கால்களில் விரல்கள்) உண்டாகி,
(6) நூற்றி ஐம்பதாம் நாள் நவத்துவாரங்களும் உண்டாகி,
(7) இரு நூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கர்பத்தை சூழ்ந்து புரளும்.
(8) இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி நீட்டி, முடக்கி, தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு, பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
(9) இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி, அறிவுக் கண் திறந்து,
(10) முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல், நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே
பூமியில் ஜெனிக்கும் குழந்தை, நாடி, நரம்பிகளும், ஆறாதாரமும்,? ஐந்தெழுத்தும்,
ஐம்பத்தோரு அட்சரமும், பஞ்சபூத
தேவதைகளும் தூலச் சூக்குமத்துள்ளே
கொழுந்துவிடப் பேதையாம்......

கருவானது தன் செவ்விய இளங்காலை
முடக்கித் தலையுடன் சேர்த்து, ஓம் வடிவமாக
அமைந்திருக்கும் கருப்பைக்குள் சுமையாக
நின்று, வெளியேறத் திருவுள்ளங் கொண்டு,
முந்தித் தவம் கிடந்து, அன்னையின் வயிற்றில் நீங்கும் சுமையாகக் காத்திருக்குமாம்.....

இதையே திருமூலர்,
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
                 - பாடல் எண் 452.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில், எட்டாம்
தந்திரத்தில் இடம் பெற்றுள்ள "காயப்பை'
என்னும் பாடலில் பல நுட்பங்கள்
அடங்கியுள்ளன.

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.
               - பாடல் எண்2122

நம் உடம்பில் பல்வேறு "பை'கள் உள்ளன.
அவற்றுள் முதல் பை காயப்பை. அதாவது, புற
உடம்பாகிய தூல உடம்பைக் காயப்பை என்பர்.

அவற்றுள் இரண்டாவது பை மாயப்பை. மாயம்
என்பதற்கு மறைந்து எனப் பொருள் கொண்டு
மறைந்திருக்கும் சூக்கும உடம்பு என்பர்.
மூன்றாவது ஆனந்த மயகோசம் என்கின்ற
மற்றுமோர் பையாகும்.

இந்தப் பாடலில் வந்துள்ள சரக்குப்பலவுள
என்பதன் விளக்கத்தைத் திருமூலர் "இரதமும்'
எனத் தொடங்கும் பாடலில் (2125)
குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரதமும்,
உதிரமும், இறைச்சியும், தோலும், மேதையும்,
அத்தியும், வழும்பும், மச்சையும்,
சுக்கிலமும் ஆகிய ஒன்பதும் காயப்பையில்
உள்ள ஒன்பது சரக்குகளாம்.

(1) இரதம் - உண்ட உணவின் சாரம்
(2) உதிரம் - இரத்தம்
(3) இறைச்சி - உதிரம் பரவுவதற்கு இடமான
தசையும் நாரும்
(4) தோல் - ஊனை உள்வைத்துப் பாதுகாப்பாய்
மூடியிருப்பது
(5) மேதை - அறிவு விளக்கத்திற்குப்
பயன்படும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள
வெள்நிணம். இது நீர்மையானது. (சிலர்
கொழுப்பு என்பர்)
(6) அத்தி - எலும்பு
(7) வழும்பு - நிணத்திலிருந்து ஊறும்
வெண்மையான நீர்
(8) மச்சை - எலும்புக்குள்ளே ஓடும்
வழுவழுப்பான திரவம்
(9) சுக்கிலம் - வெண்ணீர் (பெண்களுக்குள்ள
சுரோணிதம்)

காயப்பை என்னும் தூல உடம்பில் உள்ள
ஒன்பதும் சரக்கும் சேர்ந்து உடல் எனக்
கொள்ளப்படுகிறது

ஏழு தாதுக்கள் என்பது  எதனால்?
உணவிலிருந்து,
ரத்தத்திலிருந்து மாம்ஸம்,
மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,
நரம்பிலிருந்து எலும்புகள்,
எலும்பிலிருந்து ஊன்,
ஊனிலிருந்து சுக்ரம்,
            இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம், சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.பிஅதை இயக்குமிடம்
இதயம். இதயத்தினுள் ஒரு அக்னி
உள்ளது. அதில் பித்தமும், பித்தத்திலிருந்து
வாயுவஜம் தோன்றுகிறது. அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது. இது இறைவனின் நீதி.

யஜுர்வேதம்
…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால்
ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.
ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.
இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.
மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.
ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.
ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு கண்கள், காதுகள்  உண்டாகின்றன.
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.
      தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும், தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும், இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும்
ஆகிறது. மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

யஜுர்வேதம்….. கர்ப்போபநிஷத் 3கர்பத்தில்
இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது
மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன. அப்போது
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும், பாபச்செயல்களையும்
உணர்கிறது. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும், பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்பட்டும், பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.
         திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.

நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன். யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான். பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.

அறு கோண நட்சத்திர சிவ தத்துவம் (contemporary shape of shivalinga) இதை உருவாக்கியவர் முருகன், இதைத்தான் சிவனுக்கு உபதேசித்ததாக கூறுவர். இதனால் தான் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார், விந்துவை யோக சக்தி (metaphysics) யால் உணர்ந்து அதன் வடிவத்தில் தான் வேல் உருவாக்கினார். அதனால் தான் வேல்தன்.. வேந்தன் என்றழைக்கப்பட்டார்... காமம் இல்லாமல் முனிவர்களின் பிறப்பேது?, எல்லாமே இறை என்றபின் முகம் சுழிக்க வேண்டிய எண்ணம் எப்படி ..




No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...