🌲🌴🌸🌞🏵️☘️⭐🔥🌹🌷🙏
தயவு ஒளி தெய்வீக சிந்தனை
🔥 *அணுவில் ஆண்டவன்*🌹
🌹🦚 நாம் கண்ணால் காணும் இந்த மாபிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூத அணுக்களால் ஆனது.
இந்த அணுக்கள் எல்லாம் ஜடமே! இவைகளுக்கு "இருப்புணர்வு" கிடையாது.
இந்த பிரபஞ்ச வெளியில் அனந்தம் கோடி கோடி ஆன்மாக்கள் அனாதி காலமாகவே இருந்து வருகின்றன.
இந்த ஆன்மாக்கள் தனித்தனி ஒன்றிற்கும், *அணு* என்றே மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த
*ஆன்ம அணுக்கள்*, அருவமானது; கண்ணால் காண முடியாது.
எல்லாம் வல்ல கடவுள், அகண்டாகச வான் பெருவெளி முற்றும், *பரமாகாச சொரூபியாக* நிறைந்துள்ளவர். அவரே, தன்னைத்தானே அனுபவிக்கும் பொருட்டு, அனந்தங் கோடி ஆன்ம அணுக்களாய் அனாதியே தோற்றம் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு தனித்தனி ஆன்ம அணுவும், அகண்ட வான்பெருவெளி முற்றும் நிறைந்துள்ள கடவுள், *இயற்கை உண்மையை* தன்னுள் கொண்டதாகும்.
ஆண்டவருக்கு, அகல் வான்வெளி நிறைந்த பரமாகாச சொரூபம் கடவுளின், "பெருவடிவம்" ஆகும்.
ஆன்ம அணு கடவுளுடைய, "சிறு வடிவம்" ஆகும்.
இரண்டும் கடவுளுடையதே! இந்த ஆன்ம அணு,
*அகண்டாகாச நிறைவிலே சிற்றணுவான , கடவுள் ஆன்மா* எனப்படும்.
எனினும், இந்த ஆன்மாக்கள் இயற்கையிலே, *"அறியாமை என்கின்ற அஞ்ஞான , பாசாந்தகார இருளில் மூழ்கிக் கிடந்துள்ளதாம். இதையே, *ஆணவ மலம்* என்பர்.
தன்னை உணராது அஞ்ஞான ஆணவ இருளில் ஜடம் போல் கிடந்த ஆன்மாக்களை, *அகம் விழிப்படைய* ஆண்டவர் திருவுள்ளம் கொண்டார்.
அதற்கு புறநிலையில் இருந்துதான் அறிவுணர்வை சிறிது சிறிதாக உண்டுபண்ண வேண்டியிருந்தது.
அதற்காக பஞ்ச பூதங்களால் ஆன பௌதிக உடம்பில்( physical body) ஆன்ம அணுவை சேர்க்கின்றார்.
ஆன்ம அணுவுக்குள் கடவுள் பரிபூரணமாக, உள்ளொளியாய் இருந்து, தனது *அருட் சக்தியால்* , அகத்தில் உள்ள பெருஞ்ஜோதி நிலையை புறத்தில் விரித்து, பஞ்ச பூத மாபிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றார்.
ஐம்பூத அணுக்களின் கூட்டுத் தொகுப்பே , ஆன்மாவுக்கு சூழ் உடம்பாய் அமைகின்றது.
ஆன்ம அணுவுக்குள்ளிருந்து, திருவருட் சக்தி, *உயிராற்றலாய்*, விரிகின்றதும் , அதே நேரத்தில் , பஞ்ச பூத அணுக்கள் சேர்ந்து உடல் உருவமாய் சூழ்கின்றதாம்.
ஆணவ மலம் மாத்திரம் உடைய ஆன்மாக்களுக்கு, பிற்சேர்க்கையாக,
*கன்ம மலத்தையும், மாயா மலத்தையும்* கூட்டி , புற உலக வாழ்வை ஏற்படுத்துகின்றார்.
அப்படி நமக்கு வந்த முதல் தேகம் , ஓரறிவுடைய தாவர வர்க்கமாகும். அதாவது , புல், பூண்டு, செடி, கொடி, மரம் முதலியன.இதிலே எத்தனையோ லட்சக்கணக்கான வகையுண்டு.ஒவ்வொரு வகையிலும் செலுத்தி , தொட்டால் உணர்ந்துக் கொள்ளும்,"ஸ்பரிச அறிவை" , அனுபவப்படுத்துகின்றர்.
.இதற்காக பல இலட்சக் கணக்கான வருடங்கள் கடந்து போகின்றன.
தொட்டால் சிலுங்கி செடியைப் பார்த்திருப்போம் நாம். அதைத் தொட்டால், தனது இலைகளை மூடிக்கொள்ளும்.இப்படி தொடு அறிவு முற்றுப் பெற்ற பின், சுவையை உணரக்கூடிய ஈரறிவு தேகங்களில் செலுத்துகின்றார்;
உதாரணம்:- சங்கு, சிப்பி முதலிய இலட்சக்கணக்கான வகையுண்டு.அதிலெல்லாம் நெடுங்காலம் வாழ்ந்த பிறகு,
வாசனையை அறியும் , மூவறிவு தேகத்தில் செலுத்துகின்றார் கடவுள்.உதாரணம்:- ஈ, எறும்பு, கொசு, வண்டு, தும்பி முதலிய இலட்சக்கணக்கான வகை உயிரினங்கள்.அந்தந்த தேகங்களிலெல்லாம் எவ்வளவோ இன்ப துன்பங்களை அனுபவித்தபின்,
பார்வை அறிவுடைய தேகங்களில் செலுத்துகின்றார். உதாரணம்; மீன், தவளை, பல்லி, பாம்பு, ஓணான் முதலிய இலட்சக்கணக்கான வகைகள்.பல இலட்சக்கணக்கான வருடங்கள் அந்த தேகங்களிலெல்லாம் வாழ்ந்து வாழ்ந்து, எவ்வளவோ இன்ப துன்பங்களை, அனுபவித்து அனுபவித்து வந்தபின்,
கேட்கும் அறிவுடைய(சப்த அறிவு) தேகங்களில் செலுத்துகின்றார்.உதாரணம்;-எலி, பூனை, நாய், நன்றி,ஆடு,மாடு, குதிரை, யானை, புலி,கரடி,சிங்கம்,மான் முதலிய இலட்சக்கணக்கான உயிரின வடிவங்களிலெல்லாம் , எல்லையில்லாத சுக துக்க அனுபவங்களை பெற்றபின், மனம் என்கின்ற ஆறறிவு தேகமாகிய, உயர்ந்த அறிவுடைய மனித தேகத்தில் செலுத்துகின்றார்.
ஆரம்பத்தில் ஆதிவாசியாய், காட்டுவாசியாய், கள்ளனாய், கொலை புரிபவனாய் வாழ்ந்திருந்தோம்.
அப்போதெல்லாம் செய்த கர்மவினையினால், பார்வை இழந்தவராக, கை கால் முதலிய உடல் உறுப்புகள் குறைந்தவராக பிறந்து பிறந்து, பல்வேறு வகையான இன்பதுன்பங்களை அனுபவித்து அனுபவித்து இறந்து இறந்து வீண்போயினோம்.
இத் தருணம் தான் உள்ளிருக்கும், உள்ளொளியாகிய கடவுள், ஆன்மா வானது, தன்னை அறிந்து இன்பமுறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் தந்துள்ளார்.
நாமும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
தன்னையும், தனக்கு ஆதாரமான தலைவனையும் அறிந்து, பேரின்பப் பெருவாழ்வில் வாழ ஆண்டவர் ஆணை செய்கின்றார்.
🌹🌳இப்போது இறைவன் எங்கே உள்ளார்?
அவரை அறிந்து கொள்வது எப்படி?
எந்தவிதமான பயிற்சியும் முயற்சியும் செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம்:---
🦚🦜இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். எனினும், அவரை, புறத்தில் (புற உலகத்தில்) எங்கு எவ்வளவு காலம் தேடினாலும் கண்டுக்கொள்ள முடியாது.
🌹🍎 *உன்னைப் பார்; உனக்குள்ளே என்னைப் பார் ; ஊரைப் பார்த்து உழலாதே*!! என்று வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆகிய ஆண்டவரே கட்டளையிடுகின்றார்.
எனவே, முதலில் நம்முடைய ஆன்மாவை உணர்ந்துக் கொள்ள வேண்டும். *நாமாகிய ஆன்ம அணுவை உணர்ந்துக் கொண்டால், ஆன்மாவிற்கு உள்ளிருக்கும் உள்ளொளி யாம் கடவுளை உணர்ந்து கொள்ளலாம்*!!!
🌹🦚 நாமாகிய அந்த ஆன்மா இந்த தேகத்தில் எங்கு உள்ளது?
❤️🌴உச்சிக்குக் கீழே, அண்ணாக்குக்கு மேலே, புருவமத்திக்கு நேரே, தலைநடுவில், இந்த ஆன்ம அணு, சதா
*நான்- நான்* என, "நான் இருக்கின்றேன்" , என,
*அறிவு சொரூபமாய்--அறிவு ஆகாயமாய் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றது*!
** அந்த ஆன்மப் பிரகாசத்திற்கு உள்ளே தான் , *அருள் விளக்காய்* ஆண்டவர் கோடி சூரியப்பிரகாசத்தோடு ஒளி விட்டுக் கொண்டிருக்கின்றார்.
🌹🍎🦚 பெருமூளைக்கு கீழேயும், உண்ணாக்குக்கு மேலே உள்ள , உரல் போன்ற ஒரு குழி உள்ளது.அதை ,
"ப"கர வடிவக்குழி என்பர்.( Cerebrospinal cavity).
அந்த குழிக்கு மேல்தான் இந்த, நித்தியமான, *அருட் ஜோதி ஆன்ம அணு* சதா பிரகாசித்துக் கொண்டுள்ளது.
🌹🦚இந்த ஆன்ம அணுவை, பேரானந்த-சச்சிதானந்த- நித்தியானந்த நமது ஆன்ம சொரூபத்தை அறிந்துக் கொள்ள ஒரு பயிற்சியை வள்ளலார் குறித்துள்ளார்.
அது;-------
🌹🦚 எப்போதும் நமது மனதை புருவமத்தியில் செலுத்த வேண்டும் என்கின்றார்.
இதய ஸ்தானத்தில் இயங்கும் மனதை மேலேற்றி, நினைப்பு மறப்பின்றி, அகமுகமாக உள்நோக்கி செலுத்தி ஆழ்ந்து பார்த்தால், ஆன்மாவின் இருப்புண்மை சிறிது சிறிதாக வெளிப்பட்டு விளங்கும்.
பின்பு, அப்படி பெறப்பட்ட , *ஆன்ம அறிவைக் கொண்டு உள்ளொளி யாக உள்ளே உள்ள அருட்பெருஞ்ஜோதி இறைவனை அறியவேண்டும்*!!
*** இப்படி புருவமத்திய தியானத்தை நாளும் பயின்று வந்தால், ஆன்மாவையும், உள்ளிருக்கும், அருள் ஒளிக் கடவுளையும் அறிந்து, பேரின்ப வாழ்வில் என்றும் வாழ்வோம்.
🌹🌞உள்ளிருந்து உதவி;-----
* திருவருட் பிரகாச வள்ளலார்.
No comments:
Post a Comment