Tuesday, November 29, 2022

Tamil letrers secrets

 Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️ 


நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம்.
நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும்  என் பயன் ?
ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய்,
ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!.

நம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247. அதில் உயிர் மெய் எழுத்துக்கள் 
6 x 6 x 6 =216. அது தான் ஆறும் ஆறும் ஆறுமாய். அகத்தில் ஓர் எழுத்துமாய் என்றால் ஆயுத எழுத்து. நம் சூரிய குடும்பத்தில் மூன்று இணை சூரியன்களால் தான் சக்தி மையமாகி , நம் சூரிய குடும்பத்தின்  இயக்கம் நடக்கிறது. அதனை குறிக்கும் ஃ தான் ஆயுதம். அது அகத்தில் மனோ சகதியாக இருக்கும். அது போல ஏறு சீர் எழுத்துக்கள் என்றால் அ முதல் ஒள வரை சீராக கால அட்டவனைப்படியான எழுத்துக்களாகவும், 6 + 6 + 6 = 18 (மெய் ) உடலில் உள்ள உருப்புகளின் வடிவங்கள் வரிசைக் கிரமமாக, ராச உருப்புகள், துனை உருப்புகள், சுரப்பிகள் என கால கிரமப்படி உள்ள எழுத்தாகவும் உள்ள தமிழ் எழுத்துக்களை ஓத ஈசன் வந்து பேசும் என்கிறார். நூறு கோடி ஆகமங்கள், நூறு கோடி மந்திரங்கள் , நூறு கோடி நாட்கள் இருந்து ஓதினால் என்ன பயன் ? என்கிறார். தமிழில் உள்ள எழுத்துக்களே மந்திரம்தான். என்கிறார்.

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...