Saturday, November 12, 2022

Why we have to learn Vasi yoga

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 


கஞ்சன்...


ஒரு கிராமத்தில் ஒருவன் பெரிய பணக்காரன். ஒரு சமயம் பெரிய பஞ்சம் வந்து மக்கள் பசியால் இறந்து கொண்டிருந்தனர். அப்போது மக்கள் அவனிடம் வந்து, "எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்! இவ்வளவு தானியங்கள் வைத்திருக்கிறாய்! மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில், தேக்கி வைக்காதே! பகிர்ந்து கொள்!" என்றனர். அவன் அதற்கு, “அதைப் பகிர்ந்து கொண்டால், நான் செத்து விடுவேன். மக்கள் சாகிறார்கள்; உண்மைதான்! ஆனால் நான் சாக விரும்பவில்லை. நீயும் தெரிந்து கொள். மக்கள் செத்தால் வேறு மக்கள் பிறந்து விடுவார்கள். நான் சேர்த்து வைத்துள்ள இந்தச் செல்வம் மீண்டும் எங்கிருந்து கிடைக்க முடியும்!" என்றான். மக்கள் திகைத்துப் போய் விட்டனர். இப்படி ஒரு பதில் வரும் என்று ஒருவரும் நினைக்கவில்லை.


ஆனால் அந்த மனிதனுக்கு, 'மற்றவர்கள் என்பது நிழலைப் போலப் பொய்த்தோற்றமே, பணமே ஆத்மாவைப் போன்ற உண்மை!'  அவனது வாழ்க்கைப் பாதையில் மக்கள் இருக்கிறார்கள்தான். அவனது மனத்தின் சூழலில் மக்களுக்கு எந்த வித இருப்புத் தன்மையும் கிடையாது. அவை நிழல்களே! வருகிறார் கள், போகிறார்கள், செல்வம் உண்மையானது!


பிறகு அவனது மனைவியும் நோய்வாய்ப்பட்டாள். ஊர் முழுவதும் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். நோய்கள் பரவின. மக்கள் அவனிடம், 'உன் மனைவியைக் காப்பாற்றவாவது வைத்தியனைக் கூப்பிடு!' என்றனர். அவனோ, "மனைவி வேறு தேடினால் கிடைத்துவிடும். ஆனால் செல்வம் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை!'' என்று மறுத்துவிட்டான். பணமோகம் பிடித்தவர்களின் குரல் (மொழி) நமக்குப் புரியாது. 


அவன், 'மனைவி வேறு கிடைப்பாள்!' என்றான். மனைவி இறந்து விட்டாள். பிறகு ஒரு நாள் அவனே மரணத் தருவாய்க்கு வந்துவிட்டான். நோய்கள் அவனையும் பீடித்துக் கொண்டன. மக்கள், “இப்போதாவது எங்களுக்கு உதவி செய்! இப்போது நீயே கடைசிக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்!" என்றனர்.


அவன், “செல்வம் போனபின் நான் உயிரோடு இருப்பதை விட நான் இறந்து போவது மேல். பணம் போன பின் நான் உயிர் பிழைப்பது மிகவும் துக்ககரமானது. பயங்கரமானது. கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, என்னால்! பணம் இன்றி நான் இருப்பதாவது? ஆம். நான் இல்லாமல் போவதைப் பற்றிய கற்பனை என்னால் செய்ய முடியும். ஆனால் செல்வம் இல்லாமல் நான் இருப்பதைப் பற்றிய கற்பனை கூட என்னால் செய்ய முடியவில்லை!'' என்றான்.


மோகாவேசம் கொண்டவர்கள் இத்தகைய தற்கூற்றிலேயே பேசுகிறார்கள். அவர்கள், 'இந்தப் பெண் கிடைக்கவில்லை யென்றால் நான் இறந்து விடுவேன்!' என்கிறார்கள். இந்தப் பெண் இன்றித் தான் உயிர் வாழ்வதைப் பற்றிய கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. ஆம்! தான் இல்லாமற் போவதைப் பற்றிய கற்பனை செய்ய முடியும்!


அதுவே மோகம். 'மந்திரி பதவி கிடைக்காவிட்டால் இறந்து விடுவேன்!' என்பவன், மந்திரி பதவியற்றுத் தான் இருப்பதை நினைக்கக் கூட முடிவதில்லை. தானே இல்லாமல் போவதைப் பற்றி நினைக்க முடிகிறது. மோகாவேசத்தின் மொழி வேகமான கூற்று இதுவே!


பிறகு, மக்கள் அந்தத் தனவானிடம், "நீ இறந்து விட்டால் இந்தப் பணம் கிடந்து விடுமே! இவ்வளவு நாள் சேர்த்து வைத் தாய்! நீ இறந்த பின் இது என்ன ஆகும்?” என்றனர். அவன் பதிலளித்தான். “நான் இந்தச் செல்வத்தை விட்டுவைப்பேன் என்று நினைக்கிறாயா? கூடவே எடுத்துச் செல்வேன்!" மக்கள் அதிசயித்தனர். “இதுவரை யாரும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றனர் என்று கேள்விப்பட்டதே யில்லை!” என்றனர். அவன் சிரித்தான். “இப்போது தெரிந்து கொள்ளுங்கள். நான் எடுத்துச் சென்ற பின் தெரியவரும், உங்களுக்கு!”


மோகவயப்பட்ட மனம் நினைவிழந்து விடுகிறது. காரண காரியச் சிந்தனையை இழந்து விடுகிறது. விவேகம் போய்விடுகிறது. “செல்வத்தை உடன் எடுத்துச் செல்வேன்!" என்கிறான். ஏனெனில் மோகாவேசம் கொண்டவன் விடமாட்டேன், பிராணனோடு இணைத்துக் கொள்வேன் என்கிறான், தத்தம் மோகத்தில்!


ஒரு இரவு உண்மையில் பிரயத்தனமும் செய்தான். மோக வயப்பட்டவர்கள் எந்த முயற்சியும் செய்வார்கள். அவனது நிஜ ஞாபகம் போய்விட்டது; விவேகம் போய்விட்டது; காலை ஒரு வேளை இருக்க மாட்டோமோ என்ற எண்ணத்தில் நடு இரவில் எழுந்தான். தனது எல்லா விலையுயர்ந்த வைரம் வைடூரியம் தங்கம் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டினான். அதை எடுத்துக் கொண்டு நதிக் கரைக்கு வந்தான். அந்த மூட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு நதியில் குதித்து விடலாம் என்று நினைத்தான். கடைசி முயற்சியாக, எடுத்துச் செல்லும் வழி!


ஆனால் நதி ஆழமானது. கரையில் குதித்தால் சவம் கரையோரமாகவே நின்றுவிடும். அந்தச் செல்வமும் கரையருகிலேயே நின்று விட்டால்!மற்றவர்களுக்கு போய்விடுமே!!


ஒரு படகோட்டியை எழுப்பினால் வேலை ஒழுங்காக ஆகும். படகோட்டிகளை எழுப்பினான் வேறுவழியின்றி! ஏனெனில் நதியின் மத்திக்குச் செல்ல வேண்டுமே!


படகோட்டிகளை எழுப்பி அவர்களிடம், "யார் எல்லோரை யும் விடக் குறைந்த கூலியில் அழைத்துப் போவீர்கள்!'' என்று கேட்டான்! அதிகக் குறைந்த கூலியில்! மனிதன் சாகப் போய்க் கொண்டிருக்கிறான். செல்வத்தை எடுத்துக் கொண்டு நீரில் மூழ்கப் போகிறவன் குறைந்த கூலிக்குப் பேரம் பேசுகிறான்.


குறைந்த கூலிக்கு ஒப்புக் கொண்டவனுடன் நதியில் இறங்கினான். நதியின் மத்தியில் வந்தாயிற்று. பிறகு அந்தப் படகோட்டியிடம், "சாகப் போகும் ஒருவனது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வாயா?” என்று கேட்டான்.


படகோட்டி, “என்ன பேச்சு இது! என்ன ஆசை?'' என்று பயத்தோடு கேட்டான்.


"நீ என்னிடமிருந்து கூலியாக இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளாமலிருந்தால் நிம்மதியாகச் சாவேன்!


சாகப் போகிறவனின் கடைசி ஆசை! சாகப் போகிறவனின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத அளவுக்கு வெட்கங்கெட்டவனாக இருப்பாயா'' என்று கேட்டான்.


படகோட்டி அந்த மனிதனின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய் தான்,


பாவம்! தனவான் அமைதியோடு நதியில் குதித்தான்,


நாம் அனைவரும் இப்படித்தான் குதிக்கிறோம், தத்தம் மோகத்தில் நிரம்பி.


மரணத்தில் மோகம் நினைவைச் சின்னாபின்னப் படுத்தி விடுகிறது. சிந்தனை சக்தி அழிந்து விடுகிறது.


"நினைவு அழிந்த இடத்தில், புத்தியும் அழிந்து போகிறது" 


முதலில் பழையன மறந்துவிடுகிறது. பிறகு நிகழ்வன மறந்து விடுகிறது; பின் எதிர்காலமும் மறந்து விடுகிறது. , புகை மூட்டமாகத் தெளிவின்றி உள்ளது. இன்னும் நடவாதது நிச்சயமற்றது. . நினைவு அல்லது புத்திசாலித்தனம் சிதறிவிடுவது மட்டுமல்ல. உருவமற்று இருக்கும் புத்திவரை, இந்தக் கலவரம் சென்றடைந்து விடுகிறது 


ஆழத்தில் மறைந்துள்ள அந்தப் பிரக்ஞையும் கலங்க ஆரம்பித்து விடுகிறது. ஏனெனில் நினைவுகளின் ஆதாரம் விழும்போது அதன் மேல் நிலைப்படாது உள்ள சிகரம் ஆட்டம் காணுகிறது. அதுவே வீழ்ச்சி. புத்தி நாசமடையும்போது அனைத்தும் கடைசியில் அழிகின்றன.


அவன் அனைத்தையும் இழத்தவன் ஆகிறான், அங்கே மனிதன் அடியோடு இழந்தவனாகிவிடுகிறான்


பணத்தை இழந்து அல்ல. தன்னையே இழந்து! பிறகு அவனிடம் எதுவும் மிகுதியில்லை. அவன் அடியோடு ஒன்றுமற்றவனாக ஆகிவிடுகிறான்.


இதுவே தீனம், தரித்திரம். ஆத்மார்த்த மான அர்த்தங்களில் கூறுவதானால், இதுவே ஆத்யாத்மிக தரித்திரம் 


ஆனால் நாம் லௌகிக தரித்திரத்தைக் கண்டுதான் நடுங்குகிறோம். ஆத்மிக தரித்திரத்தைக் கண்டு சிறிதும் பயப்படுவதில்லை. பணம் அழிந்துவிடக் கூடாது என்றுதான் மிகவும் பயப்படுகி றோம். ஆத்மா அழிந்தால், நாம் பயப்படுவதில்லை. ஆடம்பர ஆடை தொலையக் கூடாது, சட்டை தொலைந்து விடக்கூடாது என்று பயப்படுகிறோம்.


*பொருள்களைக் காப்பாற்றிக் கொள்ளுகிறோம்*;


*தன்னை இழந்து விடுகிறோம்*.


ரோகிகளும், போகி களும் பணம் இல்லாமல் வாழ முடியாது என்கிறார்கள்.


 தசகாரிய வாசி யோகிகள் தாங்கள் கற்ற சகா கல்வி ஞானத்தால் உணவில்லாமல், பணம் இல்லாமல் மற்றும் உடலே இல்லாமலும்  ஆனந்தமாக வாழ முடியும் என்று முதலில் தியரிட்டி களாக அறிந்து கொள்கிறார்கள். அந்த அறிவை அறிந்து கொண்டு மரணமில்லா பெரு வாழ்வை தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மூலம் அடைந்து விடுகிறார்கள்.


எனவே "கருவாழ்வு தவிர்த்து மரணமில்லா பெருவாழ்வு பெற அனைத்து சித்தர்களும் ஞானிகளும் கடைபிடித்த தசகாரியவாசி  யோகமே மிகச் சிறந்த வழி. வேறு வழி இல்லை.



No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...