Wednesday, November 2, 2022

Guru secrets

 Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️ 



தொண்டு


எத்தனை பிறவி எடுத்தாலும்

எந்த பிறவியில்




தொண்டு செய்யும்

பாக்கியம் கிடைக்கிறதோ

அந்த பிறவியே

முடிந்த பிறவியாகிறது.

தொண்டு பாக்கி இருந்தால்

அதற்காகவே

பிறக்க வேண்டி வரும்.

அனைத்து பிறவிகளிலும்

மனிதப் பிறவியே

உயர்ந்த பிறவி என்றும்

பிறவியை

முடித்தற்குரிய

வாய்ப்பு பெற்ற தென்றும்

சொல்லக் காரணம்

மனிதப் பிறவி

ஆறாம் அறிவு நிலையில்

அமைவது.

ஆறறிவு வரை தான்

உருவ நிலை

எடுத்தற்குரிய தகுதி.

ஏழாவது அறிவு நிவை

எட்டும் போது

உருவம் தாண்டி

அருவம் அடையும்.

அருஉரு என்பது

அண்டத்தில்

ஊனக் கண்ணுக்குப்

புலப்படா தோற்றம்.

இதனால்

ஆறாவது அறிவைப் பெற்று

மனித உடம்பை எடுத்து

தான் பெற்ற அறிவை

மற்ற 

உடலெடுத்த எல்லா உயிர்களுக்கும்

புகட்டுதல் அவசியம்.

இந்த பணியை செய்யாது

இறப்படைந்தால்

இந்த தொண்டை

நிவர்த்தி செய்ய வேண்டி

மண்ணில் பிறந்து

பூர்த்தி செய்து விட்டு

மறையும் போதே

ஏழாம் அறிவிலான

தேவ கணத்தைச் 

சேர முடியும்.

ஏழை முடித்தவர்களே

எட்டும் நிலை

வெற்று மண்டலத்தைத் தாண்டி

மனோ மண்டலம் அடைதல்.

எனவே

மண்ணில்

மனித உடலோடு இருக்கும் போதே

இறை பற்றிய உணர்வும்

படைப்பு பற்றிய தெளிவும்

பிறப்பு இறப்பின் சூட்சமமும்

பிறக்காமல் இருக்க

செய்ய வேண்டிய தொண்டு

பற்றி எல்லாம் அறிய

பெற்றாக வேண்டும்.

அதற்காகத்தான்

குருவை பெற்றாக வேண்டும்.

குரு மூலம்

ஞானக்கல்வி கற்று

கர்ம நிலையை உணர்ந்து

தொண்டு மூலம்

தன்னை பரிசுத்தப்படுத்தி

ஆக வேண்டும்.

ஓதுதல் ஓதுவித்தல்

இது

ஒவ்வொரு இறையடியாரும்

கைக்கொள்ள வேண்டியக் கடமை.

உயிர் நேசமே

இறை நேசம்.

இதை நிரூபிக்க

தன்னை போல்

ஒவ்வொரு உயிரிடமும்

கருணையும் கரிசனமும் கொண்டு

அதனதன் மீட்பிற்கு

ஞான உண்மைகளை தெரிவித்து

உயிர் தத்துவ மீட்பிற்கு

உதவ வேண்டும்.

இது தன் கர்மாவில் இருந்து

மீளவும் உதவுவதால்

இந்த வாக்கை

நினைவில் வைத்து வாழ்தல்

சிறப்பு.

எவன்

தன் குரு மூலம் பெற்ற

ஞான அறிவைப்

பிற உயிர்களும்

பெறும் பொருட்டுப்

பணி செய்து

அவைகளை

ஞான வழியில் திருப்புகிறானோ

அவன்

கர்மாவை

நீக்கும் முயற்சியில் உள்ளான்

என

நிச்சயமாகக் கூறுகிறேன்.


SPARK TRUST 

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...