Sunday, May 12, 2024

அபூர்வ உடல் கட்டு மந்திரம்

 அபூர்வ உடல் கட்டு மந்திரம்:-

-----------------------------------------------------


உடல் கட்டு மந்திரம் என்பது பூ


ஜைகள் செய்யும் பொழுது, பரிகாரம் செய்யும் பொழுது வெளியே செல்லும் போது எதிரிகள் கண்ணுக்கு தெரியாத தீய சக்தி தொந்தரவு இல்லாமல் தற்காத்துக் கொள்ள பயன்படுத்த படும் மந்திரம் ஆகும். 


உடல் கட்டு மந்திரம் பல உள்ளன. அதில் என்குரு பிரம்மரிஷி மலை அன்னைசித்தர் ஐயா அவர்கள் அடிக்கடி எப்போதும் சொல்லும் கருவூர் மாந்திரீகம் நூலில் கருவூர் சித்தர் சொன்ன ஒரு மந்திரம் பற்றி மட்டும் இன்று சொல்கிறேன்....


முதலில் குளித்துவிட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று குலதெய்வம், இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு பிறகு கையில் விபூதி அல்லது பூக்கள் ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு மந்திரத்தை 21 முறை கூறிவிட்டு வானத்தை நோக்கியும் பூமியை நோக்கியும் போட நாம் நம்மளை தற்காத்துக் கொள்ளலாம். 


மந்திரம் :-

------------------


ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் 

கணுக்கால் இரண்டும் கணபதி காவல் 

முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் 

துடை இரண்டும் துர்க்கை காவல் 

அரை ஆதி சிவன் காவல் 

வயுறு வைரவன் காவல் 

மார்பு மார்க்கண்டேயன் காவல் 

கழுத்து கந்தர்வன் காவல் 

உதடு உத்தமாதேவி காவல் 

பல்லு பரசுராமன் காவல் 

நாவு நாராயணன் காவல்       

கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் 

நெத்திக்கு நீலவர்ணன் காவல் 

தலைக்கு தம்பிரான் காவல் 

உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் 

என்னை கார்க்காவிட்டால், இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை காக்க நம சிவாய.....


 

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...