Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
சிவ சிறப்பு
....
கேள்வி
...
சிவத்திடம் மட்டும்
ஏன் இந்த ஈர்ப்பு...?
அப்படி என்ன உள்ளது
சிவத்திடம் சிறப்பு...?
...
ஓம் நமசிவாய
...
காலம்
காலமே சிவம்..
சிவத்தின் சிறப்பே காலம்.
...
இன்று
நீ பிறந்து உள்ளாய்..
காலத்தே
வாழ்ந்தும் வருகிறாய்..
இன்றைய காலத்திற்கு
உன்னை தெரிகிறது..
உனக்கும்
இன்றைய காலம்
புரிந்தும் இருக்கிறது..
...
காலத்தே
ஒருநாள்
நீ
மறைந்தும் விடுவாய்...
ஆனால்
காலம் மறைவது இல்லை..
...
இங்குதான்
காலத்தின் ஆட்டம்
சிவத்தின் ஆட்டம்
ஆரம்பம் ஆகிறது..
...
அது என்ன ஆட்டம்..
...
நீ
எத்தனை பிறவி எடுத்தாலும்
காலத்திற்கு
உன்னை தெரியும்..
காலத்திற்கு
என்னவெல்லாம் தெரியுமோ
பிறந்த
உனக்கு தெரியாது..
...
இதில்
என்ன சிறப்பு இருக்கிறது..?
...
சிவ சிறப்பு இருக்கிறது
...
ஒரு பிறவியில்
நீ
சிவத்திடம்
ஜீவமாக காட்டிய அன்பு
அதை
அடுத்த பிறவியில்
பிறந்த நீ மறந்தாலும்
சிவம் மறப்பதில்லை...
...
பிறந்த உன்னைத்தேடி
சிவமே வரும்
நீ
சிவத்தை
அறியாமலே
சிவ ஞானம் உணராமலே
வாழ்ந்தாலும்
சிவமே
உன் உள் வந்து
பாடம் நடத்தும்
வழியும் நடத்தும்...
...
சிவத்திற்கு
ஜீவமாக அன்பை கொடுத்த
சிவ பக்தன்
அவன்
மறைந்து போனாலும்
அவன்
அடுத்த தலைமுறையை
எத்தனை தலைமுறை ஆயினும்
நீ
சிவத்திடம் கொடுத்த அன்பை
உன்
குழந்தைகளுக்கு
அன்பாக கொடுக்கும்..
...
மனிதன்
சக உயிர்களுக்கும்
மனிதனிடம் காட்டும் அன்பு
அந்த ஆயுளுக்கு மட்டுமே
ஆனால்
அந்த அன்பை
திருப்பி செலுத்த
அதே,மனிதர்கள்
அதே
சக உயிர்கள்
திரும்ப வருவது இல்லை..
அதற்கு
அந்த
அன்புக்கும் ஈடாக
சிவம்
அன்பை தேடி வந்து கொடுக்கும்
நீ
எத்தனை முறை பிறந்தாலும்..
...
பிறந்த மனிதன்
சேகரிக்க வேண்டிய
சிவ செல்வம்
அன்பே..
...
அதை
அந்த அன்பை
உனக்கு திரும்ப தர
உன்
இதய துடிப்பிலே
அமர்ந்து
காக்கும் காலம் காலமாக
காலமேயான சிவம்..
....
பிறந்தவனை
காலம் கவனிக்கிறது...
காலமே வழி நடத்துகிறது..
காலத்தே
தர்மத்தை
அன்பை
சிவ பக்தியை
நீ
விட்டுச்சென்றால்
காலம் காலமாக
கழுத்திலே
உன்னை சுமக்கும் சிவம்.
...
ஒருவன்
எந்த தவமும் செய்யாமலே
சிவ விழிப்பு
முழுமையாக அறியாமலே வாழ்ந்தும்
சிவன்
அவனை நெருங்குகிறது என்றால்
அது
அவனின்
சென்ற பிறவிகளின்
பழைய சிவ அன்பே...
....
இந்த உலகம்
உன் அன்புக்கு
பதில் தராமலேகூட போகட்டும்..
உன் தர்மத்தை
இந்த உலகம்
அறியாமலே கூட இருக்கட்டும்..
உன்
இந்த ஜென்ம சிவ பக்திக்கு
பலன் கிடைக்காமலேகூட போகட்டும்... ஒரு கவலைபடவும் தேவைஇல்லை.
எந்த இழப்பும் இல்லை..
நீ
காட்டிய அன்பு
உன் தர்மயோகம்
உன் பக்திக்கு
சிவமே
கீழ் இறங்கி வந்து
அடுத்த உன் பிறவியையும் காக்கும்
உன்
தலைமுறையையும் காக்கும்...
உனக்கும்
உன் தலைமுறைக்கும்
பிறவி பிணியை
சர்வ நாசம் செய்து
முக்தி
கொடுக்கும் வரை..
...
உயிரில்
உயிராக வசிக்கும்
சிவ தன்மையை உணர்ந்து
சிவத்தை நேசித்து விடு...
நீ
இருந்தாலும்
இறந்தாலும்
மீண்டும்
பிறந்தாலும்
கவலை உனக்கு ஏது..?
சிவனே
ஜீவமாக
உனை காக்கும்
காலமாக
காலம் காலமாக
காலத்தோடு
நீ
ஒன்றாக ஒளிரும் வரை.
சிவ
அன்பின் ஆழம்
அடி முடி காண இயலா ரகசியம்
...
அன்பே சிவம்
இதுவே
சிவத்தின்
சிவ சிறப்பு
..
சிவாய நம ஓம் சிவாய நமக
சிவாய நம ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நம
ஓம் நமசிவாய
SPARK 💥 WISDOM
SPARK 💥 TRUST " Together we can make Enligtend, Enriched and Hunger Free world 🌎

No comments:
Post a Comment