அணுவே அனைத்துக்கும் அடிப்படை... கடவுளுக்கும் சரி கடப்பாரைக்கும் சரி
Sunday, July 21, 2024
Atom ⚛ science
Shiva Guru Spark Vasi Yoga 🧘♀️
அணுவே எல்லாமாக... எங்குமாக... எப்போதுமாக...
இம்மண்ணுலகில் பல்வேறு மனித இனங்கள் தோற்றத்தாலும், தன்மையாலும் செயலாலும் வெளிப்படையாகத் தெரிந்த போதிலும்; ‘உயரம்', ‘பருமன்', ‘உருவ அமைப்பு', ‘தோற்றப் பொலிவு', ‘உடல் வண்ணம்' ... முதலியவற்றில் மனிதர்கள் மாறுபட்டாலும்,
1) ‘குருதி அணு' (blood atom),
2) ‘தசை அணு' (muscular atom),
3) ‘நீர் அணு' (atom of water),
4) நார் அணு (atom of muscular fibre),
5) கொழுப்பு அணு (atom of fat),
6) ஈரல் அணு (atom of Liver) எனும் ஆறிலும் வேறுபடுவதே இல்லை. எனவே, இம்மண்ணுலகின் பல பாகங்களில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்குரிய மருத்துவ முறையில் மிகப்பெரிய வேறுபாடுகள் தேவையில்லை.
Friday, July 5, 2024
Navagraha pariharam
நாடி முறையில் பரிகார சூட்சமம்
__________________________
வகுப்பில் சித்தயோகியாரிடம் ஒருவர் சிறந்த ஜோதிடருக்கும் சாதாரண ஜோதிடருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார், அதற்கு சித்தயோகியார் அவர்கள்
"எவர் ஒருவருக்கு அதிக கிரக காரகங்கள் தெரியுமோ , எவரால் கிரகங்களுக்கு புதிதாய் காரகங்கள் யோசிக்க முடியுமோ அவருக்கு நவக்கிரக சித்தி ஏற்பட்டு சிறந்த ஜோதிடராக விளங்குவார்" என்றார்.
கிரகங்களும் திசையும்
புதன் - வடக்கு
குரு & கேது - வடகிழக்கு
சூரியன் - கிழக்கு
சுக்கிரன் - தென்கிழக்கு
செவ்வாய் - தெற்கு
ராகு - தென்மேற்கு
சனி - மேற்கு
சந்திரன் - வடமேற்கு
சில கேரளத்து ஜோதிடர்கள் இந்த திசையை வைத்தும் அந்த கிரகத்தின் வேறு காரங்களை வைத்தும் தாந்த்ரீக பரிகாரங்கள் கூறுவர்.
உரைத்த பரிகாரங்களை சிந்தித்து பார்த்தால் நாடி ஜோதிட விதிகளை தான் பயன் படுத்தி உள்ளனர் என்று தோன்றுகிறது
கோயில் யானைகளை தேர்ந்து எடுக்க செல்லும் பொழுது எந்த யானை வடகிழக்கு (குரு+கேது) நோக்கி தூங்குகிறது என்று பார்த்து தேர்ந்து எடுத்தார்கள்.
திருமணம் ஆகாத ஆண்கள் மாதம் ஒருமுறை வீட்டில் தென்கிழக்கில்(சுக்கிரன்) வெல்லம் /கரும்பு சாப்பிட்டு வந்தால் திருமணம் நடக்கும்.
இது போல் திசையையும் கிரக காரங்களை வைத்தும் பரிகாரம் செய்யலாம்
நன்றி
Saturday, June 15, 2024
Physical body secrets By sithars
Shiva Guru Spark Vasi Yoga 🧘♀️
மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.
வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200
மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன.
அவையாவன,
1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி
மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.
அகத்தியர் கவி:
நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே
சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே
- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.
இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:
1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்
கைகண்ட அனுபவ மருத்துவம்!
*********************************
( #கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-
கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!
***********************************
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."
சில எளிய மருத்துவம்: !!!
***************************
வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.
நாட்டுப்புற மருந்துகள்
நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.
மகளிர் மருத்துவம்
********************
திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
ஆடவர் மருத்துவம்
*********************
ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :
1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.
குழந்தையர் மருத்துவம்
**************************
அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
பொது மருத்துவம்
*******************
ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :
1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.
கால்நடை மருத்துவம்
***********************
கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.
1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்
குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்
பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாகும்
Tuesday, June 4, 2024
Parihaaram
Shiva Guru Spark Trust
நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!
1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படி படியாக குறையும்.
இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட,
புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,
குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது
,குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /கோவில் கட்ட இடம் வழங்குதல் தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும்
பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்
,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,
தொழு நோய் /குஷ்டம் கொண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது
சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி வரும்.
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,
மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,
பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),
உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,
இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்
செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,
புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,
புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில்,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,
இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,
குடிகாரன் ,
குரு துரோகி ,
பசுவை கொன்றவன் ,
சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது
ராகு_கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,
பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,
இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
இவைகள் பொதுவானவை
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்..
Monday, May 27, 2024
Spiritual Eternal Truth
Shiva Guru Spark Yoga 🧘♀️
இறைத்தேடலில் உள்ளவருக்கு அவசியம் தேவைப்படும் புரிதல்கள்.*
*1. இவ்வுலகிலுள்ள, எதுவுமே உன்னுடையதல்ல.*
*2. இவ்வுலகிலுள்ள எவற்றாலும் உனக்கு மனநிறைவைத் தரமுடியாது.*
*3. இவ்வுலகிலுள்ள அத்தனையும் (உடலுட்பட) ஐம்பூதங்களால், தோன்றி அழியக் கூடியவையே.*
*4. இவ்வுலகிலுள்ள அனைத்தும் தற்காலிக இன்ப துன்பங்களைத் தரும் மாயை ஆகும்.*
*5. இவ்வுலகிலுள்ள இவ்விதமான இன்ப துன்பங்களைத் தரும் அத்தனையும், மனிதனுக்கு விறுப்பு-வெறுப்பைத் தரவேப் படைக்கப் பட்டுள்ளன. விருப்பு-வெறுப்பு தருபவையாகும் மனிதனுக்கு இன்ப துன்பங்களை தரவே படைக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த பிரபஞ்சத்தின் மாயை ஆகும் !!!
*6. இவ்வுலகில் வெறுப்பைத் தரும் எவற்றாலும் பாதிக்கப் படாத நிலைதான் ஆன்மீகத்தின் அடித்தளம். ஏனெனில் நம் மனம் ஆன்மாவில் நிலைப்பது ஆன்மீகத்தின் எல்லை !!!
*7. பிரச்சனைகளுக்கு காரணம் உன்மனமே என்றநிலைதான் ஆன்மீகத்தின் வளர்ச்சி.*
*8. பக்குவம் அடைந்த உன் மனமும் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை என்று உணரும்போதுதான், உன் ஆன்மீகம் முதிர்ச்சி அடைகிறது. கவலை, பயம், வெறுப்பு, கோபம் போன்ற சுய தண்டனைகள் தரும் உணர்வுகளிலிருந்து விடுபடுவது ஆத்ம ஞானத்தில் நிலை பெற்றதற்கான அடையாளம் !!!*
*9. ஆம், எதைப்பற்றியும், கவலை இல்லாத நிலையும் எதைப் பற்றியும் பயப்படாத நிலையும், எதன் மீதும் வெறுப்பற்ற நிலையும், எவர் மீதும் கோபமற்ற நிலையும், உண்மையில் இவை தான் நிரந்தர சந்தோஷம் எனப்படுகிறது !!!
*10. எந்த ஒன்றை நீ அடைந்தால் உன் மனமானது, நிறைவு / நிம்மதி பெருமோ, அந்த தன்னையறியும் அறிவே, ஆத்ம ஞானமாகும்.*
*11. எந்த-ஒன்றை நீ அடைந்தால், மரணத்தின்போது கூட, உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமோ, ... அது ஆத்மஞானமாகும் !!!*
12. மனிதன் *ஆத்மஞானத்தை* அடைவதும், தன்னுள் என்றும ஆனந்தமாக *இருப்பதும்,* ஜீவன் முக்தனாக *வாழ்வதும்,* சித்த புருஷனாய் *இருப்பதும்,* தன்னை தானே *உணர்வதும்,* தன்னுள் இருக்கும் இறையுணர்வில் *கலப்பதும்,* அந்த இறைவனே தானென *ஆவதும்,* இறுதியாக, மரணத்தின் போதுகூட *சந்தோஷத்தோடு,* பிரம்மத்தில் *ஐக்கியமாவதும்,* என ... இவையே, மனிதப்பிறவியின் *பிறவிப்பயன்* எனப்படுகிறது.
இதற்காகவே, *நாம் மனிதனாக* இந்த பூமிக்கு வந்துள்ளோம். அதில் *மிகப் பெரும் பகுதி* வீனாகிவிட்டது. எஞ்சியதோ, எவ்வளவு *சிறியதென அறியாத* சொற்ப வாழ்க்கையே !!! அதற்குள், *மனித லட்சியத்தை அடைந்துவிடு* என்று வேதங்கள் கூறுகின்றன !!!
மனிதனும், "எது உண்மையான சந்தோஷம்" என்பதைப் புரிந்து கொள்வதில் அவன் *மிகப்பெரிய* தவறு செய்து விடுகின்றான் !!!
தோன்றி *மறையக்* கூடிய நிலையற்ற இன்பங்களை தரக்கூடிய (பணமே) *நிரந்தர* சந்தோஷம் என்று *நம்பி* விடுகின்றான் !!!
700 கோடி உலக மக்களையும், அவர்களிடமுள்ள செல்வங்களின் அடிப்படையில், தரவரிசைப்படி பட்டியலிடுவோம். அதில் நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு இடத்தில், கீழேயோ, நடுத்தர மாகவோ, அல்லது மேலேயோ, இருக்கப் போகிறோம். இவ்வுலகில், சந்தோஷமாக இருக்க *மனம்தான்* தேவையே தவிர, *பணம் தேவையில்லை !!!* மனதில் *நல்லறிவு* தேவை. ஏனெனில், ஞானமே கவலையை நீக்கும் *கோட்டைச்சுவராக* இருந்து, நமக்கு *சந்தோஷத்தை* தருகிறது.
சந்தோஷத்தைப் பெறுவதற்கு, ஒருவேளை, பணம்தான் தேவை என்றால், பணக்காரர்கள் *அத்தனை பேரும், கவலை இல்லாமல் தானே இருக்கவேண்டும்?* ஆனால், உண்மை நிலைமை *அவ்வாறும் இல்லையே !!!* மாறாக, சந்தோஷமாக இருப்பதற்கு ஏழ்மை தடை என்றால், *ஏழைகள் அத்தனைபேரும் கவலையோடு தானே இருக்க வேண்டும்?* ஆனால் உண்மை நிலைமை *இவ்வாறும் இல்லையே !!!*
தேவைகள் என்பது மனிதனுக்கு *என்றுமே தொடர் கதைதான் !!!* ஒரு தேவையை அடைகிறோமோ இல்லையோ, அதற்குள்,மற்றொன்று முளைத்துக் கொள்கிறது !!! *அமிர்தமே* கிடைத்தாலும் கூட, அது மனிதனுக்கு *மனநிறைவைத் தந்து விடுவதில்லை.*
இதுவே பொருட்களைப் பற்றிய *நம்மனதின்* உண்மை புரிதல் !!!அதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான் பணத்தை தேடுவதையும் அவனால் *நிறுத்த முடிவதில்லை.* உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தேவைகள் *"என்றுமே தீராது"* என்பது கூட நமது மனதின் இயலாமையின் வெளிப்பாடே !*
*எந்த ஒரு பொருளாலும் உனக்கு *மன நிறைவைத் தரவே முடியாது.* இதை புரிந்துகொள்ள முடியாததே உன் மனத்தின் *பலவீனம் ஆகும் !!!*
*எந்த ஒரு பொருளை அடைந்தால் அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய வேண்டியதில்லை என்கிற நிலையை (மனநிறைவை) தருகிறதோ, அதுவே *ஆத்ம ஞானம் !!!*
மீண்டும் கூறுகின்றேன். எந்த ஒரு பொருளை *அடைந்தால்* அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய *வேண்டியதில்லை* என்கிற நிலையைத் தருகிறதோ, அது ஆத்ம ஞானம் *மட்டுமே !!!*
அதாவது பணத்தின் பின்னே *ஓடுக்கொண்டிருப்பதையே* நாம் நிறுத்த வேண்டுமானால், அது மனநிறைவால் *மட்டுமே சாத்தியமாகும் !!!* மனநிறைவு மட்டுமே ஆசைகளை அகற்றும் *சக்தி கொண்டது !!!* அதற்கெல்லாம் மிகப்பெரிய *ஞானம் வேண்டும் !!!*
ஆம், ஆன்மீக சகோதரர்களே !!! மனநிறைவு கொண்டவனுக்கே *ஞானம் பிறக்கும் !!!* அந்த ஞானமே அறியாமை விலக்கும் !!! அதன்பின்புதான் *கவலைகள் மறையும் !!!* கவலைகள் மறைந்தால் தானே சந்தோஷம் பிறக்கும்? சந்தோஷமாக வாழ்வது தானே வேதங்கள் கூறும் மனித லட்சியம் ?
எவரேனும், ஒருவன் உன்னை *ஒரு சொல்* சொல்லி விட்டால், *மன-வலியாலும் அவமானத்தாலும்* எவ்வளவு வேதனைப் படுகிறாய் !!! ஆனால், மானிடா *உனக்கு நீயே* கொடுத்துக் கொள்ளும் *சுய-தண்டனை தான்* கவலையாம் !!!
முட்டாள்கள் தான் கவலைப்பட்டுக் *கொண்டு இருக்கிறார்கள்* என்றால், *புத்திசாலியான நீயுமா* கவலைப் படுவது? ஆட !!! *எடுத்துச் சொன்னாலாவது,* கவலைப்படுவதை *நிறுத்தலாமே !!!*
*இயற்கையாகவே *கவலைப்படும் மனிதனை, கோபத்தோடு நீங்கள் முட்டாள் என்று சொல்லலாமா* என்று கேட்கிறீர்களா?*
*என் கோபத்தின் காரணத்தை* புரிந்து கொள்ளுங்கள். கவலையானது *மோசமான மனநோய் !!!இந்த மனநோய் மனிதனை இருவகைகளில் கொன்றுவிடும் !!!*
*(a)பைத்தியக் காரனாக்கிவிடும் !!! பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!(b)தற்கொலைக்கு தூண்டிவிடும் !!!பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!*
*எனவே, இதற்கு தீர்வுதான் என்ன? கவலையற்ற வாழ்க்கையே மனித லட்சியம் !!!*
*Shiva Guru Spark Trust* "Dharma surely clear all your Karma,Do consistently Dharma and evolve into higher self "
Thursday, May 23, 2024
Tamil Sithargal wisdom
நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.
Shiva Guru Spark Trust
Human body secrets
*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...
-
Shiva Guru Spark Vasi yoga TIRUMANTIRAM English translation of the Tamil Spiritual Classic by Saint Tirumular TANTRA NINE – Verses ...
-
SARA YOGA---VASI YOGA- Electronasographic science related to human behaviour and functional dimensions of energy ,mind ,energy conservation ...
-
*Om vayanamasi namo namaha* In short :- BENEFITS OF _Om vayanamasi namo namaha_ MANTRA :- -relieves stress - regulate heart rate - i...





