Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
🌺🍀🙏 சீவன் சிவனாதல் 🙏🍀🌺
( ஜீவ ஐக்கியம் )
🍀💥 அனைத்து செல்வங்களும் கொடுக்க கொடுக்க
குறைந்துவிடும்
🌺💥 ஆனால் ,அறிவு செல்வம் மட்டுமே !
கொடுக்க கொடுக்க உயர்ந்துக்கொண்டே போகும் ,
🍀☀️ அறிவு தனது இயல்பால் ,
பெறுபவரையும் உயர்த்தும் ,
கொடுப்பவரையும் உயர்த்தும் ,
☀️ ஆக
🔴☀️ தன்னிடம் இருக்கும் அறிவை கொடுக்க
தயங்காதீர்கள் ,
🌺🍀 ஆன்மீக தேடல் 🍀🌺
🔴☀️ ஆன்மீகத்தேடுதல் என்பதே !
ஞானத்தின் பாதையாகும் ,
அவரவரின் தேடுதலின் முயற்சியினாலேயே
பெறும் அனுபங்களை சேகரித்து ,
அதில் எது சரி ?
எது தவறு ?
என்பதை பிரித்தறியும் தன்மையின் மூலமே
ஞானம் என்பது உதயமாகிறது
அவர் பெற்ற அந்த அனுபவ அறிவின் மூலமே
அவர் ஆன்மீகப்பாதையில் கரைசேர முடியும் ,
🔵☀️ தான் செல்லுகின்ற பாதை
இலக்கை அடையும் பாதையா ?
அல்லது ஆரம்பித்த இடத்துக்கே வரும்
சுற்றுவட்ட பாதையா ? என்பது தேடுதல் முடிந்தப்பிறகே
தெரியவரும்
🌺☀️ விருச்சத்தின் மேலே ஏறவேண்டுமானால் ஏதாவது
ஒரு விழுதைப்பற்றி ஏறினால் மேலே சென்றுவிடலாம் ,
மாற்றி, மாற்றி வெவ்வேறு விழுதுகளை பற்றினால்
சுற்றி சுற்றித்தான் வரமுடியும் ,
⭐️☀️ சுற்றி சுற்றிப்பெறும் அனுபமானது கால விரயத்தை
ஏற்படுத்தி ஆன்மீகப்பயணத்தை நிறைவு பெறாமல்
ஆக்கிவிடும் ,
🌺🍀🙏 சிறந்த குரு 🙏🍀🌺
🧿☀️ ஆன்மீகப்பயணத்தில் காலவிரயத்தை நீக்கி ,
உரிய நேரத்தில் ,தேவையான விளக்கத்தை
கொடுத்து மாணவனை வழி நடத்தும் சிறந்த
வழிக்காட்டி ஆவார் ,
🌺☀️ குருவென்பவர் மாணவனுக்கு எதையும் எடுத்து
கொடுத்துவிடவும் முடியாது ,
தொட்டுக்காட்டி உணர்த்திவிடவும் முடியாது ,
🌺☀️ அவர் சிறந்த வழிக்காட்டி மட்டுமே ,
🍀☀️ மாணவனின் சுயசிந்தனை , ஆர்வம் , தேடுதல் ,
என்பதே அவனை முன்னடத்தி செல்லும் ,
🌺🍀🙏 குருவின் தன்மை 🙏🍀🌺
⭐️☀️ மாதா , பிதா , குரு , தெய்வம் , என்பது
வழிமொழியாகும் ,
🌺☀️ மாதா , என்பவள் குழந்தையின் உணர்வோடு
ஒத்து இருப்பதால்
குழந்தை தன் தாயினை உணர்வால் அறியும் ,
🍀☀️ தாயானவள் தன் குழந்தைக்கு இவர் தான் உன்
தந்தை என்பதை சுட்டிக்காட்டி உணர்த்துவாள் ,
🔴☀️ அந்த தந்தையானவர் குழந்தையின் நலன் கருதி
அறிவை புகுத்த இவரே உன் குரு என்பதை
சுட்டிக்காட்டி உணர்த்துவார்
.
🔥☀️ அந்த குருவானவர் அறிவை புகட்டி இறைவனை
அறியும் ஞான ஒளியை ஏற்றி வைப்பார் ,
🌺☀️ இப்படியே தாய் தந்தையை காட்ட ,
தந்தை குருவை காட்ட ,
குரு இறைவனை காட்டுகிறார்.
🌺🍀🙏 சிவனின் அருளே ! குரு 🙏🍀🌺
🍀💥 தான் பெற்ற அனுபவம் அதனால் பெற்ற அறிவு ,
சிந்தனையால் உயர்வடைந்த ஞானம் ,
அனைத்தையும் தன்னுள்ளே தேக்கி
வைத்துக்கொள்ளாமல் ,
அனைத்தையும் , அனைவருக்கும் ,பாகுபாடில்லாமல்
வாரி வழங்கி ஞான ஒளியை ஏற்றி வைக்கக்கூடியவரே !
சிறந்த குருவானவர் ஆவார் ,
அந்த குருவே சிவனின் அருள் மயமானவர் ,
🍀🌺 பிரபஞ்சம் 🍀🌺
🌺🍀பிரபஞ்சத்தின் இயல்புநிலையானது
💥 அருள்மயமானது , ( நற்கருணை )
💥 அறிவுமயமானது , விசாலமானது )
💥 ஒளிமயமானது , ( மறைத்தல் இல்லாதது )
☀️💥 இந்த பிரபஞ்சமே நமது தாய் வீடு ,
🍀☀️ நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே
சென்றடைவதுதான் நம்முடைய இலக்கு ,
பிரபஞ்சத்தின் ஒத்த தன்மையோடு ஜீவனானது
ஒத்து பயணிக்குமேயானால் அந்த சீவனே
ஜீவ ஐக்கியம் பெறும்
~~~🍀🌺☀️☀️🌺🍀~~~
No comments:
Post a Comment