Sunday, November 20, 2022

பாவ புண்ணியம்

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 


கர்மா பாவம் புண்ணியம் என்றால் என்ன நம் ஆத்ம சுகத்திற்காக பிற ஆத்ம ஜீவன்களை துன்புறுத்துவது பாவங்கள் ஆகும் .

பிற ஆத்ம ஜீவன்கள் இன்புற நமது ஆத்மா செயல்படும் செயல் புண்ணியம் என்பது ஆகும் .

இந்த பாவ புண்ணியம் இரண்டும் இருக்கும் ஒரு இடம் கர்மா ஆகும் . கர்மா  நமது உடலில் சேர்வது இல்லை அவை நமது ஆத்மாவின் சேர்கிறது . நாம் எவ்வளவு சொத்துக்களும் பணங்களும் சேர்த்தாலும் அவை அனைத்தும் இந்த உடலை சேர்ந்தது. நம் ஆத்மா உடலை விட்டு பிரிந்த உடன் அந்த சொத்துக்கள் பணம் அனைத்தும் உடல் எங்கு உள்ளதோ அங்கே தான் இருக்கும் .கர்மா

  நம்மை படைத்த பர பிரம்மத்திடம் ஆத்மாவை அழைத்து செல்லும் அஸ்திரம் ஆகும்.  இந்த கர்மா தான் நாம் அடுத்து எந்த ஜீவனின் உடலுக்கு செல்ல வேண்டும் என்று பரமாத்மாவுக்கு குறிப்பு தருகிறது. மீண்டும் பரமாத்மா நாம் செய்த அந்த கர்மாவை அஸ்திரமாக கொண்டு அதற்கு ஏற்ப ஜீவனில் நமது ஆத்மாவை கொண்டு சேர்க்கிறது

 மீண்டும் அதே கர்மா நமது ஜீவ ஜோதி எரிய நெய்யாக மாரி கர்மாக்கள் அனைத்தும் அழிந்து கொண்டு இருக்கும் அந்த வாழ்க்கையில் நமது மீண்டும் செய்த பாவ புண்ணிய கர்மாக்கள் தனியாக சேமிக்க பட்டு கொண்டிருக்கும் .நமது முந்திய கர்மா எரிபொருள் தீர்ந்த உடன் மீண்டும் இறப்பு ஏற்பட்டு

 இந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய அடங்கிய கர்மா அஸ்திரமாக மாறி நம்மை மீண்டும் பர பிரம்மத்தோடு சேர்கிறது இது ஆத்மாவின் சுழற்சி ஆகும். எந்த ஒரு ஜென்மத்தில் பாவம் புண்ணியம் என்ற கர்மா பூஜ்யமாக மாறுகிறதோ அந்த ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை .வாழும் காலத்தில் அதிகமான புண்ணியங்களை சேர்த்து அடுத்த பிறப்பில் நல்ல ஜீவனாக பிறப்பது உங்கள் கையில் தான் உள்ளது

 இறைவன் அதை செயல்படுத்தும் ஒரு கருவி  தான். பாவ புண்ணியங்களை பூஜ்ஜியமாக மாற்றவே மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் .ஆனால் அவ்வாறு நாம் செய்யாமல் மீண்டும் மீண்டும் கர்மாவை சேர்த்துக்கொண்டு பிறப்பும் இறப்பமாக சுழன்று கொண்டே இருக்கின்றோம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...