Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘♀️
Greetings to all from SPARK YOGA WISDOM 🧘♂️
சோதனைகள் ஏன் வருகிறது:
இந்த பிரபஞ்சம் என்பது அணுக்களால் நிறைந்தவை. அணுக்களும் அணுக்களும் மோதிக் கொண்டுதான் இருக்கும். ஒரு மனிதன் என்பவன் அணுக்களின் வெளிப்பாடு.
ஒரு வலிமை மிகுந்த அணுவும் வலிமை குன்றிய அணுவும்
மோதுகிறது. மோதும் பொழுது வலிமை குன்றிய அணு வெப்பமாக வெளிப்படுகிறது. அது காற்றில் மிதப்பதில்லை. காற்றிருக்கும் மேலாக சென்று சுழல செய்கிறது. இப்படி சுழன்று கொண்டே இருந்து பிறகு மழை பொழியும் அணுக்களின் கூட்டத்திற்குள் சென்று விடுகிறது. இறுதியாக இந்த அணு என்பது கரைய தொடங்கி மழையாக பொழிகிறது இப்படித்தான் மழையும் பெய்கிறது.
இதுபோல மனித வாழ்க்கையில் ஒரு மனிதன் வாழும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் இன்னொரு மனிதனால் பல சண்டைகளும் சச்சரவுகளும் வரும். இது எல்லாமே இந்த மனிதனின் அணுக்களின் கூட்டத்தை வலிமைப்படுத்துவதற்காக இன்னொரு மனிதன் மூலம் நிகழ்கின்ற அணுக்களின் மோதல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வலிமை குன்றிய மனிதன் ஒரு நேரத்தில் சிந்திக்க ஆரம்பிப்பான். தன்னுடைய திறமை வெளிப்படும். தன்னுடைய இயல்பு வெளிப்படும். அப்பொழுது அவனுக்குள் இருக்கின்ற அந்த அணுக்களின் கூட்டம் வலிமை அடையும். இந்த மனிதன் தன்னுடைய வாழ்க்கையை கடந்து, கடந்து இந்த மனிதப் பிறவியில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வதற்கான ஒரு உந்துதல் தான் இது.
ஒரு மனிதனுக்கு சோதனை வருகிறது என்றால் அணுவும் அணுவும் மோதுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இது தன்னுடைய வலிமையை உயர்த்துவதற்காக இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு செயல் என்று.
ஒரு புழுவினை பல எறும்புகள்,பூச்சிகள் கடிக்கும் பொழுது அந்த புழுவின் அணுக்கள் வலிமை அடைந்து புழு இறந்தும் விடுகிறது. அந்த புழு இறந்தாலும் அதனுடைய உணர்வுகள் வலிமை அடைந்ததால் அது மறுபடியும் அடுத்த நிலைக்கு எறும்பாக, விஷ பூச்சியாக தான் பிறக்கிறது. இது ஒரு செயல் நடக்கிறது.
என்னால் இப்படித்தான் பிரபஞ்சத்தோடு உண்மையான மூலத்தை உங்களுக்கு உணர்த்த இயலும். சோதனைகள் வந்தால் ஓடு, சாதிக்கத் தொடங்கு, போராடு என்று முட்டாள்தனமான கருத்துக்களை என்னால் திணிக்க இயலாது. இந்த உலகம் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக போராடு, போராடு என்றுதான் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். உண்மையான செயல் என்ன நடக்கிறது என்று நான் உங்களுக்கு மேலே விளக்கியுள்ளேன் புரிந்து கொள்ளுங்கள்.
எல்லாமே ஒரு அணுவின் செயல்.
___________________________________
SPARK TRUST 💥
Together we can make Enligtend, Enriched and Hunger free World 🌎
___________________________________

No comments:
Post a Comment