Monday, December 5, 2022

Tiruvanamalai dheepam vs Atma Deepam

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 


" தி அ மலை  கார்த்திகை  தீபம் - சன்மார்க்க விளக்கம் "


கார்த்திகை நட்சத்திரத்தின் போது இங்கு மலையில் உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது


இதன் தாத்பரியம் யாதெனில் ??


அண்ணாமலை = பிரணவ மலை - சுழுமுனை உச்சி

நம் சிரசிலும் அகத்தில் உள்ளது


சுழுமுனை நாடியின் உச்சியில் ஆன்மா ஜோதி பிரகாசிப்பதையே ( கோடி சூரியப்பிரகாஸ்ம் உடையது ஆன்ம ஜோதி ) , புறத்திலே மலையின் உச்சியில் " மகா தீபம் " ஏற்றிக்காண்பித்திருக்கிறார் நம் முன்னோர்


ஆகையால் நாம் புறத்திலே மட்டும் இந்த தீப தரிசனம் செய்துவிட்டு, அகத்திலே செய்யாமல் இருப்பது நம் செயல் அல்ல, அழகல்ல - அகத்திலும் காண்பதே அவன் கடமையாகும்


இதை நிரூபிக்கும் வகையில் கோவில்களில் - " துவஜஸ்தம்பத்தின் உச்சியில் மகா தீபம் " ஏற்றுவர் -

துவஜஸ்தம்பம் = சுழுமுனை நாடி

உச்சி = 36 தத்துவங்கள் கடையாம் நாதத்தின் மேல் - ஆன்மா உள்ளது , அதனால் தீபம் அங்கு ஏற்றப்படுகிறது


ஆன்மா நாத விந்து கலவை ஆகையால் , இன்னாளிலே இதன் கலவையை சொல்லும் பொரி உருண்டை

இறைக்கு நைவேத்தியம் படைத்து உண்பர்


பொரி உருண்டை = வெண்மை + செம்மை

வெண்மை = விந்து

செம்மை = நாதம்


இந்த ரெண்டும் சேர்ந்ததே ஆன்மா


இந்த தத்துவ வெளிப்பாடெல்லாம் சொல்லியாயிற்று - ஆனால் யார் உண்மை தெரிந்து வைத்து உள்ளனர் என்பது தான் கேள்வி ??

எல்லாரும் புற சடங்கையே செய்கிறார் - அகத்தை கோட்டை விட்டார் பெரும்பாலோர்


" அகத்தை பிடித்தால் தான் நாம் உருப்படுவோம் " - இல்லையெனில் அது வரையில் பிறப்பிறப்பு தான்.



No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...