SPARK 💥 YOGA WISDOM
சிவ உறவு
....
கேள்வி
...
இந்த உலகில்
உறவும்
உறவு காட்டும் அன்பும்
கிடைக்கும் இன்பமும்
நிலையாகவே இருக்க கூடாதா...?
ஏன்
எதுவுமே
இந்த உலகில் எப்போதும்
நிலையாக இருப்பது இல்லை...?
...
பதில்
....
இந்த உலகில்
நிலையானது எது..?
நிலையில்லாதது எது..?
என உலகம் உணர மறந்ததால்
வந்த கேள்வி இது..
சுற்றும் பூமியும்
ஒளிரும் ஆதவனுமே
நிலை இல்லாததே..
என்றாவது ஒரு நாள்
இவை மறைய கூடியதே
மாறவும் கூடியதே..
நிலையில்லாத
சுற்றும் பூமியில்
நிலையில்லாமால் சுற்றுபவனுக்கு
நிலையானது ஏது...?
படைக்கப்பட்ட எதுவும்
நிலையானது அல்ல
அதை
படைத்தவனே நிலையானவன்.
நிலையானவனிடம்
நிலையானதை தேடாமால்
நிலையில்லாததில்
நிலையானதை தேடும் உலகம்...
அங்கு
நிலையானது கிடைப்பது ஏது..?
இங்கு உறவும் நிறந்தரம் இல்லை
ஆனால்
உறவுகளிடம்
நீ காட்டிய அன்பு
உன்னிடம்
நிலையாக நிற்கும்
நிலையானவனிடம் நிலைபுகும்போது.
அன்பு
உறவுகளிடம் அன்பை தேடுகிறாய்
தேடுவது எதுவும் நிலையானது அல்ல..
ஒருவன்
சம்பாதிக்கும் பணம்
தேடும் சொத்து
தேடும் பதவி
கிடைக்கும் புகழ்
எதுவும் நிலையானது அல்ல...
காரணம்
அந்த நிலையானது
அடுத்தவன் கையில் இருப்பதால்
மாயையின் பிடியில் இருப்பதால்...
கொடுக்கும் அன்பு
கொடுத்த இன்பம்
அந்த
அலை பதிவுகள் நிலையானது
அது
அவன் கையில் இருப்பதால்.
இதயத்தையும்
பிறந்த பிறப்பையும்
வாழும் வாழ்வையும்
பிறரிடம் ஒப்படைத்து விட்டு
பிறரிடமே
அன்பை
இன்பை
தேடும் உலகிற்கு
அங்கு
அது
நிலையாக கிடைக்க
உத்ரவாதமும் ஏது...
சரியாக இருக்கும் வரை
சரியாக இருக்கும் உறவு
சிவ உறவு அல்ல
சரியாக இருப்பவருக்கு
சரியாக இல்லாமால் போவது
அசூர உறவு
சரியாக இல்லாதவரிடம்
சரியாக இல்லாமால்
பகை காட்டி விட்டு செல்வது
கலிகால உறவு
சரியாக இல்லாதவரிடமும்
சரியாக இருக்கும் உறவு
சிவ உறவு
இந்த
உலகில் நிலையானது
பிறந்தவனுக்கு
அவனுக்கு அவனே
அவனே அவனுக்கு துணை
அவனே அவனுக்கு நண்பன்
அவனே அவனுக்கு சொந்தம்
அந்த
அவன்
உலகை
உறவை
உயிரை படைத்த இறைவனே
அன்பு சிவனே.
இந்த பூமியும் நிலையானது அல்ல
பிறந்த உடலும்
தேடிய அன்பும்
தேடிய உறவும்
சேர்ந்த கூட்டமும்
கட்டிய கோட்டையும்
நிலையானது அல்ல
நிலையானது எது..?
செய்த தர்மமும்
வாழ்ந்த வாழ்வின் பதிவும்
காட்டிய அன்பும்
கொடுத்த அன்பும்
பிறந்து
தன்னை உணர்ந்து
அதை
உலகிற்கு கொடுத்ததும்...
பிறந்த உயிரும்
அந்த
உயிரையும் படைத்த இறைவனுமே
நிலையானது..
வாங்கும் எதுவும் நிலையானது அல்ல
கொடுத்த எதுவும்
அது எங்கும்
நிலை மாறுவதும் இல்லை.
நிலையானவரே கொடுக்கிறார்
அவரே
உலகை படைக்கிறார்
படைக்கப்பட்ட பொருள்
அதை படைத்தவனிடம்
பக்குவமாக சேர்வதே
நிலையானது.
அதற்கு
அன்பை கொடுத்து
தர்மமாக வாழ்வதே
அதற்கு வழியானது.
கொடுப்பது
சுயம்பாக இருப்பது
என்றும்
நிலை ஆக நிற்கும்
புற உலகில்
தேடுவது
எதனிலும்
நிலை ஆனது ஏது மனமே...?
அன்பே சிவம்
நம
ஓம் நமசிவாய

No comments:
Post a Comment