Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘♀️
#ஏனடா_இந்த_மானுடப்பிறவி
#வீணாய் கழியுதே இப்பிறவி
எதற்க்கு தோன்றினோம்
என்று அறியாமலே
வீணாய் பொருளுக்கு அலைந்து
வீணாய் வாய் மதம் பேசி
வீணாய் கர்வம் கொண்டு
வீணாய் பொய் களவு செய்து
வீணாக வாழ்ந்து வீணாய் போகிறாய்
#அனைத்து காரியங்களும்
வாழ்வியலுக்காக செய்தாய்
சொத்து சேர்த்தாய் பல தலைமுறைக்கு
ஆனால் நீ இறந்தபின்
உன் நினைவு எவ்வளவு காலம் இருக்கும்
உன் பேரன் வரை சொல்வார்களா
அதோடு முடிந்தது உன் சரித்திரம்
இதை உணராமல்
பணம்,புகழ்,இடம் என்று ஓடி ஓடி
உழைத்தே ஓய்கிறாய்
#உனக்காக என்று நீ என்ன சேர்த்து
வைத்துள்ளாய் ஒன்றுமே
இல்லை
ஆகையால் இப்பிறப்பின்
நோக்கம் அறிக
இப்பிறப்பின் நோக்கமே முக்தி
அடையத்தான்
#முக்தி அடைய வழி
#நல்தவத்தோடு_தர்மமும்
செய்க
வந்த வழி தெரியும்
#வாசி_வழியரிந்து
#ஊசி_வழிசென்று
#காசியிலே_முக்தி_பெறுக
SPARK WISDOM 💥
SPARK TRUST Goals " Enlightened world, Enriched world, Hunger Free world' 🌎

No comments:
Post a Comment