Monday, September 23, 2024

Guru zhanam

 உருவங்களை உள்ளத்தில் வைத்துக்கொண்டு

இறைவனைத் தேடுவதைக் கைவிடவேண்டும்!


உள்ளம் தூய்மை

அடைவதற்கான வழியைத்

தேடவேண்டும்.அறநூல்கள்

கூறிய மூலப்பிரகிருதி மாயையில்

கற்பிக்கப்பட்ட தத்துவங்களைக்

களைய வேண்டும்.


தத்துவங்களை நீக்கினால்

எஞ்சுவது மாயா மனம்.

அதற்குத் தொழில்கள் எதுவுமில்லை.

தானாக,மனமானது தனக்கு

ஆதாரமான ஆத்மாவில் ஒடுங்கிவிடும்.சீவாத்மா,

பரமாத்மாவில் கலந்துவிடும்.

தீரா பிறப்பு ஒழியும்!


 உள்ளத்தால் மனைவி,

மக்கள்,செல்வத்தைத் துறந்து, உடலால் மட்டும்

அவர்களோடு இணைந்து வாழ்ந்து

கொண்டு, இறைவனைத் தேடி

உணரமுடியுமானால் முக்தியை

அடைதல் எளிது.


கோவில் குளங்களுக்குச் செல்வதாலும், ஆண்டவனை

வழிபடுவதாலும், இறைவனை அடைய

முடியாது!


 உங்களோடு கூடி வாழ்கின்ற உறவுகள்

அவர்கள் அறியாமலேயே உம்மிடம் நடிக்கின்றனர்

என்பதை அறிவாயா? அவர்கள்

விரும்புவதைச் செய்யாமல் இருந்து

பாருங்கள் அனுபவத்தில் உணரலாம்.


கோவிகளில் பூசை செய்கின்ற

பூசாரிகளும், ஒரு சிலரைத்தவிர

மற்றவர்கள் நடிக்கின்றனர்

என்பதை அறிவாயா? அறிய வேண்டுமானால் அவர்களது தட்டுகளில் காணிக்கை ஏதும்

தராமல் தொடர்ந்து பாருங்கள்.

அவர்களால் உதாசீனப் படுத்தப்படுவதை எளிதில்

உணரலாம்.


 பசை எனப்படுகின்ற பணம் இல்லையாயின்

உறவுகளும்,மனைவி

மக்களும் இல்லை.


சமுதாயத்திலும் பிறரால் ஒதுக்கப்

படுவதை எளிதில் காணலாம்.

ஆனால், பிறப்பு எடுத்தமைக்குப்

பொருள் உண்டு.


பாசப்பற்றுக்களை

அறுக்க வேண்டும். உலக தத்துவங்களையும், உடல் தத்துவங்களையும் அறிந்து,

அவற்றை நீக்க வேண்டும்.

இறைவனை அடையும் திடவுணர்வு

வேண்டும். மீண்டும் பிறக்கக்

கூடாது என்கிற சிந்தனை வேண்டும்.

முடியுமா உன்னால்? முடியம் என்கிற

உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

உண்டு.


 பசி உணர்வோடு மட்டும்

திரிபவன் பைத்தியக்காரன் என்றால், இறைவுணர்வோடு மட்டும் அலையும் ஞானிகளும் பைத்தியக்காரர்களே!


எங்கிருந்து பிறந்தாய்?

ஏன் பிறந்தாய்? என்பதை அறியால்

வாழ்ந்து இறக்கும் நீயும் பைத்தியக்காரனே!


பிறந்ததன் காரணம் அறிந்தால்தானே மீண்டும் பிறக்காமல் இருக்கும் காரணத்தை

அறியமுடியும்!


போலியான பக்தியும், வழிபாடும்

உன்னைப் பிறவிக்குழியில்

தள்ளிவிடும். இறைவனையும்,

உன்னையும் நீ அறிந்தால்மட்டுமே

நற்கதி அடையமுடியும் என்பதை

மறவாதே!

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...