Friday, December 13, 2024

Bhagavat Gita

 True Knowledge guides a person on the path of righteousness and leads them to create more positive Karma which overrides past negative Karma, or in other words, burns Karma.

The following verses from Chapter 16 help greatly in understanding that wrong thinking leads to negative patterns.

श्रीमद्भगवत गीता
Srimad Bhagavad Gita
Chapter 16
दैवासुरसम्पद्विभागयोग – Devasura Sampad Vibhaaga Yoga
The Yoga of the distinction between Divine and Demoniacal qualities.

16:01
Shri Bhagavan Krishna said:
Fearlessness, purity of heart, steadfastness in Yoga and knowledge, alms-giving, control of the senses, sacrifice, study of scriptures, austerity and straightforwardness,
16:02
non violence, truth, giving up of anger, renunciation, peacefulness, not possessing crookedness, compassion towards beings, not coveting, gentleness, modesty, not being fickle,
16:03
vigour, forgiveness, fortitude, purity, absence of hatred, giving up of pride are qualities that belong to one born in a divine state, O Arjuna!
————————————————
16:04
Hypocrisy, arrogance, self-conceit, harshness and also anger and ignorance, belong to one who is born in a demoniacal state, O Arjuna!
————————————————
16:05
The divine nature is deemed for liberation and the demoniacal for bondage. Grieve not, O Arjuna, for you are born with divine qualities!
————————————————
16:06
There are two types of beings in this world—the divine and the demoniacal. The divine has been described at length.  Hear from Me, O Arjuna, of the demoniacal.
————————————————
16:07
The demoniacal do not know what to do and what to stay away from. They lack purity, right conduct and truth.
————————————————
16:08
They say that the universe is without truth, without a moral basis and without God. They also say that it has been brought about by mutual union, with lust for its cause.
———————————————
16:09
Holding this view, these ruined souls of small intellects and fierce deeds, come forth as enemies of the world for its destruction.
————————————————
16:10
Filled with insatiable desires, full of hypocrisy, pride and arrogance, holding evil ideas through delusion, they work with impure resolves.
————————————————
16:11
Giving themselves over to immeasurable fears and anxieties which end only with death, regarding gratification of the senses as their highest aim, and feeling sure that that is all,
16:12
bound by a hundred ties of hope, given over to lust and anger, they strive to obtain by unlawful means hoards of wealth for sensual enjoyment.
————————————————
16:13
“This has been gained by me today; this desire I shall obtain; this is mine and this wealth too shall be mine in future.”
————————————————
16:14
“That enemy has been destroyed by me and others also I shall destroy. I am the lord; I enjoy; I am perfect, powerful and happy”.
————————————————
16:15
“I am rich and born in a noble family. Who else is equal to me? I will sacrifice. I will give charity. I will rejoice,”— this is what they say as they are deluded by ignorance,
————————————————
16:16
Bewildered by many a fancy, entangled in the snare of delusion, addicted to the gratification of lust, they fall into a foul hell.
————————————————
16:17
Self-conceited, stubborn, filled with the intoxication and pride of wealth, they perform sacrifices in name, through ostentation, contrary to scriptural ordinances.
————————————————
16:18
Given over to egoism, power, haughtiness, lust and anger, these malicious people hate Me in their own bodies and those of others.
————————————————
16:19
These cruel haters are the worst among people and they are sinful. They are always thrown by me into demoniacal wombs life after life, in the cycle of life and death.
————————————————
16:20
Entering into demoniacal wombs and deluded birth after birth, not attaining Me, they thus fall, O Arjuna, into a condition still lower than that!
————————————————
16:21
Triple is the gate of this hell and destructive of the self – lust, anger, and greed. Therefore one should abandon these three.
————————————————
16:22
A man who is liberated from these three gates to darkness, O Arjuna, practises what is good for him and thus goes to the Supreme goal!
————————————————
16:23
He who, casting aside the ordinances of the Vedic scriptures, acts under the impulse of desire, attains neither perfection nor happiness nor the supreme goal.
————————————————
16:24
Therefore, let the Vedic scriptures be the authority in determining what should to be done and what should not be done. Having known what is said in the ordinance of the Vedic scriptures, you should now act here in this world.
————————————————
ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे
दैवासुरसंपद्विभागयोगो नाम षोडशोऽध्यायः || १६ ||
Hari Om Tat Sat

Monday, September 23, 2024

Guru zhanam

 உருவங்களை உள்ளத்தில் வைத்துக்கொண்டு

இறைவனைத் தேடுவதைக் கைவிடவேண்டும்!


உள்ளம் தூய்மை

அடைவதற்கான வழியைத்

தேடவேண்டும்.அறநூல்கள்

கூறிய மூலப்பிரகிருதி மாயையில்

கற்பிக்கப்பட்ட தத்துவங்களைக்

களைய வேண்டும்.


தத்துவங்களை நீக்கினால்

எஞ்சுவது மாயா மனம்.

அதற்குத் தொழில்கள் எதுவுமில்லை.

தானாக,மனமானது தனக்கு

ஆதாரமான ஆத்மாவில் ஒடுங்கிவிடும்.சீவாத்மா,

பரமாத்மாவில் கலந்துவிடும்.

தீரா பிறப்பு ஒழியும்!


 உள்ளத்தால் மனைவி,

மக்கள்,செல்வத்தைத் துறந்து, உடலால் மட்டும்

அவர்களோடு இணைந்து வாழ்ந்து

கொண்டு, இறைவனைத் தேடி

உணரமுடியுமானால் முக்தியை

அடைதல் எளிது.


கோவில் குளங்களுக்குச் செல்வதாலும், ஆண்டவனை

வழிபடுவதாலும், இறைவனை அடைய

முடியாது!


 உங்களோடு கூடி வாழ்கின்ற உறவுகள்

அவர்கள் அறியாமலேயே உம்மிடம் நடிக்கின்றனர்

என்பதை அறிவாயா? அவர்கள்

விரும்புவதைச் செய்யாமல் இருந்து

பாருங்கள் அனுபவத்தில் உணரலாம்.


கோவிகளில் பூசை செய்கின்ற

பூசாரிகளும், ஒரு சிலரைத்தவிர

மற்றவர்கள் நடிக்கின்றனர்

என்பதை அறிவாயா? அறிய வேண்டுமானால் அவர்களது தட்டுகளில் காணிக்கை ஏதும்

தராமல் தொடர்ந்து பாருங்கள்.

அவர்களால் உதாசீனப் படுத்தப்படுவதை எளிதில்

உணரலாம்.


 பசை எனப்படுகின்ற பணம் இல்லையாயின்

உறவுகளும்,மனைவி

மக்களும் இல்லை.


சமுதாயத்திலும் பிறரால் ஒதுக்கப்

படுவதை எளிதில் காணலாம்.

ஆனால், பிறப்பு எடுத்தமைக்குப்

பொருள் உண்டு.


பாசப்பற்றுக்களை

அறுக்க வேண்டும். உலக தத்துவங்களையும், உடல் தத்துவங்களையும் அறிந்து,

அவற்றை நீக்க வேண்டும்.

இறைவனை அடையும் திடவுணர்வு

வேண்டும். மீண்டும் பிறக்கக்

கூடாது என்கிற சிந்தனை வேண்டும்.

முடியுமா உன்னால்? முடியம் என்கிற

உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

உண்டு.


 பசி உணர்வோடு மட்டும்

திரிபவன் பைத்தியக்காரன் என்றால், இறைவுணர்வோடு மட்டும் அலையும் ஞானிகளும் பைத்தியக்காரர்களே!


எங்கிருந்து பிறந்தாய்?

ஏன் பிறந்தாய்? என்பதை அறியால்

வாழ்ந்து இறக்கும் நீயும் பைத்தியக்காரனே!


பிறந்ததன் காரணம் அறிந்தால்தானே மீண்டும் பிறக்காமல் இருக்கும் காரணத்தை

அறியமுடியும்!


போலியான பக்தியும், வழிபாடும்

உன்னைப் பிறவிக்குழியில்

தள்ளிவிடும். இறைவனையும்,

உன்னையும் நீ அறிந்தால்மட்டுமே

நற்கதி அடையமுடியும் என்பதை

மறவாதே!

Guru

 உலகிற்கு அறிமுகப்

படுத்திய தாய்,தந்தை

முதல் தெய்வங்கள்.

தந்ததால் அவன் தந்தை. 'தா',எனக் கேட்டுப் பெற்றதால்

அவள் தாய்.


கல்வி பயில அவர்கள் காட்டியது குருநாதனை.

அந்தக் குருநாதன் காட்டியவதே இறைவன்.


மாதா,பிதா,குரு, தெய்வம்

என்று வரிசைப் படுத்தியது

அறநூல்.


 பெயரும்,வடிவமும்

இல்லாத பரம்பொருளைச்

சுட்ட, தமிழ் மொழி

இட்ட பொதுப் பெயர்கள் வருமாறு:-


இறைவன்,

கடவுள்,

ஆண்டவன்,

அரன் எனும் பொதுச் சொற்களே அனைத்து மொழிகளிலும் நிலவுகின்றன.


பெயர்,வடிவம் இல்லா

கடவுள் ஒருவனே!

சமய மதங்கள் இட்டப்

பெயர்கள் கணக்கில!


ஒருவன் சிவன் என்கிறான்;

ஒருவன் நாராயணன் என்கிறான்.

இவ்வாறே சக்தி, கணபதி,

சூரியன் எனும் பெயர்கள்

வழங்குகின்றன.


இவை அனைத்தும் கற்பனைப் பெயர்கள்.

ஒரே கடவுளுக்கு வழங்குகின்ற பல பெயர்கள்.

Zhanam

 மனமாசுகளை நீக்கிய பிறகு,மீண்டும் அவை திரும்பப்பற்றாதவாறு

கவனமாக இருத்தல் வேண்டும்.


பரம்பொருள் ஒன்றே! அந்த

ஒன்றே உலகமாகவும், எண்ணிலடங்காத உயிர்களாகவும் வடிவெடுத்திருக்கிறது, எனும்

ஞானத்தில் உறுதிபெற்றிருக்க வேண்டும். அதனை நிறைஞானம் என்பர்.


மனத்தூய்மையை கெடுக்கின்ற குணங்கள் ஆறாகும். அவை காமம்,குரோதம்,உலோபம்,

மோகம், மதம்,மார்ச்சர்யம்

ஆகும்.அவற்றை தமிழில்,

ஆசை,சினம்,ஈயாமை,மயக்கம், செருக்கு, பொறாமை

என்று கூறுவர்.


அவை அனைத்தும் நீங்கப்

பெற்றவனே துறவி எனப்படுவான்.கருவி, கரணங்கள் நீங்கிய தொண்டனாகிறான். ஆத்ம

உணர்வு அவனுடைய உள்ளத்தில் ஒளிர்வது உறுதி ஆகிறது.


 மனிதனைத்தவிர அனைத்து உயிர்களும் ஓரறிவு முதலாக ஐந்தறிவினை உடையவை. மானிடர்க்கு மட்டுமே ஆறறிவு.


அதற்கான காரணத்தை அறியாமல் வாழ்நாளை வீணாளாக்குகிறான் மனிதன்.


உலகினை ஆய்ந்து, சாத்திரங்கள் கூறுவதைப் போன்று உலகமும்,அதனால் அமைகின்ற புறப்பற்றுக்களும் பொய்

என்பதை உணரவேண்டும்;

தான் அற்பஞ்சீவனல்ல!

பரமாத்மாவின் அம்சம் என

உணரவேண்டும். மாயா மனதைத் தூயமனதாக்கி

தன்னுள் ஒடுங்கும்படிச் செய்ய வேண்டும்; பரமாத்மாவோடு இணைய

வேண்டும். அதற்காக இறைவன் அளித்த நன்கொடையே அறிவு.


அறிவு, இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றறிவு; அது புறவுலக

வாழ்க்கைக்குமட்டுமே பயன்படும்.


மற்றொரு அறிவு, இறைவனை உணர்தல்;

அதற்கே ஞானம் என்று பெயர்.பேரறிவு எனப்படுவதும் அதுவே!

பொறி புலன்களால் மனம்

அறிந்துசெயல்படுவது புறவுலக அறிவு. பொறி புலன்களைக் கடந்து, மனமானது வெளியேறி,

அகவாழ்வின் மூலம் தன்னை ஆத்மாவில் ஒடுக்கிக்கொள்ளும். சீவனாக இருந்த ஆத்மா, சுதந்திர ஆத்மாவாக மாறி, பரமாத்தாவில் ஐக்கியமாதலே ஞானம்.

அதனைத்தான் மானுடம் பெறவேண்டும் என்பதே

படைத்தத் தலைவனின் நோக்கமுமாகும்.


கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பை, வீணாக்காமல் தன்னை உணர்க! தலைவனோடு இணைக! வாழ்த்துக்கள்!💐


 களிமண்ணால் பானை

வனையமுடியாது.

களிமண்ணை நீரில் பிசைய

வேண்டும். அந்த நீருக்கு இணையானது

கருணை எனும் சக்தி.அதற்கே

கருணாம்பிகை எனக் கற்பனையாக பெயரிட்டுள்ளனர்.


சிவமும் அவரது ஆற்றலாகிய

அருட்சக்தியும் ஒன்றே.நாத சிவம் இடைவிடாது ஒலித்துக்

கொண்டே உள்ளது.அந்த ஒலியே அநாகதம் எனப்படுகிறது. அந்த ஓசையின்

சிதரல்களே உலகமெங்கும்

ஒலிக்கின்ற ஓசைகளாகின்றன.

Shiva puranam secrets

 *🍀சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியங்கள் பற்றிய ஆய்வு 


🌹சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.


🌹சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான *சிவபுரத்தையும் கூறும் ஒரு சிவரகசிய புதையலாகும்.


 (இங்கு சிவபுராணத்தில் வரும்

 🔥சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்ற வரியை ஞாபகம் வைத்து கொள்ளவும்)


தினமும் நமக்கு 🔥இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.


🌹சிவபுராணத்தின் முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும் வரியை கவனிக்கவும்


🔥வா…ழ்….க, என்ற தமிழ்வார்த்தையில் "ழ்" என்ற எழுத்தை உச்சரிக்கும்போது மட்டுமே உள்நாக்கு வாயில் மேலண்ணம் வரை சென்று தொட்டுவரும்.


அதாவது நமது உள் நாக்கில் அமிர்தத்தை சுரக்கள் வைப்பதற்கு ஒரு எழுத்து உள்ளது.அது ""ழ்""  என்ற மெய்யெழுத்து.இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்.


😜("தமிழுக்கும் அமுது என்று பேர்,அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! 


 🌹எனவே உங்களுக்குள் அமிர்தத்தை இயற்க்கையாகவே சுரக்க வைக்க செய்யும் ஒரு துளியானது,உங்களது உள்நாக்கில் படர்ந்து இருப்பதை

உங்களது நாக்கு நுனியால் மடித்து வாயில் அண்ணாக்கு எனும் மேலண்ணத்தை தொடும்போது அமிர்தம் சுரந்து உங்களுக்கு பலம் கூடும்.


🌹இதனால் தான் இந்த சிவபுராணத்தை ஓதும் முன்பு உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்ம முகூர்த்தநேரத்தில் ஒதசொன்னார் வள்ளலார்.


🔥இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும்.அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய"வாழ்க வாழ்க" என சிவபுராணம் பாடலில் முலாவதாக வரும் ஆறு வரிகளை பாடவேண்டும்.


இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வலுபடுத்திய பின்பு அடுத்த நிலைக்கு செல்கிறோம்.


🔥 அடுத்ததாக சிவபுராணத்தின் ஆறாவது வரியிலிருந்து பத்தாவது வரி வரையில் 


"வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க,

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க,

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க,

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க,

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க" 


என்ற வரிகளில் "வெல்க வெல்க" என்று ஐந்து முறை அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிப்படுத்தி அடுத்த பகுதிக்கு செல்வோம்.


🔥இதற்கு அடுத்த வரும் ஐந்து வரிகளில்

"ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி"


என பாடும்போது நமது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வலுபடுத்த"போற்றி போற்றி" என கூறுகிறோம்.


🌹போ….ற்….றி இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும்.


இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வலிமையாகும்.


🌹அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம்,தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது.


இது புரிய வேண்டுமானால் மெய்யென்ற (உடம்புக்குரிய) எழுத்து அறிந்திருக்க வேண்டும். 


🔥மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் அதில் இறைவனை அடைய ஒரு எழுத்து இருப்பதை அறியலாம்.


நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும்.


 🔥அடியோ, வினையோ (சூட்சம) பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது.


பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.


🔥நான் செய்வினை,செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன். 


பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.


🙏சரி கீழ்கண்ட இரண்டு சொற்களை பற்றி ஆராய்வோம்.....


 *வாழ்க + போற்றி = 2 : ½ : 1(மாத்திரை அளவு)* மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான். 


ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு.


🔥போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வலிமையடையும்.


இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்


🌹உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி"


பிராண தேகம் வலிமையானது என்றால் நீங்கள் வலிமை மிக்கவர். 


இவ்வாறு சிவபுராணத்தை பாடும்போது ஸ்தூல,சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார்,


இப்போதான் நிற்க வைக்க முடியும். 


அவரிடமே அருள் பெற்று வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார்

இருபதாவது வரியில்,


அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், நான் சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க!


இப்படி மாணவன் தன் ஸ்தூல, சூட்சம தேகங்களை வலுபடுத்திய பின்பு சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.


🌹அடுத்து21வது வரி"கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார்.


உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற,படித்த பல விடயங்கள் அங்கு வரும்.


அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும்.


அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.


🌹இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான்.


இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.


அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல் 

🔥“விலங்கு மனத்தால் விமலா”


🌹 விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடப்படுவது.அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது. 


🌹மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது. அதை தக்க குரு மூலம் அறிக.🙏


🌹இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும்.


அது தான் சிவபுரத்தின் (பிராண உலகத்தின்) நுழைவுவாயில்.


அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்


 🌹அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார்.


இது எல்லாம் சிவ யோகத்தில் அபூர்வயோக சாதனை என கருத்தில் கொள்க


சிவபுரம் என்பது பிராண

உலகம்.


அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதை போல் இருக்கும்.


அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள்.


அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.


🌹முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும்.


🙏பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.


அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி அழைத்து செல்லுவர் என்கிறார்.


🙏இது முழுக்க முழுக்க என் அனுபவ சூட்சம யாத்திரை...


😜இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும்.


அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும்.


😜இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும்.


அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால் அங்கு பயணத்தில் குழப்பம் வரும்.


பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.

இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை.

அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும்.அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும், இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான்.

இந்த சூட்சம பயணம் இயல்பாகவே பல சமயத்தில் தூக்கத்தில் எனக்கு அன்னை சித்தர் குருநாதரின் அருளால் நடந்திருக்கிறது.


உங்களுக்கும் நடக்கும். 


ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகிறது பலருக்கு...


இங்கு நிறைய விஷயம் மறைப்பாக சிவ ரகசியமாகவே உள்ளது.ஆதலால் இது பயிற்சி அல்ல.

 

🌹 மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் கீர்த்தித் திருஅகவல் கூறியிருப்பார்.


இது அகவல் என்றால்,இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல்.


அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.


சற்று கவனிக்க !அதில் சிவபெருமானின் பெருமை அனைத்தையும் கூறி கடைசி இரண்டு வரியில் “பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான் "ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே


கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவன்தான்.


சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.


🌹இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி அடுத்து திரு அண்டபகுதிக்கு செல்கிறார்.


பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார்.


பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.


அதன் வழியாக சென்று பராத்மா எனப்படும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார்.


🌹இது வரைக்கும் உள்ள விடயங்கள் போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும் கூறுகிறார்.


அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.


இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம்.


🙏மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதியில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடல்களாக அடுத்த திருச்சதகம் என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார்.

 

இது தான் மிக முக்கியம்.இதை கவனமாக ஆராய்க.


🌹சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.


ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணும்போது என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என்பது கூறுகிறார்.


இது மிக முக்கியமான பகுதியாகும்.


1⃣சிவபுராணம் 

2⃣கீர்த்தித் திருஅகவல் 3⃣திருஅண்டப் பகுதி 

4⃣போற்றித் திருஅகவல் 5⃣திருச்சதகம் 


இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். 


அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும்.


அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும். 

அது என்ன என்கிறீர்களா?


அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய "ஞானதாழிசை" என்ற பாடல்கள் ஆகும். 


இதில் உள்ள மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே  மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோலாகும்.


இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம். இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ள வேண்டாம்.


(இது இந்த பதிவில் இல்லை என்பதால் இந்த *"ஞானதாழிசை"*யில் உள்ள மொத்தம் 12 பாடல்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனியாக பதிவிட்டுள்ளேன்.)


இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி.இதை படிப்பதால்  நாளுக்கு நாள் திருவாசகம் படிக்க ஆவல் கூடி கொண்டே போகும்.


மொத்தத்தில் ஒரே வரியில் இந்த பதிவின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்ல வேண்டுமானால்... 


🌹"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"


அவன் அருள் இருந்தால் தான் இந்த பதிவை கூட படிக்க முடியும்.இந்த சிவரகசியங்களை கூட அறிய முடியும்


திருசிற்றம்பலம்!ஓம் நமசிவாய!

Friday, August 23, 2024

Kundalini secrets

 சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி பற்றிய அபூர்வ குறிப்புகள்:-


(பல அபூர்வ  யோக நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட குண்டலினி சக்தி பற்றிய உண்மை  ரகசியங்களை நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக முழுமையாக இன்று  பதிவிடுகிறேன். அவசியம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.)


குண்டலினி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட  இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை  பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை  காண்போம்.


-திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர

உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,

 வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும்  இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல  துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை  வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.


நன்றாக கவனித்து பார்த்தீர்களானால்

 ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை

கொண்டுள்ளவை. ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை சித்தர்களின் பார்வையில் எதை கண்டேன் என்பதை மட்டும் இன்று  இந்த கட்டுரை சொல்லும்.


அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல்  பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில்  மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது. இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த  நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலினி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல். கைவசம் மூல நூல் இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள்  இங்கே.


"யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும்

அறியார்கள் ஓர் வாசல்

அது கடையோர முன்வாசல்......"

".....மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி

முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை

நோக்கி...."


நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவோம். அவை மூலம் முதல் துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம் உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா?

              மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல்ஆறு தளத்தை நோக்கி" என்ற வரி குறிப்பது அதுவே. பரஞ்சோதி மகான்  அவர்களின் "நான் கடவுள்" என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி  ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல்  ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என  கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது. மற்றும் இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி கிடையாது.


மேலே உள்ள அகத்தியர் பாடலில்

"முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"

          என கூறுவதும் இதை பற்றி தான்.


மேலும் சில பெயர்கள்:-

            ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம்,

சுழுமுனை , கரிமுகன்.

              சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்?


இந்த ஐயம்  உங்களுக்கு எழலாம். உண்மை தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் நான் அறிந்து  கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை இந்த தொடரின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.


நண்பர்களே, சித்தர்களின் குரலில் இன்றைய பதிவில்  நான் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,

சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள், குடம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலினி  பற்றிய செய்திகளை கொடுக்க முயல்கிறேன். பல உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு மேற்கோளாக  கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.....


நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர

மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று

 மண்டலங்கள் உள்ளன. இவை முறையே

பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய நாடிகளால் குறிக்க படுகின்றன.


ஒளவையின் விநாயகர் அகவல் பாடலை பார்ப்போம்.....


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."


நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை சார்ந்தே அமைந்துள்ளன.


நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம் வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு செல்லும். 


நமது உடம்பில் ஈசன் நுழை வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது  மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒருவாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம்  முன்னோர்கள் கொடுத்தார்கள்.


மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி

பின் விடுவது அல்ல இந்த பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது. நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல வாயுக்களை அடிப்படியாக கொண்டது.


உணவை செரிக்க ஒரு வாயு, குரல் எழுப்புவது ஒரு வாயு . கழிவுகளை வெளியே தள்ளுவது அபான வாயு இன்னும் பல....

     தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு. உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த  உடம்பில் இருக்கும்.


இப்போது ஒளவைவையின் பாடலை பார்ப்போம்.....

        இறைவன் ஒளவைக்கு குருவாக வந்து தீக்ஷை  அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத பட்டு இருக்கும்.


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..."


இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது  சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை  அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும்  இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான் காட்டுகிறானாம்.


"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."


"சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி"

என இதை படிக்க வேண்டும். 

         கபாலம்   எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது?


நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில்  இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய

 நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த

 நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்

 படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக

 பயிற்சிகளின் நோக்கம்.


இட கலை = சந்திரன்

பிங்கலை = சூரியன்

அக்னி கலை = சுழுமுனை


இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை,  பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக  வேண்டும்.


சரி எவ்வாறு உருவாக்குவது? 

         காற்றின்  மூலம். அதுவே "பிராணயாம பயிற்சி" என  முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து

 நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.


"மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்…"


மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர,

 அக்னி மண்டலங்களை குறிக்கிறது.

இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும் தூண் எது? 

       நான்றெழு பாம்பு என்கிறார் ஒளவை. பாம்பு என்பது குண்டலியை  குறிக்கும்.


இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.


நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை

கவனியுங்கள்.....


"ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை

ஈசன்தன் வாயிலில் ஏற்று"

                       - ஒளவை குறள்


"மூலத்து வாரத்து மூளு மொருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்

காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்

ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."

                       - திருமந்திரம்


"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)

லுறுப்புச் சிவக்கும் ரோமங்கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."

                        - திருமந்திரம்


முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது

பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய

இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை

 ஏற்ற வேண்டும். 


சித்தர்கள் "கால்" என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோக படுத்தி இருப்பார்கள்.


இரண்டாவது பாடல் = "காலுற்ற..."

மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை,  சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.


ஈரைந்து வாசலில்….


நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு +

ஐந்து. = பத்து. அவ்வை பத்து வாயில்களை

சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில்

 தானே நமக்கு தெரியும்?


அது என்ன பத்தாவது வாயில்? 


அதுவே ஈசன்

 வாயில் அல்லது மூல துவாரம்.


சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை ஏற்றுவது?


"மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"


நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ

 அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே  மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண  வாயு ஏறும்.


இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ...


நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின்

 எழுத்து?


நம் தாய் தமிழ் மொழியில்  ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.

           அது என்ன வென்றால் மொழியின்

எழுத்துக்களிலே இறைவனை பற்றிய ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ் மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பொதுவாக உண்டு. 


இவை இரண்டும்  ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ்  மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு.


உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து

இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு

 சென்று விட்டனர். அது மட்டுமா?


ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது.


நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம்

 இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து இருப்பீர்கள்?

        நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்

 நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை

 பார்த்து விட்டோம்.

ஆனால் ஆன்மாவை காணோமே?


ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே.

 அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது

தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில்  கூறுவார்.


"வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில்

குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில்

ஆச்சுதடி"


நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து  செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது?


கருவறை வாசல் பூசைக்கு முன் மூடி இருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம் காட்டுகிறார்கள். கூடவே மணியும் அடிக்கிறார்கள். 


பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம் தவத்திலும் நடக்கிறது.

இப்போது எழுத்துக்கு வருவோம்.


மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி"

          என்ற வார்த்தையை கூறி இருக்கிறார்.


"அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ +ஆச்சி). அவர்

 அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை

 தான் நண்பர்களே.


சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த எழுத்துக்கள்?


அ = பிங்கலை

உ = இடகலை

ம் = சுழுமுனை


இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.


8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்... தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக ரகசியமான தத்துவம் இது.


தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.

ஒளவை தன் ஞான குறளில் கூறுவார்.


"கூறும் பொருள் இது அகர உகாரங்கள்

...மகரம் குழல் வழி ஓடிட.." என வரும்.

அது ஏன் கூறும் பொருள் என கூற

வேண்டும்?

குரு வானவர் இடகலையையும்

பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.

இதையே தான் "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ..." விநாயகர் அகவலில்

கூறுகிறது.


"குரு வடிவாகி குவலயந்தன்னில்

திருவடி வைத்து..."

"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."

இதன் விளக்கம் பார்ப்போம்.


"எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்

 சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்

 செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே"


நடு நாடி = சுழுமுனை


சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர

 வேண்டிய நாடி நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து  இருப்பீர்கள்.


அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்?

           ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை எவ்வாறு இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.


சுழுமுனையின் இறுதி மலர் போன்ற மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம் என்று சொல்ல கூடியது அது தான். நமது தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும்.


சிவ பெருமானுடைய படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும்.


பிறை சந்திரன் இருக்கும்..  தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து  கொண்டு இருக்கும்.


நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம்.


சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை குறிக்கிறது. 

பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக வேண்டும். எவ்வாறு?


மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய் முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின்  மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில்  மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக  கிளர்ந்து எரிய செய்யும்.


இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை  மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.


மூல நெருப்பை இட்டு முட்டி நிலா மண்டபத்தில். பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது  எக்காலம்?

             - பத்திரகிரியார்.


அவ்வை "அமுத நிலை" என்ற ஒரு வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை  கீழ்வரும் பாடலில் கவனியுங்கள்.....


குண்டலி அதனிற் கூடிய அசபை

விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி.."


குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க

 கூடிய இறைவன்.


நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது சந்திர ஒளியை வாங்கி மலரும். இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான் என்பதை இந்த வாக்கியம் மூலம் மிக எளிதாக விளக்கி விடுகிறார்.


வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,

"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்"

என கூறுகிறார்.


இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர்

 தான். நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம்.


இந்த உலகம் உய்வதற்கு மிக முக்கிய கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும் அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும்.உருவாக்குவது இவை தான்.


சந்திரன் பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்?

          பெண்களின் வேறுவேறான பருவ

மாற்றஙகளுக்கு சந்திரனே காரணம். மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்

சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு.  ரா என்பது ராகுவையும் சி என்பது சிகி  அல்லது கேதுவையும் குறிக்கும்.

சாதகத்திற்கு குண்டலினி  என்ற பெயர் உண்டு.


நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக  இருந்தாலும் அவை ஒரு பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலினியை குறிக்கும்.


சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது?


சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின்  ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது. 


சூரியனின்  கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள். ராகு கேது

ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு

காரணமாகவும்  முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக

சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது இவை  சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது.


இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை ஆசான் மூலம் தெரிந்து கொண்டால் குண்டலினி அல்லது சிற்சபை எதுவென்றும் பிரபஞ்சத்தில்  எங்கோ ஒரு கேள்வி எழுப்பினால் எங்கிருந்தோ ஒரு விடை கிடைத்து விடும் !அந்த விடை  டி.வி. மூலம் வரும் ஒரு விளம்பரமாக கூட இருக்கலாம் உன்னித்து கவனித்தால் விடை வரும் வழி தெரிந்து விடும் ! மனம் தெளிவாகலாம்


சக்தி(பார்வதி) என்பது குண்டலினி (மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே(அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது(அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.


நாம் உட்கார்ந்து நமது உடலை உற்று நோக்குவோம். நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர் அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும். 


இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர் நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.


நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர் அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர். 


இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர். இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர். 


இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் கர்த்தா வாகிய விஷ்ணு என்றனர் நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும் இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்.


நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் கர்த்தாவாகிய சிவன் என்றனர் லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று 3சுற்று சுற்றிகொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் 5தலை பாம்பு என்றனர்.இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றிகொண்டுள்ளது,உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.


" சுவாசமது நீண்வருந் தோணி போல் அபானவாய்வு எழுந்தால் மாயாசக்தி நீளும் உதான்னுடைய பார்வையானால் கருவான சுவசலீலையாகுமே உயிர்வாழ்க்கை சுவாசம் என்று கூத்தனார் மனம்கிழந்தரே"


             

Sunday, July 21, 2024

Atom ⚛ scientific Truths

 அணுவே அனைத்துக்கும் அடிப்படை... கடவுளுக்கும் சரி கடப்பாரைக்கும் சரி



Atom ⚛ science

 Shiva Guru Spark Vasi Yoga 🧘‍♀️ 

அணுவே எல்லாமாக... எங்குமாக... எப்போதுமாக...


இம்மண்ணுலகில் பல்வேறு மனித இனங்கள் தோற்றத்தாலும், தன்மையாலும் செயலாலும் வெளிப்படையாகத் தெரிந்த போதிலும்; ‘உயரம்', ‘பருமன்', ‘உருவ அமைப்பு', ‘தோற்றப் பொலிவு', ‘உடல் வண்ணம்' ... முதலியவற்றில் மனிதர்கள் மாறுபட்டாலும், 

1) ‘குருதி அணு' (blood atom), 

2) ‘தசை அணு' (muscular atom),     

3) ‘நீர் அணு' (atom of water), 

4) நார் அணு (atom of muscular fibre), 

5) கொழுப்பு அணு (atom of fat), 

6) ஈரல் அணு (atom of Liver) எனும் ஆறிலும் வேறுபடுவதே இல்லை. எனவே, இம்மண்ணுலகின் பல பாகங்களில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்குரிய மருத்துவ முறையில் மிகப்பெரிய வேறுபாடுகள் தேவையில்லை.



Friday, July 5, 2024

Navagraha pariharam

 

நாடி முறையில் பரிகார சூட்சமம் 

__________________________


வகுப்பில் சித்தயோகியாரிடம் ஒருவர் சிறந்த ஜோதிடருக்கும் சாதாரண ஜோதிடருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார், அதற்கு சித்தயோகியார் அவர்கள்

 "எவர் ஒருவருக்கு அதிக கிரக காரகங்கள் தெரியுமோ , எவரால் கிரகங்களுக்கு புதிதாய் காரகங்கள் யோசிக்க முடியுமோ அவருக்கு நவக்கிரக சித்தி ஏற்பட்டு சிறந்த ஜோதிடராக விளங்குவார்" என்றார்.


கிரகங்களும் திசையும்


புதன் - வடக்கு

குரு & கேது - வடகிழக்கு

சூரியன் - கிழக்கு

சுக்கிரன் - தென்கிழக்கு

செவ்வாய் - தெற்கு

ராகு - தென்மேற்கு

சனி - மேற்கு

சந்திரன் - வடமேற்கு


சில கேரளத்து ஜோதிடர்கள் இந்த திசையை வைத்தும் அந்த கிரகத்தின் வேறு காரங்களை வைத்தும் தாந்த்ரீக பரிகாரங்கள் கூறுவர்.


உரைத்த பரிகாரங்களை சிந்தித்து பார்த்தால் நாடி ஜோதிட விதிகளை தான் பயன் படுத்தி உள்ளனர் என்று தோன்றுகிறது


கோயில் யானைகளை தேர்ந்து எடுக்க செல்லும் பொழுது எந்த யானை வடகிழக்கு (குரு+கேது) நோக்கி தூங்குகிறது என்று பார்த்து தேர்ந்து எடுத்தார்கள்.


திருமணம் ஆகாத ஆண்கள் மாதம் ஒருமுறை வீட்டில் தென்கிழக்கில்(சுக்கிரன்) வெல்லம் /கரும்பு சாப்பிட்டு வந்தால் திருமணம் நடக்கும்.


இது போல் திசையையும் கிரக காரங்களை  வைத்தும் பரிகாரம் செய்யலாம்


நன்றி

Saturday, June 15, 2024

Physical body secrets By sithars

 Shiva Guru Spark Vasi Yoga 🧘‍♀️ 

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.


வாதம் - 84

பித்தம் - 48

கபம் - 96

தனுர்வாயு - 300

சயம் - 7

பெருவயர் - 8

சூலை - 200

கண்நோய் - 96

சிலந்தி - 68

சன்னி - 76

கழலை - 95

சுரம் - 85

மகோதரம் - 7

தலைவீக்கம் - 5

உதிரநோய் - 16

பிளவை - 10

படுவன் - 11

பீலி - 8

உருவசியம் - 5

பேரறிகறப்பான் - 90

கெண்டை - 10

குட்டம் - 20

கதிர்வீச்சு - 3

மதிவட்டை - 5

சோலிநோய் - 16

இசிவு - 6

மூர்ச்சை - 7

வேலிநோய் - 46

மூலம் - 9

கழல்நோய் - 10

கடிவிசம் - 52

கிராணி - 25

பல் நோய் - 76

மாலை கண் - 20

அதிசாரம் - 25

கட்டி - 12

கிருமி - 6

முட்டு நோய் - 30

முதிர் நோய் - 20

சத்தி - 5

கல்லடைப்பு - 80

வாய்வு - 90

திமிர் நோய் - 10

மேகம் - 21

நீராம்பல் - 5

காதுநோய் - 10

விக்கல் - 10

அரோசிகம் - 5

மூக்கறுப்பன் - 10

கடிதோடம் - 500

குத்து வெட்டு - 700

கிரந்தி - 48

பொறிவிடம் - 800

துடிநோய் - 100

பிள்ளைநோய் - 100

குமிழி - 7

விப்புருதி - 18

விசபாகம் - 16

பிரநீர்க்கோவை - 200


மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன.

அவையாவன,


1. இடகலை

2. பிங்கலை

3. சுழுமுனை

4. சிகுவை

5. புருடன்

6. காந்தாரி

7. அத்தி

8. அலம்புடை

9.சங்குனி

10. குரு நாடி


மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,

1. இடகலை :- அபானன் (வாதம்)

2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)

3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.


அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு

நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்

வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்

சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து

முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி

அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி

உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே


- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.


இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:


1. காற்று

2. கருப்பு

3. பேய்

4. பிசாசு

5. பில்லி

6.சூனியம்

7. ஏவல்

8. செய்வினை

9. வைப்பு

10. கழிப்பு

11. மருந்து

12. கண்நேறல்


கைகண்ட அனுபவ மருத்துவம்!


*********************************


( #கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-


கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

***********************************


நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.

அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."


சில எளிய மருத்துவம்: !!!

***************************


வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.


இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.


கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.


டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.


தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.


வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.


தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.


ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.


அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.


கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.


கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.


குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.


தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.


ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.


வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.


தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.


பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.


வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.


காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.


மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.


கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.


காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.


பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.


வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.


நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.


மகளிர் மருத்துவம்

********************


திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.


திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.


ஆடவர் மருத்துவம்

*********************


ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.


குழந்தையர் மருத்துவம்

**************************


அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.


பொது மருத்துவம்

*******************


ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.


கால்நடை மருத்துவம்

***********************


கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.

2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்

குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாகும்

Tuesday, June 4, 2024

Parihaaram

 Shiva Guru Spark Trust 


நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!


1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படி படியாக குறையும்.


இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.


2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.


3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய 

பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.


4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, 


புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,


குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது 


,குருவின் ஆசிகள் கிடைக்கும்.


5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /கோவில் கட்ட இடம் வழங்குதல் தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.


6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் 


பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்


,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,


தொழு நோய் /குஷ்டம் கொண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது 


சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி  வரும். 


7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,


நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,


மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,


பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),


உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,


இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்


 செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.


8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,


புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,


புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )


நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில்,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.


9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,


இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,


குடி கெடுத்தவன் ,


குடிகாரன் ,


குரு துரோகி ,


பசுவை கொன்றவன் ,


சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது 


ராகு_கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .


இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )


10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,


பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,


வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,


இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.


இவைகள் பொதுவானவை


வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.


புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்..

Monday, May 27, 2024

Spiritual Eternal Truth

 


Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 

இறைத்தேடலில் உள்ளவருக்கு அவசியம் தேவைப்படும் புரிதல்கள்.*

*1.  இவ்வுலகிலுள்ள, எதுவுமே உன்னுடையதல்ல.*

*2.  இவ்வுலகிலுள்ள எவற்றாலும் உனக்கு மனநிறைவைத் தரமுடியாது.*

*3.  இவ்வுலகிலுள்ள அத்தனையும் (உடலுட்பட) ஐம்பூதங்களால், தோன்றி அழியக் கூடியவையே.*

*4.  இவ்வுலகிலுள்ள அனைத்தும் தற்காலிக இன்ப துன்பங்களைத் தரும் மாயை ஆகும்.*

*5. இவ்வுலகிலுள்ள இவ்விதமான இன்ப துன்பங்களைத் தரும் அத்தனையும், மனிதனுக்கு விறுப்பு-வெறுப்பைத் தரவேப் படைக்கப் பட்டுள்ளன. விருப்பு-வெறுப்பு தருபவையாகும் மனிதனுக்கு இன்ப துன்பங்களை தரவே படைக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த பிரபஞ்சத்தின் மாயை ஆகும் !!!

*6. இவ்வுலகில் வெறுப்பைத் தரும் எவற்றாலும் பாதிக்கப் படாத நிலைதான் ஆன்மீகத்தின் அடித்தளம். ஏனெனில் நம் மனம் ஆன்மாவில் நிலைப்பது ஆன்மீகத்தின் எல்லை !!!

*7. பிரச்சனைகளுக்கு காரணம் உன்மனமே என்றநிலைதான் ஆன்மீகத்தின் வளர்ச்சி.*

*8. பக்குவம் அடைந்த உன் மனமும் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை என்று உணரும்போதுதான், உன் ஆன்மீகம் முதிர்ச்சி அடைகிறது. கவலை, பயம், வெறுப்பு, கோபம் போன்ற சுய தண்டனைகள் தரும் உணர்வுகளிலிருந்து விடுபடுவது ஆத்ம ஞானத்தில் நிலை பெற்றதற்கான அடையாளம் !!!*

*9. ஆம், எதைப்பற்றியும், கவலை இல்லாத நிலையும்  எதைப் பற்றியும் பயப்படாத நிலையும், எதன் மீதும் வெறுப்பற்ற நிலையும், எவர் மீதும் கோபமற்ற நிலையும், உண்மையில் இவை தான் நிரந்தர சந்தோஷம் எனப்படுகிறது !!!

*10. எந்த ஒன்றை நீ அடைந்தால் உன் மனமானது,  நிறைவு / நிம்மதி பெருமோ, அந்த தன்னையறியும் அறிவே, ஆத்ம ஞானமாகும்.*

*11. எந்த-ஒன்றை நீ அடைந்தால், மரணத்தின்போது கூட, உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமோ, ... அது ஆத்மஞானமாகும் !!!*

12. மனிதன்  *ஆத்மஞானத்தை* அடைவதும், தன்னுள் என்றும  ஆனந்தமாக *இருப்பதும்,* ஜீவன் முக்தனாக *வாழ்வதும்,* சித்த புருஷனாய் *இருப்பதும்,* தன்னை தானே *உணர்வதும்,* தன்னுள் இருக்கும் இறையுணர்வில் *கலப்பதும்,* அந்த இறைவனே தானென *ஆவதும்,* இறுதியாக, மரணத்தின் போதுகூட *சந்தோஷத்தோடு,* பிரம்மத்தில் *ஐக்கியமாவதும்,* என ...  இவையே, மனிதப்பிறவியின் *பிறவிப்பயன்* எனப்படுகிறது.

       இதற்காகவே, *நாம் மனிதனாக* இந்த பூமிக்கு வந்துள்ளோம். அதில் *மிகப் பெரும் பகுதி* வீனாகிவிட்டது. எஞ்சியதோ, எவ்வளவு *சிறியதென அறியாத* சொற்ப வாழ்க்கையே !!! அதற்குள், *மனித லட்சியத்தை அடைந்துவிடு* என்று வேதங்கள் கூறுகின்றன !!!

       மனிதனும், "எது உண்மையான சந்தோஷம்" என்பதைப் புரிந்து கொள்வதில் அவன் *மிகப்பெரிய* தவறு செய்து விடுகின்றான் !!!

       தோன்றி *மறையக்* கூடிய நிலையற்ற  இன்பங்களை தரக்கூடிய (பணமே) *நிரந்தர* சந்தோஷம் என்று *நம்பி* விடுகின்றான் !!!

      700 கோடி  உலக மக்களையும்,   அவர்களிடமுள்ள செல்வங்களின் அடிப்படையில்,  தரவரிசைப்படி    பட்டியலிடுவோம். அதில் நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு இடத்தில்,  கீழேயோ, நடுத்தர மாகவோ, அல்லது மேலேயோ, இருக்கப் போகிறோம்.  இவ்வுலகில், சந்தோஷமாக இருக்க *மனம்தான்* தேவையே தவிர, *பணம் தேவையில்லை !!!* மனதில் *நல்லறிவு* தேவை. ஏனெனில், ஞானமே கவலையை நீக்கும் *கோட்டைச்சுவராக* இருந்து, நமக்கு *சந்தோஷத்தை* தருகிறது.

       சந்தோஷத்தைப் பெறுவதற்கு, ஒருவேளை, பணம்தான் தேவை என்றால், பணக்காரர்கள் *அத்தனை பேரும், கவலை இல்லாமல் தானே இருக்கவேண்டும்?* ஆனால், உண்மை நிலைமை *அவ்வாறும் இல்லையே !!!* மாறாக, சந்தோஷமாக இருப்பதற்கு ஏழ்மை தடை  என்றால், *ஏழைகள் அத்தனைபேரும் கவலையோடு தானே இருக்க வேண்டும்?* ஆனால் உண்மை நிலைமை *இவ்வாறும் இல்லையே !!!*

       தேவைகள் என்பது மனிதனுக்கு *என்றுமே தொடர் கதைதான் !!!* ஒரு தேவையை அடைகிறோமோ  இல்லையோ, அதற்குள்,மற்றொன்று முளைத்துக் கொள்கிறது !!! *அமிர்தமே* கிடைத்தாலும் கூட,  அது மனிதனுக்கு *மனநிறைவைத் தந்து விடுவதில்லை.*

       இதுவே பொருட்களைப் பற்றிய *நம்மனதின்* உண்மை புரிதல் !!!அதைப் புரிந்து கொள்ளாத  காரணத்தால் தான் பணத்தை தேடுவதையும் அவனால் *நிறுத்த முடிவதில்லை.* உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தேவைகள் *"என்றுமே தீராது"* என்பது கூட நமது மனதின் இயலாமையின் வெளிப்பாடே !*

       *எந்த ஒரு பொருளாலும் உனக்கு *மன நிறைவைத் தரவே முடியாது.* இதை புரிந்துகொள்ள முடியாததே உன் மனத்தின் *பலவீனம் ஆகும் !!!*

     *எந்த ஒரு பொருளை அடைந்தால் அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய வேண்டியதில்லை என்கிற நிலையை (மனநிறைவை) தருகிறதோ, அதுவே *ஆத்ம ஞானம் !!!*

     மீண்டும் கூறுகின்றேன்.  எந்த ஒரு பொருளை *அடைந்தால்* அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய *வேண்டியதில்லை* என்கிற நிலையைத் தருகிறதோ, அது ஆத்ம ஞானம் *மட்டுமே !!!*

     அதாவது பணத்தின் பின்னே *ஓடுக்கொண்டிருப்பதையே* நாம் நிறுத்த வேண்டுமானால், அது மனநிறைவால் *மட்டுமே சாத்தியமாகும் !!!* மனநிறைவு மட்டுமே ஆசைகளை அகற்றும் *சக்தி கொண்டது !!!* அதற்கெல்லாம் மிகப்பெரிய *ஞானம் வேண்டும் !!!*

     ஆம், ஆன்மீக சகோதரர்களே !!! மனநிறைவு கொண்டவனுக்கே *ஞானம் பிறக்கும் !!!*  அந்த ஞானமே அறியாமை விலக்கும் !!! அதன்பின்புதான்  *கவலைகள் மறையும் !!!* கவலைகள்  மறைந்தால் தானே சந்தோஷம் பிறக்கும்? சந்தோஷமாக வாழ்வது தானே வேதங்கள் கூறும் மனித லட்சியம் ?

      எவரேனும், ஒருவன் உன்னை *ஒரு சொல்* சொல்லி விட்டால், *மன-வலியாலும் அவமானத்தாலும்* எவ்வளவு வேதனைப் படுகிறாய் !!!  ஆனால், மானிடா *உனக்கு நீயே* கொடுத்துக் கொள்ளும் *சுய-தண்டனை தான்* கவலையாம் !!!

      முட்டாள்கள் தான் கவலைப்பட்டுக் *கொண்டு இருக்கிறார்கள்* என்றால், *புத்திசாலியான நீயுமா* கவலைப் படுவது? ஆட !!! *எடுத்துச் சொன்னாலாவது,* கவலைப்படுவதை *நிறுத்தலாமே !!!*

      *இயற்கையாகவே *கவலைப்படும் மனிதனை, கோபத்தோடு நீங்கள் முட்டாள் என்று சொல்லலாமா* என்று கேட்கிறீர்களா?*

      *என் கோபத்தின் காரணத்தை* புரிந்து கொள்ளுங்கள். கவலையானது *மோசமான மனநோய் !!!இந்த மனநோய் மனிதனை இருவகைகளில் கொன்றுவிடும் !!!*

      *(a)பைத்தியக் காரனாக்கிவிடும் !!! பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!(b)தற்கொலைக்கு தூண்டிவிடும் !!!பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!*

      *எனவே, இதற்கு தீர்வுதான் என்ன? கவலையற்ற வாழ்க்கையே மனித லட்சியம் !!!* 


*Shiva Guru Spark Trust* "Dharma surely clear all your Karma,Do consistently Dharma and evolve into higher self "

Thursday, May 23, 2024

Tamil Sithargal wisdom

 நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத்

தெரியாத உண்மைகள்.



சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.


நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?


"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.


என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.


வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....


ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!


பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...


அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...


இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!


சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?


சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)


அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)


மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)


மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)


இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...


சித்திரை (equinox) - புத்தாண்டு.

ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.

ஐப்பசி (equinox)- தீபாவளி.

தை (winter solstice) - பொங்கல்.


இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...


நமது முன்னோர்கள்  "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.


Shiva Guru Spark Trust 

Sunday, May 12, 2024

அபூர்வ உடல் கட்டு மந்திரம்

 அபூர்வ உடல் கட்டு மந்திரம்:-

-----------------------------------------------------


உடல் கட்டு மந்திரம் என்பது பூ


ஜைகள் செய்யும் பொழுது, பரிகாரம் செய்யும் பொழுது வெளியே செல்லும் போது எதிரிகள் கண்ணுக்கு தெரியாத தீய சக்தி தொந்தரவு இல்லாமல் தற்காத்துக் கொள்ள பயன்படுத்த படும் மந்திரம் ஆகும். 


உடல் கட்டு மந்திரம் பல உள்ளன. அதில் என்குரு பிரம்மரிஷி மலை அன்னைசித்தர் ஐயா அவர்கள் அடிக்கடி எப்போதும் சொல்லும் கருவூர் மாந்திரீகம் நூலில் கருவூர் சித்தர் சொன்ன ஒரு மந்திரம் பற்றி மட்டும் இன்று சொல்கிறேன்....


முதலில் குளித்துவிட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று குலதெய்வம், இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு பிறகு கையில் விபூதி அல்லது பூக்கள் ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு மந்திரத்தை 21 முறை கூறிவிட்டு வானத்தை நோக்கியும் பூமியை நோக்கியும் போட நாம் நம்மளை தற்காத்துக் கொள்ளலாம். 


மந்திரம் :-

------------------


ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் 

கணுக்கால் இரண்டும் கணபதி காவல் 

முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் 

துடை இரண்டும் துர்க்கை காவல் 

அரை ஆதி சிவன் காவல் 

வயுறு வைரவன் காவல் 

மார்பு மார்க்கண்டேயன் காவல் 

கழுத்து கந்தர்வன் காவல் 

உதடு உத்தமாதேவி காவல் 

பல்லு பரசுராமன் காவல் 

நாவு நாராயணன் காவல்       

கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் 

நெத்திக்கு நீலவர்ணன் காவல் 

தலைக்கு தம்பிரான் காவல் 

உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் 

என்னை கார்க்காவிட்டால், இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை காக்க நம சிவாய.....


 

Friday, May 10, 2024

Horai Secrets

 



எந்த ராசிக்கு எந்த ஹோரை... என்னென்ன பலன்கள்? ஹோரை என்றால் என்ன... 


ஜோதிடத்தில் பலவிதமான சூட்சுமமான முறைகள் இருக்கின்றன.


அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள்.


ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம்.


நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.


அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு.


ஹோரை என்பது ஒருமணி நேரம்.


ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம்.


பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்படுகின்றன.


ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி.


ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும்.


 இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.


உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன்.


அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும்.


செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும்.


வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.


பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம்.


அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.


எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.


எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?


சூரிய ஹோரை :


சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள்.


அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன்.


சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும்.


மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.


இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.


இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல.


 சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.


சுக்கிர ஹோரை:


களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி.


அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம்.


 வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது.


குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும்.


விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.


புதன் ஹோரை:


கல்வி - கலைகள் - நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன்.


வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம்.


கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம்.


சுப காரியங்கள் செய்யலாம்.


நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது.


பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திக்கூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.


சந்திர ஹோரை:


நவகிரகங்களில் மாதா காரகன் - மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன்.


வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.


இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம்.


இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.


குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும்.


வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.


பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.


சனி ஹோரை :


நவகிரகங்களிலே ஆயுள் - தொழில் - கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி.


சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.


 கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது.


உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது.


 தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.


குரு ஹோரை:


நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர்.


அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது.


ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.


 இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.


செவ்வாய் ஹோரை:


ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார்.


செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.


இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய்.


எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல.


இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.


எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?


மேஷம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


 பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.


ரிஷபம் - ஹோரைகள்:


சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும்.


குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும்.


புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது.


ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.


மிதுனம் - ஹோரைகள்:


சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும்.


புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும்.


சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.


கடகம் - ஹோரைகள்:


சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும்.


கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.


சிம்மம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.


அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.


கன்னி ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.


 அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.


துலாம் - ஹோரைகள்


பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.


விருச்சிகம் - horaigal:


சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும்.


கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.


தனுசு - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.


மகரம் - ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.


கும்பம் - ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


 பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம்.


 குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.


மீனம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும்.


 தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.


என்றும் இறைவன் துணையோடு

Shiva Guru Dr.V.Suresh 

Sunday, April 28, 2024

clearing Diseases from Body

 உங்களுக்கு வரும் உடல் வலிகளையும் நோய்களையும் உங்கள் எண்ணத்தாலேயே நீக்க முடியும் - பயிற்சி


படம் 1 – துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்கச் செய்யுங்கள்


பிறருடைய கஷ்டங்களையோ, நஷ்டங்களையோ மற்றும் பல நிலைகளைப் பார்த்தோம் என்றால் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?


படத்தில் (படம் – 1) காட்டியபடி காதிலே கையை வைத்துக் கொள்ளுங்கள்.


“ஓம் ஈஸ்வரா குருதேவா” உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வவை உடல் முழுவதும் எண்ணிச் சொல்லிக் கொண்டயிருங்கள்.


1.இதை அங்கே பாய்ச்சி

2.உங்கள் செவிக்குள் கொடுத்து

3.இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.


நீங்கள் இந்த மாதிரிச் சொன்னீர்கள் என்றால் இந்த உணர்வலைகள் அங்கே வரும்.


உடலில் எங்கெல்லாம் வலி இருக்கின்றதோ…, அந்த இடங்களிலெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்று இதே போன்று சொல்லி “நினைவைச் செலுத்தினால்… உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்”.


உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால் இதே மாதிரி கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படரவேண்டும், எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.


இன்றைய விஞ்ஞான உலகில் பெரும் துயரங்களும் தொல்லைகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது இதைப் போல உங்கள் உணர்வுக்குள் உங்களுடைய சொல்லைச் செவிகளைக் கொண்டு


1.அந்த அருள் உணர்வின் தன்மையை உந்தச் செய்து,

2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்க இது உதவும்.


இதைப் போன்று, உடலில் எந்த வலி வந்தாலும் சரி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணி வலி எடுக்கின்ற பக்கம் கண்ணின் நினைவைச் செலுத்தி உடலில் உள்ள வலி நீங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.


எங்கள் உடலில் உள்ள வாத நீர், பித்த நீர், விஷ நீர் அனைத்தும் இறங்க வேண்டும், “தரையிலே இறங்க வேண்டும்” என்று நீங்கள் எண்ணுங்கள். இவ்வாறு நீங்கள்

1.உங்கள் நினைவுகளை உங்கள் உடலில் வலி உள்ள இடங்களுக்குச் செலுத்தச் செலுத்த,

2.அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நீங்கள் நுகர,

3.உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த,

4.துரித நிலைகள் கொண்டு தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.

5.வேதனையிலிருந்து விடுபட முடியும்.


அருள் வாக்குப்படி “நீங்கள் இப்படிச் செய்யுங்கள்” என்று சொல்கின்றேன். யாம் சொன்ன முறைப்படி நீங்கள் இதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்து இதெல்லாம் வாக்குப்படி “சித்தம்தான்”.


யாம் கொடுக்கும் இந்த அருள் வாக்குகள் உங்களுக்குள் பதிவானபின் இதைச் செய்தால் உங்களுக்குள் வரும் எத்தகையை தீமைகளையும் அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.


ஆகவே, இதையெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் எடுத்துப் பழகுங்கள். 


படம் 2 – உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்


சிறிது நேரம் சுவற்றில் கையை வைத்துக் கொண்டு (படம் 2) அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி, எங்கள் உடலில் உள்ள நஞ்சின் தன்மைகள் (நோயை உருவாக்கும் உணர்வுகள்) நீங்க வேண்டும் என்று ஏங்கி இருந்தால் அது அனைத்தும் நீங்கிவிடும் (இறங்கிவிடும்).


உங்கள் உணர்வே டாக்டர் ஆகும். நீங்கள் டாக்டரிடம் போகவேண்டியதில்லை. கூடுமான வரைக்கும் சில சிரமங்களை மாற்றி அமைக்க முடியும்.


ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


படம் 3 – உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?


கண் பார்வை மங்கினால், உட்கார்ந்து காலை நீட்டிக் குனிந்து (படம் – 3) காலில் பெரு விரலைத் தொடவும். மூன்று முறையாவது செய்யவும்.


1.குனிந்து இருக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

2.அந்த நினைவு முழுவதையும் கண்ணிலே நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.

4.அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் மூச்சை அடக்கி, பின் மூச்சை விடவும்.


இதனால் சிறு மூளை பாகங்களுக்குள் உள்ள நுண்ணிய நரம்புகளுக்குள்ளும் இரத்த நாளங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாயும்.


இப்படிச் செய்து வரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க உதவும்.


குறிப்பு: இது மூச்சுப் பயிற்சி அல்ல. 


துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை எண்ணத்தின் மூலம் உயிரான ஈசனிடம் வேண்டி நம் உள் உறுப்புகளுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.


அதில் உள்ள விஷத் தன்மைகளை வேக வைத்து உறுப்பை உருவாக்கிய அணுக்களை உற்சாகப்படுத்தி அதை வீரியம் அடையச் செய்து உறுப்பின் இயக்கத்தைச் சீராக்குகின்றோம்.


இது உங்களால் முடியும். உங்கள் எண்ணத்திற்கு எவ்வளவு வலு இருக்கின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


காலை மடக்கிக் குனிந்து செய்யும் பயிற்சியைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது.


Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...