Monday, September 23, 2024

Guru

 உலகிற்கு அறிமுகப்

படுத்திய தாய்,தந்தை

முதல் தெய்வங்கள்.

தந்ததால் அவன் தந்தை. 'தா',எனக் கேட்டுப் பெற்றதால்

அவள் தாய்.


கல்வி பயில அவர்கள் காட்டியது குருநாதனை.

அந்தக் குருநாதன் காட்டியவதே இறைவன்.


மாதா,பிதா,குரு, தெய்வம்

என்று வரிசைப் படுத்தியது

அறநூல்.


 பெயரும்,வடிவமும்

இல்லாத பரம்பொருளைச்

சுட்ட, தமிழ் மொழி

இட்ட பொதுப் பெயர்கள் வருமாறு:-


இறைவன்,

கடவுள்,

ஆண்டவன்,

அரன் எனும் பொதுச் சொற்களே அனைத்து மொழிகளிலும் நிலவுகின்றன.


பெயர்,வடிவம் இல்லா

கடவுள் ஒருவனே!

சமய மதங்கள் இட்டப்

பெயர்கள் கணக்கில!


ஒருவன் சிவன் என்கிறான்;

ஒருவன் நாராயணன் என்கிறான்.

இவ்வாறே சக்தி, கணபதி,

சூரியன் எனும் பெயர்கள்

வழங்குகின்றன.


இவை அனைத்தும் கற்பனைப் பெயர்கள்.

ஒரே கடவுளுக்கு வழங்குகின்ற பல பெயர்கள்.

Zhanam

 மனமாசுகளை நீக்கிய பிறகு,மீண்டும் அவை திரும்பப்பற்றாதவாறு

கவனமாக இருத்தல் வேண்டும்.


பரம்பொருள் ஒன்றே! அந்த

ஒன்றே உலகமாகவும், எண்ணிலடங்காத உயிர்களாகவும் வடிவெடுத்திருக்கிறது, எனும்

ஞானத்தில் உறுதிபெற்றிருக்க வேண்டும். அதனை நிறைஞானம் என்பர்.


மனத்தூய்மையை கெடுக்கின்ற குணங்கள் ஆறாகும். அவை காமம்,குரோதம்,உலோபம்,

மோகம், மதம்,மார்ச்சர்யம்

ஆகும்.அவற்றை தமிழில்,

ஆசை,சினம்,ஈயாமை,மயக்கம், செருக்கு, பொறாமை

என்று கூறுவர்.


அவை அனைத்தும் நீங்கப்

பெற்றவனே துறவி எனப்படுவான்.கருவி, கரணங்கள் நீங்கிய தொண்டனாகிறான். ஆத்ம

உணர்வு அவனுடைய உள்ளத்தில் ஒளிர்வது உறுதி ஆகிறது.


 மனிதனைத்தவிர அனைத்து உயிர்களும் ஓரறிவு முதலாக ஐந்தறிவினை உடையவை. மானிடர்க்கு மட்டுமே ஆறறிவு.


அதற்கான காரணத்தை அறியாமல் வாழ்நாளை வீணாளாக்குகிறான் மனிதன்.


உலகினை ஆய்ந்து, சாத்திரங்கள் கூறுவதைப் போன்று உலகமும்,அதனால் அமைகின்ற புறப்பற்றுக்களும் பொய்

என்பதை உணரவேண்டும்;

தான் அற்பஞ்சீவனல்ல!

பரமாத்மாவின் அம்சம் என

உணரவேண்டும். மாயா மனதைத் தூயமனதாக்கி

தன்னுள் ஒடுங்கும்படிச் செய்ய வேண்டும்; பரமாத்மாவோடு இணைய

வேண்டும். அதற்காக இறைவன் அளித்த நன்கொடையே அறிவு.


அறிவு, இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றறிவு; அது புறவுலக

வாழ்க்கைக்குமட்டுமே பயன்படும்.


மற்றொரு அறிவு, இறைவனை உணர்தல்;

அதற்கே ஞானம் என்று பெயர்.பேரறிவு எனப்படுவதும் அதுவே!

பொறி புலன்களால் மனம்

அறிந்துசெயல்படுவது புறவுலக அறிவு. பொறி புலன்களைக் கடந்து, மனமானது வெளியேறி,

அகவாழ்வின் மூலம் தன்னை ஆத்மாவில் ஒடுக்கிக்கொள்ளும். சீவனாக இருந்த ஆத்மா, சுதந்திர ஆத்மாவாக மாறி, பரமாத்தாவில் ஐக்கியமாதலே ஞானம்.

அதனைத்தான் மானுடம் பெறவேண்டும் என்பதே

படைத்தத் தலைவனின் நோக்கமுமாகும்.


கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பை, வீணாக்காமல் தன்னை உணர்க! தலைவனோடு இணைக! வாழ்த்துக்கள்!💐


 களிமண்ணால் பானை

வனையமுடியாது.

களிமண்ணை நீரில் பிசைய

வேண்டும். அந்த நீருக்கு இணையானது

கருணை எனும் சக்தி.அதற்கே

கருணாம்பிகை எனக் கற்பனையாக பெயரிட்டுள்ளனர்.


சிவமும் அவரது ஆற்றலாகிய

அருட்சக்தியும் ஒன்றே.நாத சிவம் இடைவிடாது ஒலித்துக்

கொண்டே உள்ளது.அந்த ஒலியே அநாகதம் எனப்படுகிறது. அந்த ஓசையின்

சிதரல்களே உலகமெங்கும்

ஒலிக்கின்ற ஓசைகளாகின்றன.

Shiva puranam secrets

 *🍀சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியங்கள் பற்றிய ஆய்வு 


🌹சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.


🌹சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான *சிவபுரத்தையும் கூறும் ஒரு சிவரகசிய புதையலாகும்.


 (இங்கு சிவபுராணத்தில் வரும்

 🔥சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்ற வரியை ஞாபகம் வைத்து கொள்ளவும்)


தினமும் நமக்கு 🔥இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.


🌹சிவபுராணத்தின் முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும் வரியை கவனிக்கவும்


🔥வா…ழ்….க, என்ற தமிழ்வார்த்தையில் "ழ்" என்ற எழுத்தை உச்சரிக்கும்போது மட்டுமே உள்நாக்கு வாயில் மேலண்ணம் வரை சென்று தொட்டுவரும்.


அதாவது நமது உள் நாக்கில் அமிர்தத்தை சுரக்கள் வைப்பதற்கு ஒரு எழுத்து உள்ளது.அது ""ழ்""  என்ற மெய்யெழுத்து.இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்.


😜("தமிழுக்கும் அமுது என்று பேர்,அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! 


 🌹எனவே உங்களுக்குள் அமிர்தத்தை இயற்க்கையாகவே சுரக்க வைக்க செய்யும் ஒரு துளியானது,உங்களது உள்நாக்கில் படர்ந்து இருப்பதை

உங்களது நாக்கு நுனியால் மடித்து வாயில் அண்ணாக்கு எனும் மேலண்ணத்தை தொடும்போது அமிர்தம் சுரந்து உங்களுக்கு பலம் கூடும்.


🌹இதனால் தான் இந்த சிவபுராணத்தை ஓதும் முன்பு உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்ம முகூர்த்தநேரத்தில் ஒதசொன்னார் வள்ளலார்.


🔥இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும்.அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய"வாழ்க வாழ்க" என சிவபுராணம் பாடலில் முலாவதாக வரும் ஆறு வரிகளை பாடவேண்டும்.


இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வலுபடுத்திய பின்பு அடுத்த நிலைக்கு செல்கிறோம்.


🔥 அடுத்ததாக சிவபுராணத்தின் ஆறாவது வரியிலிருந்து பத்தாவது வரி வரையில் 


"வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க,

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க,

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க,

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க,

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க" 


என்ற வரிகளில் "வெல்க வெல்க" என்று ஐந்து முறை அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிப்படுத்தி அடுத்த பகுதிக்கு செல்வோம்.


🔥இதற்கு அடுத்த வரும் ஐந்து வரிகளில்

"ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி"


என பாடும்போது நமது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வலுபடுத்த"போற்றி போற்றி" என கூறுகிறோம்.


🌹போ….ற்….றி இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும்.


இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வலிமையாகும்.


🌹அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம்,தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது.


இது புரிய வேண்டுமானால் மெய்யென்ற (உடம்புக்குரிய) எழுத்து அறிந்திருக்க வேண்டும். 


🔥மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் அதில் இறைவனை அடைய ஒரு எழுத்து இருப்பதை அறியலாம்.


நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும்.


 🔥அடியோ, வினையோ (சூட்சம) பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது.


பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.


🔥நான் செய்வினை,செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன். 


பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.


🙏சரி கீழ்கண்ட இரண்டு சொற்களை பற்றி ஆராய்வோம்.....


 *வாழ்க + போற்றி = 2 : ½ : 1(மாத்திரை அளவு)* மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான். 


ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு.


🔥போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வலிமையடையும்.


இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்


🌹உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி"


பிராண தேகம் வலிமையானது என்றால் நீங்கள் வலிமை மிக்கவர். 


இவ்வாறு சிவபுராணத்தை பாடும்போது ஸ்தூல,சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார்,


இப்போதான் நிற்க வைக்க முடியும். 


அவரிடமே அருள் பெற்று வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார்

இருபதாவது வரியில்,


அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், நான் சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க!


இப்படி மாணவன் தன் ஸ்தூல, சூட்சம தேகங்களை வலுபடுத்திய பின்பு சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.


🌹அடுத்து21வது வரி"கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார்.


உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற,படித்த பல விடயங்கள் அங்கு வரும்.


அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும்.


அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.


🌹இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான்.


இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.


அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல் 

🔥“விலங்கு மனத்தால் விமலா”


🌹 விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடப்படுவது.அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது. 


🌹மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது. அதை தக்க குரு மூலம் அறிக.🙏


🌹இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும்.


அது தான் சிவபுரத்தின் (பிராண உலகத்தின்) நுழைவுவாயில்.


அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்


 🌹அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார்.


இது எல்லாம் சிவ யோகத்தில் அபூர்வயோக சாதனை என கருத்தில் கொள்க


சிவபுரம் என்பது பிராண

உலகம்.


அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதை போல் இருக்கும்.


அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள்.


அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.


🌹முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும்.


🙏பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.


அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி அழைத்து செல்லுவர் என்கிறார்.


🙏இது முழுக்க முழுக்க என் அனுபவ சூட்சம யாத்திரை...


😜இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும்.


அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும்.


😜இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும்.


அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால் அங்கு பயணத்தில் குழப்பம் வரும்.


பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.

இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை.

அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும்.அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும், இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான்.

இந்த சூட்சம பயணம் இயல்பாகவே பல சமயத்தில் தூக்கத்தில் எனக்கு அன்னை சித்தர் குருநாதரின் அருளால் நடந்திருக்கிறது.


உங்களுக்கும் நடக்கும். 


ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகிறது பலருக்கு...


இங்கு நிறைய விஷயம் மறைப்பாக சிவ ரகசியமாகவே உள்ளது.ஆதலால் இது பயிற்சி அல்ல.

 

🌹 மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் கீர்த்தித் திருஅகவல் கூறியிருப்பார்.


இது அகவல் என்றால்,இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல்.


அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.


சற்று கவனிக்க !அதில் சிவபெருமானின் பெருமை அனைத்தையும் கூறி கடைசி இரண்டு வரியில் “பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான் "ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே


கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவன்தான்.


சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.


🌹இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி அடுத்து திரு அண்டபகுதிக்கு செல்கிறார்.


பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார்.


பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.


அதன் வழியாக சென்று பராத்மா எனப்படும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார்.


🌹இது வரைக்கும் உள்ள விடயங்கள் போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும் கூறுகிறார்.


அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.


இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம்.


🙏மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதியில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடல்களாக அடுத்த திருச்சதகம் என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார்.

 

இது தான் மிக முக்கியம்.இதை கவனமாக ஆராய்க.


🌹சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.


ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணும்போது என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என்பது கூறுகிறார்.


இது மிக முக்கியமான பகுதியாகும்.


1⃣சிவபுராணம் 

2⃣கீர்த்தித் திருஅகவல் 3⃣திருஅண்டப் பகுதி 

4⃣போற்றித் திருஅகவல் 5⃣திருச்சதகம் 


இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். 


அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும்.


அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும். 

அது என்ன என்கிறீர்களா?


அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய "ஞானதாழிசை" என்ற பாடல்கள் ஆகும். 


இதில் உள்ள மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே  மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோலாகும்.


இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம். இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ள வேண்டாம்.


(இது இந்த பதிவில் இல்லை என்பதால் இந்த *"ஞானதாழிசை"*யில் உள்ள மொத்தம் 12 பாடல்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனியாக பதிவிட்டுள்ளேன்.)


இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி.இதை படிப்பதால்  நாளுக்கு நாள் திருவாசகம் படிக்க ஆவல் கூடி கொண்டே போகும்.


மொத்தத்தில் ஒரே வரியில் இந்த பதிவின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்ல வேண்டுமானால்... 


🌹"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"


அவன் அருள் இருந்தால் தான் இந்த பதிவை கூட படிக்க முடியும்.இந்த சிவரகசியங்களை கூட அறிய முடியும்


திருசிற்றம்பலம்!ஓம் நமசிவாய!

Friday, August 23, 2024

Kundalini secrets

 சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி பற்றிய அபூர்வ குறிப்புகள்:-


(பல அபூர்வ  யோக நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட குண்டலினி சக்தி பற்றிய உண்மை  ரகசியங்களை நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக முழுமையாக இன்று  பதிவிடுகிறேன். அவசியம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.)


குண்டலினி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட  இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை  பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை  காண்போம்.


-திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர

உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,

 வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும்  இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல  துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை  வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.


நன்றாக கவனித்து பார்த்தீர்களானால்

 ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை

கொண்டுள்ளவை. ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை சித்தர்களின் பார்வையில் எதை கண்டேன் என்பதை மட்டும் இன்று  இந்த கட்டுரை சொல்லும்.


அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல்  பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில்  மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது. இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த  நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலினி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல். கைவசம் மூல நூல் இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள்  இங்கே.


"யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும்

அறியார்கள் ஓர் வாசல்

அது கடையோர முன்வாசல்......"

".....மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி

முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை

நோக்கி...."


நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவோம். அவை மூலம் முதல் துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம் உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா?

              மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல்ஆறு தளத்தை நோக்கி" என்ற வரி குறிப்பது அதுவே. பரஞ்சோதி மகான்  அவர்களின் "நான் கடவுள்" என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி  ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல்  ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என  கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது. மற்றும் இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி கிடையாது.


மேலே உள்ள அகத்தியர் பாடலில்

"முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"

          என கூறுவதும் இதை பற்றி தான்.


மேலும் சில பெயர்கள்:-

            ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம்,

சுழுமுனை , கரிமுகன்.

              சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்?


இந்த ஐயம்  உங்களுக்கு எழலாம். உண்மை தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் நான் அறிந்து  கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை இந்த தொடரின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.


நண்பர்களே, சித்தர்களின் குரலில் இன்றைய பதிவில்  நான் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,

சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள், குடம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலினி  பற்றிய செய்திகளை கொடுக்க முயல்கிறேன். பல உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு மேற்கோளாக  கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.....


நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர

மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று

 மண்டலங்கள் உள்ளன. இவை முறையே

பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய நாடிகளால் குறிக்க படுகின்றன.


ஒளவையின் விநாயகர் அகவல் பாடலை பார்ப்போம்.....


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."


நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை சார்ந்தே அமைந்துள்ளன.


நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம் வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு செல்லும். 


நமது உடம்பில் ஈசன் நுழை வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது  மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒருவாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம்  முன்னோர்கள் கொடுத்தார்கள்.


மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி

பின் விடுவது அல்ல இந்த பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது. நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல வாயுக்களை அடிப்படியாக கொண்டது.


உணவை செரிக்க ஒரு வாயு, குரல் எழுப்புவது ஒரு வாயு . கழிவுகளை வெளியே தள்ளுவது அபான வாயு இன்னும் பல....

     தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு. உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த  உடம்பில் இருக்கும்.


இப்போது ஒளவைவையின் பாடலை பார்ப்போம்.....

        இறைவன் ஒளவைக்கு குருவாக வந்து தீக்ஷை  அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத பட்டு இருக்கும்.


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..."


இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது  சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை  அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும்  இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான் காட்டுகிறானாம்.


"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."


"சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி"

என இதை படிக்க வேண்டும். 

         கபாலம்   எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது?


நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில்  இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய

 நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த

 நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்

 படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக

 பயிற்சிகளின் நோக்கம்.


இட கலை = சந்திரன்

பிங்கலை = சூரியன்

அக்னி கலை = சுழுமுனை


இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை,  பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக  வேண்டும்.


சரி எவ்வாறு உருவாக்குவது? 

         காற்றின்  மூலம். அதுவே "பிராணயாம பயிற்சி" என  முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து

 நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.


"மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்…"


மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர,

 அக்னி மண்டலங்களை குறிக்கிறது.

இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும் தூண் எது? 

       நான்றெழு பாம்பு என்கிறார் ஒளவை. பாம்பு என்பது குண்டலியை  குறிக்கும்.


இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.


நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை

கவனியுங்கள்.....


"ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை

ஈசன்தன் வாயிலில் ஏற்று"

                       - ஒளவை குறள்


"மூலத்து வாரத்து மூளு மொருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்

காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்

ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."

                       - திருமந்திரம்


"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)

லுறுப்புச் சிவக்கும் ரோமங்கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."

                        - திருமந்திரம்


முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது

பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய

இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை

 ஏற்ற வேண்டும். 


சித்தர்கள் "கால்" என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோக படுத்தி இருப்பார்கள்.


இரண்டாவது பாடல் = "காலுற்ற..."

மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை,  சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.


ஈரைந்து வாசலில்….


நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு +

ஐந்து. = பத்து. அவ்வை பத்து வாயில்களை

சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில்

 தானே நமக்கு தெரியும்?


அது என்ன பத்தாவது வாயில்? 


அதுவே ஈசன்

 வாயில் அல்லது மூல துவாரம்.


சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை ஏற்றுவது?


"மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"


நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ

 அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே  மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண  வாயு ஏறும்.


இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ...


நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின்

 எழுத்து?


நம் தாய் தமிழ் மொழியில்  ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.

           அது என்ன வென்றால் மொழியின்

எழுத்துக்களிலே இறைவனை பற்றிய ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ் மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பொதுவாக உண்டு. 


இவை இரண்டும்  ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ்  மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு.


உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து

இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு

 சென்று விட்டனர். அது மட்டுமா?


ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது.


நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம்

 இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து இருப்பீர்கள்?

        நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்

 நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை

 பார்த்து விட்டோம்.

ஆனால் ஆன்மாவை காணோமே?


ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே.

 அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது

தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில்  கூறுவார்.


"வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில்

குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில்

ஆச்சுதடி"


நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து  செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது?


கருவறை வாசல் பூசைக்கு முன் மூடி இருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம் காட்டுகிறார்கள். கூடவே மணியும் அடிக்கிறார்கள். 


பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம் தவத்திலும் நடக்கிறது.

இப்போது எழுத்துக்கு வருவோம்.


மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி"

          என்ற வார்த்தையை கூறி இருக்கிறார்.


"அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ +ஆச்சி). அவர்

 அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை

 தான் நண்பர்களே.


சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த எழுத்துக்கள்?


அ = பிங்கலை

உ = இடகலை

ம் = சுழுமுனை


இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.


8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்... தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக ரகசியமான தத்துவம் இது.


தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.

ஒளவை தன் ஞான குறளில் கூறுவார்.


"கூறும் பொருள் இது அகர உகாரங்கள்

...மகரம் குழல் வழி ஓடிட.." என வரும்.

அது ஏன் கூறும் பொருள் என கூற

வேண்டும்?

குரு வானவர் இடகலையையும்

பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.

இதையே தான் "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ..." விநாயகர் அகவலில்

கூறுகிறது.


"குரு வடிவாகி குவலயந்தன்னில்

திருவடி வைத்து..."

"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."

இதன் விளக்கம் பார்ப்போம்.


"எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்

 சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்

 செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே"


நடு நாடி = சுழுமுனை


சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர

 வேண்டிய நாடி நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து  இருப்பீர்கள்.


அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்?

           ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை எவ்வாறு இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.


சுழுமுனையின் இறுதி மலர் போன்ற மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம் என்று சொல்ல கூடியது அது தான். நமது தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும்.


சிவ பெருமானுடைய படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும்.


பிறை சந்திரன் இருக்கும்..  தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து  கொண்டு இருக்கும்.


நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம்.


சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை குறிக்கிறது. 

பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக வேண்டும். எவ்வாறு?


மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய் முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின்  மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில்  மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக  கிளர்ந்து எரிய செய்யும்.


இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை  மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.


மூல நெருப்பை இட்டு முட்டி நிலா மண்டபத்தில். பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது  எக்காலம்?

             - பத்திரகிரியார்.


அவ்வை "அமுத நிலை" என்ற ஒரு வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை  கீழ்வரும் பாடலில் கவனியுங்கள்.....


குண்டலி அதனிற் கூடிய அசபை

விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி.."


குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க

 கூடிய இறைவன்.


நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது சந்திர ஒளியை வாங்கி மலரும். இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான் என்பதை இந்த வாக்கியம் மூலம் மிக எளிதாக விளக்கி விடுகிறார்.


வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,

"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்"

என கூறுகிறார்.


இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர்

 தான். நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம்.


இந்த உலகம் உய்வதற்கு மிக முக்கிய கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும் அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும்.உருவாக்குவது இவை தான்.


சந்திரன் பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்?

          பெண்களின் வேறுவேறான பருவ

மாற்றஙகளுக்கு சந்திரனே காரணம். மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்

சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு.  ரா என்பது ராகுவையும் சி என்பது சிகி  அல்லது கேதுவையும் குறிக்கும்.

சாதகத்திற்கு குண்டலினி  என்ற பெயர் உண்டு.


நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக  இருந்தாலும் அவை ஒரு பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலினியை குறிக்கும்.


சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது?


சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின்  ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது. 


சூரியனின்  கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள். ராகு கேது

ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு

காரணமாகவும்  முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக

சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது இவை  சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது.


இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை ஆசான் மூலம் தெரிந்து கொண்டால் குண்டலினி அல்லது சிற்சபை எதுவென்றும் பிரபஞ்சத்தில்  எங்கோ ஒரு கேள்வி எழுப்பினால் எங்கிருந்தோ ஒரு விடை கிடைத்து விடும் !அந்த விடை  டி.வி. மூலம் வரும் ஒரு விளம்பரமாக கூட இருக்கலாம் உன்னித்து கவனித்தால் விடை வரும் வழி தெரிந்து விடும் ! மனம் தெளிவாகலாம்


சக்தி(பார்வதி) என்பது குண்டலினி (மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே(அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது(அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.


நாம் உட்கார்ந்து நமது உடலை உற்று நோக்குவோம். நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர் அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும். 


இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர் நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.


நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர் அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர். 


இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர். இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர். 


இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் கர்த்தா வாகிய விஷ்ணு என்றனர் நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும் இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்.


நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் கர்த்தாவாகிய சிவன் என்றனர் லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று 3சுற்று சுற்றிகொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் 5தலை பாம்பு என்றனர்.இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றிகொண்டுள்ளது,உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.


" சுவாசமது நீண்வருந் தோணி போல் அபானவாய்வு எழுந்தால் மாயாசக்தி நீளும் உதான்னுடைய பார்வையானால் கருவான சுவசலீலையாகுமே உயிர்வாழ்க்கை சுவாசம் என்று கூத்தனார் மனம்கிழந்தரே"


             

Sunday, July 21, 2024

Atom ⚛ scientific Truths

 அணுவே அனைத்துக்கும் அடிப்படை... கடவுளுக்கும் சரி கடப்பாரைக்கும் சரி



Atom ⚛ science

 Shiva Guru Spark Vasi Yoga 🧘‍♀️ 

அணுவே எல்லாமாக... எங்குமாக... எப்போதுமாக...


இம்மண்ணுலகில் பல்வேறு மனித இனங்கள் தோற்றத்தாலும், தன்மையாலும் செயலாலும் வெளிப்படையாகத் தெரிந்த போதிலும்; ‘உயரம்', ‘பருமன்', ‘உருவ அமைப்பு', ‘தோற்றப் பொலிவு', ‘உடல் வண்ணம்' ... முதலியவற்றில் மனிதர்கள் மாறுபட்டாலும், 

1) ‘குருதி அணு' (blood atom), 

2) ‘தசை அணு' (muscular atom),     

3) ‘நீர் அணு' (atom of water), 

4) நார் அணு (atom of muscular fibre), 

5) கொழுப்பு அணு (atom of fat), 

6) ஈரல் அணு (atom of Liver) எனும் ஆறிலும் வேறுபடுவதே இல்லை. எனவே, இம்மண்ணுலகின் பல பாகங்களில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்குரிய மருத்துவ முறையில் மிகப்பெரிய வேறுபாடுகள் தேவையில்லை.



Friday, July 5, 2024

Navagraha pariharam

 

நாடி முறையில் பரிகார சூட்சமம் 

__________________________


வகுப்பில் சித்தயோகியாரிடம் ஒருவர் சிறந்த ஜோதிடருக்கும் சாதாரண ஜோதிடருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார், அதற்கு சித்தயோகியார் அவர்கள்

 "எவர் ஒருவருக்கு அதிக கிரக காரகங்கள் தெரியுமோ , எவரால் கிரகங்களுக்கு புதிதாய் காரகங்கள் யோசிக்க முடியுமோ அவருக்கு நவக்கிரக சித்தி ஏற்பட்டு சிறந்த ஜோதிடராக விளங்குவார்" என்றார்.


கிரகங்களும் திசையும்


புதன் - வடக்கு

குரு & கேது - வடகிழக்கு

சூரியன் - கிழக்கு

சுக்கிரன் - தென்கிழக்கு

செவ்வாய் - தெற்கு

ராகு - தென்மேற்கு

சனி - மேற்கு

சந்திரன் - வடமேற்கு


சில கேரளத்து ஜோதிடர்கள் இந்த திசையை வைத்தும் அந்த கிரகத்தின் வேறு காரங்களை வைத்தும் தாந்த்ரீக பரிகாரங்கள் கூறுவர்.


உரைத்த பரிகாரங்களை சிந்தித்து பார்த்தால் நாடி ஜோதிட விதிகளை தான் பயன் படுத்தி உள்ளனர் என்று தோன்றுகிறது


கோயில் யானைகளை தேர்ந்து எடுக்க செல்லும் பொழுது எந்த யானை வடகிழக்கு (குரு+கேது) நோக்கி தூங்குகிறது என்று பார்த்து தேர்ந்து எடுத்தார்கள்.


திருமணம் ஆகாத ஆண்கள் மாதம் ஒருமுறை வீட்டில் தென்கிழக்கில்(சுக்கிரன்) வெல்லம் /கரும்பு சாப்பிட்டு வந்தால் திருமணம் நடக்கும்.


இது போல் திசையையும் கிரக காரங்களை  வைத்தும் பரிகாரம் செய்யலாம்


நன்றி

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...