Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
🙏 பிராணமய கோசம்
உடலைச் சுற்றி வரும் 2வது (உறை)
கோசம் பிராணமய கோசம் என்பதாகும். இதன் செயலே
உள்மூச்சு, (பூரகம்)
வெளிமூச்சு, (ரேசகம்)
உள் தங்கும் மூச்சு, (கும்பகம்)
என மனிதனின் 12 அங்குல சுவாச ஓட்டத்தின் செயலாக இருக்கிறது.
இதன் மற்ற பிற செயல்களான
துண்டுபட்ட சுவாசம்,
ஊர்ந்து செல்லும் சுவாசம்,
செங்குத்தான சுவாசம்,
அதோமுக சுவாசம்,
கீழ் நோக்கி பாய்ந்து செல்லும் சுவாசம், மற்றும்
வெட்டுண்ட பிராணன் போன்றவைகள்
பிராணமய கோசத்தில் அடங்கியுள்ளன. கும்பக சித்தியை பெறுவதே பிராணமய கோசத்தை யோகத்தில் வெற்றி கண்ட நிலையாகும்.
நமது சுவாச நிலைகளின் முக்கிய ஆதாரமாக பிராணமய கோசம் செயல்படுகிறது. நமது எண்ணமும் மூச்சும் இயற்கையில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
"மனம் எங்குண்டு, வாயு அங்குண்டு"
என்ற தத்துவம் இங்கு பிரதிபலிக்கிறது. ஆகவே நமது தேகத்திலிருந்து மூச்சு மற்றும்
எண்ணத்தின் வழியாக ஒவ்வொரு வினாடியும்
விரயமாகிக் கொண்டிருக்கின்ற பிராண சக்தியைத் தடுத்து மீண்டும் தேகத்தினுள் செலுத்துவதே யோகத்தின் குறிக்கோளாகிறது.
பிராணன் தேகத்திலிருந்து வெளியேறும் செயலை சுவாசம் என கூறப்படுகிறது. சுவாசத்தில் உள்மூச்சு (பூரகம்) வெளிமூச்சு (ரேசகம்) உள்தங்கும் மூச்சு (கும்பகம்)
என பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கும்பகத்தை முடிந்த வரை நீடிக்க வைப்பதே யோகக் கலையாகும்.
மனிதனின் ஜட உடலை இயக்கத் தேவையான பிராண சக்தியின் ஆற்றல் அளிப்பது பிராணமய கோசத்தின் துணையில்லாமல் போனால் மனிதன் அடுத்த சில நிமிடங்களில் உயிரற்ற பிரேதமாகி போய் விடுவான். மனிதனின் சுவாச ஓட்டத்தின் நீளத்தை 12அங்குலத்தில் சித்தர்கள் குறிக்கிறார்கள். பிராணமய கோசத்தின் வெற்றியே சூட்சும தேகத்தை கைபற்றிக் கொள்ளும் முறையாகும்.
No comments:
Post a Comment