Sunday, February 23, 2020

Science of Breathing Shiva Guru Spark Vasi yoga

#நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. அவை தொடர்பாக சித்தர்கள் சொன்ன ரகசியங்கள்.....

1. உயிர் காற்று (பிராணன்) - மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.

2. மலக் காற்று  (அபானன்) - கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.

3. தொழிற் காற்று (வியானன்) - நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை                                      கொண்டுசெல்லும்

4. ஒலிக் காற்று (உதானன்) - இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை                                     வெளிப்படுத்தும்

5. நிரவுக் காற்று (சமானன்) - சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில்                                                கொண்டுச்சேர்ப்பது.

6. விழிக் காற்று (நாகன்) - பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை                                         தூண்டக்கூடியது

7. இமைக் காற்று (கூர்மன்) - கண்ணீரை வரவழைத்த்ல், சிரித்தல் போன்றவைகளுக்கு                           காரணமாக உள்ளது.

8. தும்மல் காற்று (கிருகன்) - நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம்

9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) - கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம்

10.வீங்கக் காற்று (தனஞ்செயன்) - கோமா (நினைவற்றநிலை), உடலை                                          வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக் காரணம்

#இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

●  முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.

●  வைரவன் - கபத்தை உருவாக்கும்.

●  அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்.

●  பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன்தான் சுவாசம்                   நடக்கிறது.

#மேற்கண்ட முக்கியமான் பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது என்ன செய்துக்கொண்டிருக்கும்?

#முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்துக்கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால் உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. #இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து 40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன் அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன.

#அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான் இயற்கை.

#இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும்,நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல்  இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

#இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக் கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் 'டப்' என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே சாபமிட்டு) வெளியேறும்.

#இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.

#சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள். தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும்.

#ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித

வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன் விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வரயியலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச் சொல்கிறார்.

#இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான் தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும் !!! 💥

Monday, February 10, 2020

Mind is God

💥Make mind as your Guru, God, Eternal Life partner 🌹

 * What is mind?
 * Where is the mind?
 * How many types of mind is there?
 * How does the mind work?
 * How does the mind record our thoughts?
 * How does our thoughts work in the mind?
 * How do thoughts of the mind change into circumstances?
 * How to eradicate negative and needless thoughts in the mind?
 * Reprogramming the positive and necessary thoughts in the mind?
 * What is the connection between the mind and our breathing?  How does it work?
 * How to turn the mind on and off?
 * During Vasai Yoga or Meditation, how does the mind work?
 * How can we make up our minds and work the minds of others?
 * Is it possible to create mindlessness?
 * What happens to man when he is depressed?
 * What is the connection between the human brain and the mind?
 * How does the human brain and mind work together?
 * If we regulate the movement of the mind, is it possible to make our lives as we wish?

 Each of these questions must be answered.

 We try to be interested in all things that are external to us.

 But we do not know the mind that determines our lives, which is the basic source of all things, travels with us all our lives.  We have no choice.

 Those who know the mind, have achieved great successes in life.

 Learn about the mind and its movement.  Create successful and prosperous conditions in life.  Live happily ever after.

 🕉️Shiva Guru Spark Vasi yoga 🔯

Friday, January 31, 2020

Diet 6

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

*Day 6⃣ - நீர் விரதம்:*
💧  *ஆரா குடிநீர்:*
இன்று முழுவதும் மண் பானையில் ஒரு பத்து லிட்டர் நீரை  இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வைத்துக்கொண்டு தாகமோ பசியோ எடுக்கும்போதெல்லாம் இந்த சத்து நீரை மட்டுமே குடியுங்கள்.!
வேறு எதுவும் உண்ண வேண்டாம்.!

🍒  *இரவு:6.30 PM*
கொஞ்சம் பாசிப்பருப்பை (பாசிப்பயறு அல்ல) 30 நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன்,
1கேரட்,
1 வெள்ளரி,
சிறிது மாங்காய்,
சிறிது தேங்காய் துருவல்,
சின்ன வெங்காயம்,  பச்சை மிளகாய்,  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிப்போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து Pepper & salt போட்டு கலந்து பின் சாப்பிடவும். 

பின்னர் பசித்தால்  ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.



Diet 7

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

*Day7

🍒  *காலை:*
*7.30 மணிக்கு* இளநீரில் 1 டம்ளர் புதினா ஜூஸ்  கலந்து குடிக்கவும்.

*8.30 மணிக்கு ஆரா Smoothie:*
அரை மூடி தேங்காய் துருவி பால் எடுத்து அதை மிக்ஸியில்ஊற்றி அதில் 1 வாழைப்பழம், 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் (அக்ரூட்) கொஞ்சம், பிஸ்தா கொஞ்சம் 4 கருப்பு பேரீச்சம்,  பாதாம் பிஸின்போட்டு கலந்து குடிக்கவும்.

*Note:*
Badam pisin to be soaked the previous day night
Sabja seeds optional during summer.  It has to be soaked for 30 min before grinding.

🍒  *மதியம்:*
சிகப்பு அவல் ஊரவைத்து அதில் அரைமூடி தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும். பின் 5 கருப்பு பேரிட்சை.

🍒  *இரவு:*
கொய்யா, ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, கலந்த fruit salad.

Diet 8

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒


🎶 *Day 8

🍒  *காலை:*
*7.30 மணிக்கு
*ஆரா ஜூஸ்*
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை,
ஒரு விதைநீக்கிய நெல்லிக்காய்
1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி,
பாதி எலுமிச்சம் பழம் தோலோடு,

அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து
வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.
தண்ணீர் கலந்தும் குடிக்கலாம்.  தண்ணீரில் கலக்கும் போது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.

 8.30.மணிக்கு
ஆரா Skin lighting juice * 
1 கீத்து மஞ்சள் பூசனிகாயை தோல் சீவி துண்டுகலாக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பாதி Lemon பிழிந்து, கொஞ்சம் (10) புதினா இலை சேர்த்து இந்துப்பு உப்பு சேர்த்து 1 டம்லர் நீர் ஊற்றி அரைத்து  எடுத்து வடிகட்டாமல் குடிக்கவும்.

🍒  *மதியம்:*
ஆரா க்ரீன் சாலட்
1 துண்டு சுரக்காய் (அல்லது) வெள்ளை பூசனிக்காய், 1 துண்டு வெள்ளரிக்காய், 1 சிரிய குடை மிளகாய், 1 நெல்லிகாய் அல்லது மாங்காய், 1 கைப்பிடி கொத்த மல்லி இலை காம்புடன், 1பச்சை மிளகாய், 5 புதினா இலை துண்டுகளாக நருக்கி Lemon பிழிந்து மிளகு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

ஆரா வெஜ் ஜூஸ்
1கேரட்,1 சிரிய பீட்ரூட், 1 தக்காளி, 1 இன்ஞ் அலவு இஞ்சி தோல் சீவி, 10 புதினா இலை சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 டம்லர் நீர்  ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்து பின் Lemon பிழிந்து உப்பு சேர்த்து  குடிக்கவும். (அலுவலகம் செல்வோர் தயாரித்து எடுத்து செல்லலாம்)


🍒  *இரவு:*
*ஆரா க்ரீன் ஸ்மூத்தி*
1 ஆப்பிள்,  1துண்டு வெள்ளரி, சிரிது கொத்தமல்லி இலை, 1 சிரு துண்டு இஞ்சி,  3 Spoon சப்ஜா விதையுடன் மிக்ஸியில் தேங்காய் நீர்/இளநீர் ஊற்றி திக்காக அரைத்து பருகவும்.


Diet 9

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒


🎶 *Day 9

🍒  *காலை:*
*7.30 மணிக்கு:*
 ஆரா ஜூஸ்

*8.30 மணிக்கு:*
*ஆரா நட் மில்க்*
5 பாதாம்,
5முந்திரி,
2 அக்ரூட்,
 5 பிஸ்தா,
2 ஏலக்காய்,
3 பேரீட்சை,
இவை அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துப் பின் அரைமூடித் தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் குடிக்கவும்.



🍒  *மதியம்:* ஆரா பார்லி சாலட்
பார்லி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து சாதம் போல் வடிக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து இத்துடன்
1 கேரட்,
சிறிய துண்டு கோஸ்,
சிறிது வெள்ளரிக்காய் ஊறவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி
1 கைப்பிடி மாதுளை
 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது உப்பு சிறிது,
மிளகுத் தூள்,
 1 Spoon செக்கு தேங்காய் எண்ணெய்,
அரை எலுமிச்சைப் பிழிந்து அனைத்தையும் கிளரி சாப்பிடவும்.


🍒  *இரவு:*
2 நேந்திர வாழைப்பழத்தைத் தோலோடு இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து  எடுத்துத் துண்டுகளாக வெட்டி தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை போட்டுச் சாப்பிடவும்.

*Note:*
நேந்திரம் கிடைக்கவில்லை என்றால், வேறு பழங்கள் சாப்பிடலாம்.
(அவற்றை வேக வைக்க தேவையில்லை.)
நேந்திரம்பழம் மட்டுமே வேகவைத்து சாப்பிட வேண்டும்




Diet 10

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

*Day 🔟

🍒  *காலை:*
*7.30 மணிக்கு:* ஆரா ஜூஸ்
*8.30 மணிக்கு:*
பச்சைப்பயிரை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி  நாட்டுச்சர்க்கரை போட்டு சாப்பிடவும்.


🍒  *மதியம்:*
*ஆரா கம்பு சாலட்:*
அரை மணிநேரம் ஊறவைத்த கம்பை நீரை வடித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சிறிது மஞ்சள், உப்பு போட்டு வைத்து சாதம் போல் வடித்து ஆறவைத்துக் கொண்டு அதில் 7 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 குடைமிளகாய்,1 கேரட்  கொத்தமல்லி பொடியாக நறுக்கி, சிறிது வெள்ளரிக்காய், தேங்காய்த் துருவல் 3 Spoon ,வறுத்த வெள்ளை எள்ளு  1 Spoon சேர்த்து  பாதி எலுமிச்சை பிழிந்து மிளகு தூள் சேர்த்து சாப்பிடவும்.

*தேவையானவை:*
கேரட் -1
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 7
வெள்ளரிக்காய்  - 1
குடைமிளகாய் - 1
எலுமிச்சை - 1
கொத்தமல்லி சிறிது
வறுத்த வெள்ளை எள்




🍒  *இரவு:*
*Boiled vegetables Salad:*
கேரட் -1
பீன்ஸ்-7
உருளைக் கிழங்கு - 1
பச்சைபட்டாணி - 50g
சௌசௌ - 1 Small

இவை அனைத்தையும் இட்லி பாத்திரத்தில்
துணியில் மூட்டையாகக் கட்டி சிறிது நேரத்தில் அவித்துஎடுத்து சிறு
துண்டுகளாக நறுக்கிவைத்து மிளகுத் தூளும் இந்துப்பும்சேர்த்து சாப்பிடவும்.


Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...